சிங்கோ லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கோ லா கணவாய்
Shingo La Lake Darcha Road Lahaul Oct22 A7C 03546.jpg
சிங்கோ லா கணவாய்
ஏற்றம்5,091 மீட்டர்கள் (16,703 ft)
அமைவிடம்லடாக், இந்தியா
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்{{WikidataCoord}} – missing coordinate data
Lua error in Module:Location_map at line 408: Malformed coordinates value.
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).

சிங்கோ லா கணவாய் (Shingo-La) (also known as Shinku La)[1] (also known as Shinku La) இதனை சிங்கு லா கணவாய் என்றும் அழைப்பர். சிங்கோ லா மலைக்கணவாய், இந்தியாவின் லடாக்-இமாச்சலப் பிரதேசம் எல்லையில், இமயமலையில் 5091 மீட்டர் (16,615 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

சிங்கோ லா கணவாய்க்கு 20 மீட்டருக்கு கீழ் பகுதியில் ஒரு ஏரி/குளம் அமைந்துள்ளது. சிங்கோ லா கணவாய் வழியாக கால்நடையாக லடாக்கில் உள்ள சன்ஸ்கார் மலைப்பகுதி மற்றும் லாகௌல் & ஸ்பிதியை அடையலாம்.[2]இப்பாதையை உள்ளூர் மக்களும், மலையேறிகளும் பயன்படுத்துகின்றனர். சிங்கோ லா கணவாய் 5000 மீட்டர் நீளம் கொண்டது. சிங்கோ லா பகுதியில், கோடைக் காலம் தவிர ஆண்டு முழுவதும் பனிப்பொழிவு இருக்கும்

இக்கணவாய் சன்ஸ்காரில் உள்ள லுக்நாக் சமவெளியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இதன் அருகில் லாகௌல் & ஸ்பிதி மாவட்ட்தின் சிக்கா கிராமமும்; சன்ஸ்கார் பகுதியில் கார்ஜியாக் கிராமமும் உள்ளது. சிங்கோ லா கணவாயிலிருந்து இவ்விரண்டு கிராமங்களுக்கு மலையேற்றம் மூலமாக இரண்டு நாளில் அடையலாம். சிங்கோ லா கணவாய்க்கு மலையேற்றம் மூலம் செல்வதற்கான அடிவார முகாம்கள் தார்ச்சா (Darcha) மற்றும் பதும் (Padum) கிராமங்களில் உள்ளது.

சிங்கு லா சுரங்கச் சாலை[தொகு]

சிங்கு லா அல்லது சிங்கோ லா கண்வாயில் அமைந்த சிங்கு லா சுரங்கப் பாதை இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலைப்பாதை ஆகும். இது 5,091 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2016ல் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு சிங்கு லா கணவாய்க்கு ஒரு சாலையை அமைத்தது. ஆனால் குளிர்காலத்தில் சாலையை அணுக முடியவில்லை. மேலும் பெரிய சக்கர வாகனங்கள் செல்ல இயலவில்லை. எனவே இதைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டில், கணவாயில் 13.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டது. சுரங்கப்பாதை அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அடல் சுரங்கச்சாலை மற்றும் சிங்கு லா சுரங்கப்பாதை 2025ல் நிறைவடைந்தவுடன், நிம்மு - படும் - தர்ச்சா சாலை ஆண்டு முழுவதும் அணுகப்படும்.

இந்த சுரங்கப்பாதை சன்ஸ்கார் பள்ளத்தாக்கு பொருளாதாரத்தை உயர்த்த உதவும். இச்சுரங்கப் பாதை இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் இடையே பயண நேரத்தை குறைக்கிறது.

தற்போது லே-மணாலி நெடுஞ்சாலையில் 101 கிலோ மீட்டர் பயணம் செய்து தர்ச்சா சாலையில் சென்று பின்னர் லடாக்கின் சன்ஸ்கார் பகுதிக்குள் நுழைய வேண்டும். குளிர்காலத்தில் இப்பகுதி பெறும் 15-20 அடி உயரப் பனிப்பொழிவு மிகவும் கடினமான தடையாகும். எனவே குளிர்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து சாலைகளும் மூடப்படும். சிங்கு லா சுரங்கப்பாதை திறக்கப்பட்டால் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து லடாக்கின் சன்ஸ்கார் பள்ளத்தாக்கை 365 நாட்களுக்கும் அணுகக்கூடியதாக மாறும்.

சிங்கு லா சுரங்கப் பாதைத் திட்டம்[தொகு]

4.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சின்குன்லா சுரங்கப் பாதை வருகிற 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க ரூபாய் 1,681.51 கோடி இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் லடாக்கின் மிகவும் பின்தங்கிய பகுதியான சன்ஸ்கார் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பயன்பெறுபவர்.[3][4][5][6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிங்கோ லா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Darcha – Padum (Shingo La) Trek". aquaterra.in. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Zanskar to Ladakh Rout map". www.google.com. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. Work on tunnel on, Shinku La Pass to be accessible in winter too
  4. சிங்குலா சுரங்கப் பாதை
  5. லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
  6. BRO to construct world's highest tunnel at Shinku La Pass to connect Himachal to Ladakh
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கோ_லா&oldid=3662394" இருந்து மீள்விக்கப்பட்டது