நம்கியால் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லடாக்கின் நம்கியால் வம்சம்
1460 (1460)–1842 (1842)
நம்கியால் பேரரசு உச்சநிலயில் இருந்தபோது அதன் வரைபடம்
நம்கியால் பேரரசு உச்சநிலயில் இருந்தபோது அதன் வரைபடம்
தலைநகரம்லே
பேசப்படும் மொழிகள்லடாக்கிய மொழி, திபெத்திய மொழி
சமயம்
திபெத்திய பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
1460 (1460)
• முடிவு
1842 (1842)
முந்தையது
பின்னையது
மர்யூல் வம்சம்
சீக்கியப் பேரரசு
ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
தற்போதைய பகுதிகள்லடாக், இந்தியா
திபெத்
பல்திஸ்தான்
நேபாளம்

நம்கியால் வம்சம் (Namgyal dynasty), லே நகரத்தை தலைமையிடாகக் கொண்டு லடாக் மற்றும் அதனை சுற்றிய பிரதேசங்களை 1460 முதல் 1842 முடிய ஆண்டது.[1]இதே காலப்பகுதியில் சோக்கியால் வம்சத்தினர் சிக்கிம் இராச்சியத்தை ஆண்டனர். முன்னர் லடாக்கை ஆண்ட மர்யூல் வம்சத்தவர்களை (930–1460) வென்று நம்கியால் வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். நம்கியால் பேரரசு உச்சத்தில் இருந்த போது லடாக், பல்திஸ்தான், மேற்கு திபெத், மற்றும் மேற்கு நேபாளப் பகுதிகளை ஆண்டனர். நம்கியால் வம்சத்தினர் முகலாயர்கள் மற்றும் திபெத்தியர்களுடன் கடும் மோதல் போக்கு கொண்டிருந்தனர். இதனால் திபெத்-லடாக்-முகலாயப் போர்கள் நடைபெற்றது.[2]இறுதியாக 1842ல் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மற்றும் சீக்கியப் பேரரசினர் நம்கியால் வம்சத்தினரை வென்று லடாக் பகுதியை ஜம்மு காஷ்மீருடன் இணைத்தனர்.

நம்கியால் ஆட்சியாளர்கள்[தொகு]

நம்கியால் வம்ச ஆட்சியாளர்கள் பட்டியல் பின்வருமாறு:[3][4][5]

 1. லாச்சென் பாகன் (1460-1485)
 2. லாடா ஜுக்தான் (1510-1535)
 3. குன்கா நம்கியால் I (1535-1555)
 4. தஷி நம்கியால் (1555-1575)
 5. சேவாங் நம்கியால் I (1575-1595)
 6. நம்கியால் கோன்போ (1595-1600)
 7. ஜம்யாங் நம்கியால் ( 1595-1616)
 8. செங்கி நம்கியால் (1616–1623)
 9. நோர்பு நம்கியால் (1623–1624)
 10. செங்சி நம்கியால் (இரண்டாம் முறை, 1624–1642)
 11. தெல்தன் நம்கியால் (1642-1694)
 12. தெலக் நம்கியால் (1680-1691)
 13. நயிமா நம்கியால் (1694-1729)
 14. தெஸ்கியாங் நம்கியால் (1729–1739)
 15. புந்சோக் நம்கியால் (1739–1753)
 16. சேவாங் நம்கியால் (1753–1782)
 17. சேத்தன் நம்கியால் (1782-1802)
 18. சேப்பல் தோன்துப் நம்கியால் (1802–1837, 1839–1840)
 19. குன்கா நம்கியால் II (1840–1842)

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்கள்[தொகு]

 • Petech, Luciano (1977), The Kingdom of Ladakh, c. 950–1842 A.D. (PDF), Instituto Italiano Per il Medio ed Estremo Oriente – via academia.edu[தொடர்பிழந்த இணைப்பு]
 • Rizvi, Janet (1996), Ladakh: Crossroads of High Asia (Second ed.), Delhi: Oxford University Press, ISBN 0-19-564546-4

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்கியால்_வம்சம்&oldid=3652558" இருந்து மீள்விக்கப்பட்டது