பாங்காங் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாங்காங் ஏரி
Pangong Tso lake.jpg
பாங்காங் ஏரி
அமைவிடம் லாடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா; ருட்டோக் கவுண்டி, திபெத், சீனா
ஆள்கூறுகள் 33°43′04.59″N 78°53′48.48″E / 33.7179417°N 78.8968000°E / 33.7179417; 78.8968000ஆள்கூற்று: 33°43′04.59″N 78°53′48.48″E / 33.7179417°N 78.8968000°E / 33.7179417; 78.8968000
வகை சோடா ஏரி
வடிநில நாடுகள் சீனா, இந்தியா
அதிகபட்ச நீளம் 134 km (83 mi)
அதிகபட்ச அகலம் 5 km (3.1 mi)
மேற்பரப்பு approx. 700 km2 (270 சது மை)
அதிகபட்ச ஆழம் 100 metres (330 ft)
கடல்மட்டத்திலிருந்து மேற்பரப்பின் உயரம் 4,250 metres (13,940 ft)
Frozen குளிர்காலத்தில்

பாங்காங் ஏரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாங்காங் ட்சோ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 134 கிலோமீட்டர் நீளம், 5 கிலோமீட்டர் அகலம் என்ற அளவில் பரவியுள்ளது.

இந்தியாவில் பாதியும், திபெத்தில் மீதியுமாக 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரியின் பாதிக்கு மேற்பட்ட பகுதி திபெத் தேசத்துக்குள் பரவியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் அமைந்துள்ளது. இதன் நடுவே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு செல்கிறது.

பாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், புலம்பெயர் பறவைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக பாங்காங் ஏரிக்கு வந்து செல்கின்றன. பறவைகளும், விலங்குகளும், பார் போன்ற தலையுடைய வாத்து, பிராமினி வாத்துகள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி போன்ற பறவையினங்களும், மார்மோத், கியாங்க் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாங்காங் ஏரியில் காணப்படுகின்றன. பாங்காங் ஏரியின் தண்ணீரில் உப்பு மிகுந்து காணப்படுவதால் நுண்ணுயிரிகளும், தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன. எனினும், இந்த ஏரியை சுற்றிலுமுள்ள சதுப்பு நிலத்தில் சிலவகைப் பல்லாண்டு தாவரங்களும், புதர்களும் காணப்படுகின்றன.

இந்தியப்பகுதியிலுள்ள பாங்காங் ஏரியின் தோற்றம்
உறைந்த நிலையில் இந்தியப்பகுதியிலுள்ள பாங்காங் ஏரி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்காங்_ஏரி&oldid=2228971" இருந்து மீள்விக்கப்பட்டது