கார்கில் போர் நினைவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்கில் போர் நினைவகம், பின்னணியில் போரில் இறந்த வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் அவர்களுக்கான நினைவுச்சின்னம்.
டிராஸின் கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பம்

கார்கில் போர் நினைவகம் (Kargil War Memorial) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 1999 ஆம் ஆண்டில் கார்கில் என்னுமிடத்தில் நடைபெற்ற போரை நினைவுகூரும் வகையில் டிராஸ் நகரில் இந்திய ராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு போர் நினைவுச்சின்னமாகும். [1] இந்த நினைவுச்சின்னம் ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை 1 டி,யில்[2] நகர மையத்திலிருந்து புலிமலை வழியாக சுமார் 5 அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

1998-1999 குளிர் காலத்தின்போது, பாகிஸ்தானிய படையானது எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் (LoC) தாண்டி வந்ததோடு, தேசிய நெடுஞ்சாலையையும் லடாக்கையும் இணைக்கும் பாதையிலும், கார்கிலுக்கும் ஸ்ரீநருக்கும் இடையேயுள்ள பாதையிலும் இடையே அதிகமான இடங்களைக் கைப்பற்றியது. அப்போது இந்தியப் படையானது மே 1999இல் விஜய் நடவடிக்கை (வெற்றி) என்ற திட்டத்தை முன்வைத்து ஆக்கிரமிப்பு செய்த இடங்களைத் திரும்பப் பெற, மோசமான மலைச் சூழலில் கடுமையான போரில் ஈடுபட்டது. ஒவ்வொரு ஆண்டும் சூலை 26ஆம் நாள் கார்கில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் during which the இந்தியப் பிரதமர் புதுதில்லியில் அமைந்துள்ள இந்தியாவின் வாயிலில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்..[2]

2000 ஆம் ஆண்டில் இந்திய துருப்புக்களைக் கௌரவிப்பதற்காக இந்த இடத்தில் ஒரு தற்காலிக நினைவுச்சின்னம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதன் தற்போதைய வடிவத்தில் உள்ள நினைவுச்சின்னம் நவம்பர் 2014 இல் இந்திய ராணுவத்தால் கட்டப்பட்டது.

வடிவமைப்பு[தொகு]

நினைவுச்சின்னத்தின் மைய அம்சமாக விஜய் நடவடிக்கையின்போது தம் இன்னுயிரை ஈந்த வீரர்களின் பெயர்களுடன் பொறிக்கப்பட்ட பித்தளை தகடு தாங்கிய இளஞ்சிவப்பு மணற்கல் சுவர் ஆகும். இது டோலோலிங் ஹைட்ஸ், டைகர் ஹில் மற்றும் பாயிண்ட் 4875 (பாத்ரா டாப்) ஆகிய இடங்களிலிருந்து காணும் வகையில் அமைந்துள்ளது. மோதலின்போது சண்டை நடைபெற்ற இடம் அதுவே ஆகும்.[3]

இந்த நினைவுச்சின்னத்தில் கேப்டன் மனோஜ் பாண்டே காட்சியகம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதானது போரின் போது மேற்கொண்ட தலைமைத்துவத்திற்காக ஒரு இளம் அலுவலருக்கு அவருடைய மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டதை இது நினைவுகூர்கிறது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து, அங்கு பல உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 26 ஜூலை 2012 ஆம் நாளன்று, இந்தியக் கொடி அறக்கட்டளை அமைப்பு 11.4 மீ நீளமும் 7.6 மீ அகலமும் (37.5 அடி நீளமும் 25 அடி அகலமும்) கொண்ட 15 கிலோ எடை கொண்ட கொடியை 30 மீ (100 அடி) உயரத்தைக் கொண்ட கொடிக்கம்பத்துடன் அன்பளிப்பாக வழங்கியது. கார்கில் போர் நினைவகம் எனப்படுகின்ற டிராஸ் போர் நினைவகம் தற்போது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுவதோடு, மேற்கு லடாக்கில் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகவும் உள்ளது. 2016 ஆம் ஆண்டில், இங்கு சுமார் 1,25,000 பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

கார்கில் போர் நினைவகம், டிராஸில் பீரங்கிகள்

செல்லும் வழி[தொகு]

காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள இந்த நினைவகத்தை மிகவும் எளிதாக சாலை வழியாக சென்று சேரலாம். ஜூன் முதல் அக்டோபர் வரையிலும் நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருக்கும். இருந்தபோதிலும் நினைவகத்திற்கு கார்கில் மூலமாக ஆண்டு முழுவதும் செல்ல முடியும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதனைப் பார்வையிடலாம். [4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]