பல்திஸ்தான்
பலுதித்தான் སྦལ་ཏི་སྟཱན | |
---|---|
![]() சம்மு காசுமீர் மாநிலத்தில் நீல நிறத்தில் பலுதித்தான் (அடர் நீல நிறம்: சுகருடு மாவட்டம், காஞ்சி மாவட்டம், சிகார் மாவட்டம் மற்றும் கர்மாங் மாவட்டம்) வெளிர் நீல நிறத்தில் கார்கில்) | |
ஆள்கூறுகள்: 35°18′N 75°37′E / 35.300°N 75.617°E | |
நாடுகள் | |
பிரதேசம் | |
மாவட்டங்கள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 72,000 km2 (28,000 sq mi) |
ஏற்றம் | 1,500 m (4,900 ft) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 9,22,745 |
மொழிகள் | திபெத்திய பல்தி மொழி, உருது, காசுமீரி மற்றும் வட்டார மொழிகள் |
பலுதித்தான் (Baltistan) இதனை குட்டி திபெத் என்றும் அழைப்பர். இமயமலைத் தொடரில் உள்ள காரகோரம் மலையின், கே-2 கொடுமுடியின் தெற்கில், 3,350 மீட்டர் உயரத்தில் பலுதித்தான் அமைந்துள்ளது.
சம்மு காசுமீர் இராச்சியத்தில் இருந்த பலுதித்தான் பகுதியை, 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, பாக்கித்தான் அரசு இராணுவத்தின் தூண்டிதலின் பேரில், பத்தூன் பழங்குடி மக்கள், பலுதித்தான் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
பலுதித்தானின் மேற்கில் கில்கித், வடக்கில் சீனாவின் சிஞ்சியாங், தென்கிழக்கில் லடாக், தென்மேற்கில் மற்றும் காசுமீர் சமவெளி எல்லைகளாக உள்ளது. [4][5]
வரலாறு
[தொகு]1840ல் சம்மு காசுமீர் இராச்சியத்தின் மன்னர் குலாப் சிங், சில்சிட்டு - பலுதித்தான் பகுதிகளை ஆக்கானியர்களிடமிருந்து கைப்பற்றினார். [6]
சம்மு காசுமீர் இராச்சியத்தில் லடாக் மற்றும் பலுதித்தான் பகுதிகள் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டது. பலுதித்தான் மாவட்டம் சுகருடு, கார்கில் மற்றும் லே என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. [7]
26 அக்டோபர் 1947 அன்று சம்மு காசுமீர் மன்னர் அரி சிங்கு, இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை எதிர்த்து, பாக்கித்தான் இராணுவம் மற்றும் பத்தூன் பழங்குடிகள் மேற்கு காசுமீர் பகுதிகள் மற்றும் பலுதித்தான் & கில்கித் உள்ளிட்ட வடக்கு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, ஆசாத் காசுமீர் எனப்பெயரிட்டனர். [8] காசுமீர் சமவெளி, சம்மு பகுதி, லே மாவட்டம் மற்றும் கார்கில் மாவட்டங்கள் இந்தியாவுடன் இணைந்தது.
1971 இந்திய - பாக்கித்தான் போருக்குப் பின், பலுதித்தானின் துர்துக் கிராமம், நூப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[9][10]
இப்பகுதியில் இசுலாம் பெரும்பான்மை சமயமாக இருப்பினும், துவக்க காலத்தில் பலுதித்தான் பகுதிகளில் பௌத்த சமயத்தைப் பின்பற்றும் திபெத்திய பல்தி மக்கள் வாழ்ந்தனர்.
இராசதந்திர பூர்வமாக, இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகளுக்கு பலுதித்தான் முக்கிய மையமாக உள்ளது. கார்கில் போர் மற்றும் சியாச்சின் போர்களுக்கு பலுதித்தான் பகுதி முக்கியத்துவம் கொண்டது.
புவியியல்
[தொகு]பலுதித்தான் உயரமான மலைக் கொண்டது. இதன் வடக்கில் பல்தோரா பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது.
சிந்து ஆறு பலுதித்தான் வழியாக பாய்கிறது. இதன் முக்கிய சமவெளிகள், காப்புலு, ரொவுண்டு ஆகும்.



