தவுலத் பெக் ஓல்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தவுலத் பெக் ஓல்டி (DBO)
military base
Country இந்தியா
மாநிலம்ஜம்மு-காஷ்மீர்
மாவட்டம்Leh
ஏற்றம்5,100
Languages
 • OfficialUrdu
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

தவுலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடைப்பட்ட மலைப்பிரதேசமான லடாக் எனும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கிழக்கே திபெத், தெற்கே லாகால், மேற்கே காஷ்மீர் பள்ளத்தாக்கு, வடக்கில் காரகோரம் மலையும் அமைந்துள்ளது. இதன் அருகில் சுரு என்ற பள்ளத்தாக்கும் அமைந்துள்ளது. சீன எல்லையில் 17 கிமீ தூரத்தில் உள்ளது. இது உலகிலேயே உயரமான விமான ஓடுதளம் ஆகும்

வரலாறு[தொகு]

இந்திய-சீன எல்லைப் பகுதியான இவ்விடத்திற்கு 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த யார்கண்டி (Yarkandi) பிரபுவின் நினைவாக இப்பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இந்த ஓடுதளமானது 2008ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

மேம்பட்ட விமான இறங்குதளம்[தொகு]

தவுலத் பெக் ஓல்டி மேம்பட்ட விமான இறங்குதளம்
Flag of India.svg
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை தரைப்படை
இயக்குனர் இந்திய விமானப்படை
அமைவிடம் லடாக், இந்தியா

இது கடல் மட்டத்திலிருந்து 16,614 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதுவரை இந்திய ராணுவத்தின் உயர் தரமான ஹெலிக்காப்டர்களும், ஆன்டனோவன்-32 வகையான உலகுரக விமானங்களும் குறைந்த எடை ராணுவத்தளவாடங்களை மட்டுமே எடுத்துச்சென்று வந்தன. ஆனால் 20.08.2013 செவ்வாய் கிழமை அன்று இந்திய ராணுவ விமானமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை குரூப் கேப்டன் தெஜ்பிர் சிங், மற்றும் சிப்பந்திகளும் இவ்விமான ஓடுதளத்தில் இறக்கினார்கள்.[1][2] இந்திய விமானப்படையானது(IAF) தனது 50 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகளில் இது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால் இந்திய ராணுவத்தின் கமாண்டோ படைகளை துரிதமாக அளைத்துவர உதவும் என நிருபித்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுலத்_பெக்_ஓல்டி&oldid=2788734" இருந்து மீள்விக்கப்பட்டது