பலுதித்தான் சமவெளிகளும், மாவட்டங்களும்
[தொகு]சமவெளி | மாவட்டம் | பரப்பு (km²) | மக்கள்தொகை (1998) | தலைமையிடம் |
---|---|---|---|---|
காப்புலு சமவெளி |
காஞ்சி மாவட்டம் | 9,400 | 88,366 | காப்புலு |
சுகருடு சமவெளி |
சுகருடு மாவட்டம் | 18,000 | 219,209 | சுகருடு |
சிகார் சமவெளி |
சிகார் மாவட்டம் | 6,450 | 60,295 | சிகார் |
கார்மாங் |
கார்மாங் | 5,520 | 62,522 | தோல்தி |
ரவுண்டு சமவெளி |
சுகருடு மாவட்டம் | 80,000 | தோவார் | |
குலதாரி |
சுகருடு | |||
சியோக்° |
லே மாவட்டம் | 4,000 (2011) | துர்துக் |
மக்கள் தொகையியல்
[தொகு]2017ம் ஆண்டின் கணக்குப் படி, பலுதித்தான் மலைப்பகுதிகளின் மக்கள் தொகை 9,22,745 ஆகவுள்ளது. இங்குள்ள பலதரப்பட்ட இனக்குழுக்களில், திபெத்திய பல்தி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [11].
சமயங்கள்
[தொகு]பலுதித்தான் பகுதிகளில் இசுலாம் அறிமுகம் ஆவதற்கு முன்னர், போன் பௌத்தம் மற்றும் திபெத்திய பௌத்தம் முக்கிய சமயமாக விளங்கியது.
கிபி ஏழாம் நூற்றாண்டுகளில் திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக பலுதித்தான் விளங்கியது. பலுதித்தானின் சுகருடு பகுதிகளில் பண்டைய பௌத்த தொல்லியல் களங்கள் அதிகமாக உள்ளது.
கிபி 16 - 17ம் நூற்றாண்டுகளில் சூபியிசம் பரவியதால், பலுதித்தானின் பெரும்பான்மையான மக்கள் நூர்பக்சியா இசுலாம் பிரிவைத் தழுவினர். [12]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Suddenly Indian - OPEN Magazine". OPEN Magazine.
- ↑ Khan, Aaquib. "Turtuk, a Promised Land Between Two Hostile Neighbours". thewire.in.
- ↑ "Turtuk: The last undiscovered place in Leh-Ladakh". 18 May 2016. Archived from the original on 7 ஆகஸ்ட் 2019. Retrieved 20 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Schofield, Victoria (2003) [First published in 2000], Kashmir in Conflict, London and New York: I. B. Taurus & Co, p. 8, ISBN 1860648983
- ↑ Cheema, Brig Amar, (2015), The Crimson Chinar: The Kashmir Conflict: A Politico Military Perspective, Lancer Publishers, p. 30, ISBN 978-81-7062-301-4
{{citation}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Proceedings - Punjab History Conference (in ஆங்கிலம்). Punjabi University. 1968.
- ↑ Kaul, H. N. (1998), Rediscovery of Ladakh, Indus Publishing, p. 88, ISBN 978-81-7387-086-6
- ↑ Schofield, Victoria (2003) [First published in 2000], Kashmir in Conflict, London and New York: I. B. Taurus & Co, pp. 65–66, ISBN 1860648983
- ↑ Atul Aneja, A 'battle' in the snowy heights, The Hindu, 11 January 2001.
- ↑ "In pictures: Life in Baltistan". bbc.com. Retrieved 13 May 2015.
- ↑ Hussain, Ejaz. "Geography and Dempgraphy of Gilgit Baltistan (GB Scouts)". www.gilgitbaltistanscouts.gov.pk. Archived from the original on 2016-03-04. Retrieved 2018-02-20.
- ↑ "NYF". Archived from the original on 2018-03-07. Retrieved 2018-02-20.
ஆதார நூற்பட்டி
[தொகு]- Aggarwal, Ravina (2004), Beyond Lines of Control: Performance and Politics on the Disputed Borders of Ladakh, India, Duke University Press, pp. 199–, ISBN 0-8223-3414-3
- Dani, Ahmad Hasan (1998), "The Western Himalayan States", in M. S. Asimov; C. E. Bosworth (eds.), History of Civilizations of Central Asia, Vol. IV, Part 1 — The age of achievement: A.D. 750 to the end of the fifteenth century — The historical, social and economic setting, UNESCO, pp. 215–225, ISBN 978-92-3-103467-1
- Karim, Afsir (2009), "Strategic dimensions of the trans-Himalayan frontiers", in K. Warikoo (ed.), Himalayan Frontiers of India: Historical, Geo-Political and Strategic Perspectives, Routledge, pp. 56–66, ISBN 978-1-134-03294-5
- Pirumshoev, H. S.; Dani, Ahmad Hasan (2003), "The Pamirs, Badakhshan and the Trans-Pamir States", in Chahryar Adle; Irfan Habib (eds.), History of Civilizations of Central Asia, Vol. V — Development in contrast: From the sixteenth to the mid-nineteenth century, UNESCO, pp. 225–246, ISBN 978-92-3-103876-1