திஸ்கித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திஸ்கித்
கிராமம்
நூப்ரா பள்ளத்தாக்கில் உள்ள திஸ்கித் கிராமம் மற்றும் திஸ்கித் விகாரையில் தியானம் செய்யும் பௌத்த பிக்கு
நூப்ரா பள்ளத்தாக்கில் உள்ள திஸ்கித் கிராமம் மற்றும் திஸ்கித் விகாரையில் தியானம் செய்யும் பௌத்த பிக்கு
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Ladakh" does not exist.
ஆள்கூறுகள்: 34°33′04″N 77°32′55″E / 34.551210°N 77.548478°E / 34.551210; 77.548478ஆள்கூறுகள்: 34°33′04″N 77°32′55″E / 34.551210°N 77.548478°E / 34.551210; 77.548478
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
தாலுக்காநூப்ரா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,760
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
கணக்கெடுப்பு குறியீடு929

திஸ்கித் (Diskit) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தின், நூப்ரா வருவாய் வட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும்.[1][2]காரகோரம் மலைத்தொடரில் அமைந்த இக்கிராமத்தில் திஸ்கித் விகாரை உள்ளது. திஸ்கித் கிராமம், லே நகரத்திற்கு கிழக்கே 118 கிலோ மீட்டர் தொலவிலும், ஹன்டர் நகரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. லே நகரம் மற்றும் தவுலத் பெக் ஓல்டியை இணைக்கும் துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை இக்கிராமம் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, திஸ்கித் கிராமம் 344 வீடுகளையும், 1760 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. எழுத்தறிவு 76.57% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை 1519 ஆகவுள்ளது [3]இக்கிராம மக்கள் கல்வி, அரசு வேலைகள், வங்கிச் சேவைகளுக்கு நூப்ராவிற்குச் செல்ல வேண்டும்.

சுற்றுலா[தொகு]

காரகோரம் மலைத்தொடரில் அமைந்த லடாக்கின் நூப்ரா பள்ளத்தாக்கில் அமைந்த திஸ்கித் கிராமம், ஆண்டு முழுவதும் இயங்கும் முக்கியச் சுற்றுலாத் தலமாகும். சியோக் ஆற்றின் கரையில் அமைந்த திஸ்கித் கிராமத்தில் பல விருந்தினர் விடுதிகளும், உண்வு விடுதிகளும் உள்ளது.[4]

உள்கட்டமைப்பு வசதிகள்[தொகு]

  1. கேந்திரிய வித்தியாலயம், நூப்ரா
  2. தாலுகா மருத்துவ மனை, நூப்ரா
  3. ஜம்மு காஷ்மீர் வங்கி கிளை
  4. லாம்டோன் மாதிரி மேனிலைப் பள்ளி
  5. அரசு பட்டப்படிப்புக் கல்லூரி, நூப்ரா
  6. பொதுப்பணித் துறை, நூப்ரா

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. 9 September 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. Leh tehsils.
  3. "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). http://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls. பார்த்த நாள்: 2015-07-23. 
  4. "Crazy Peaks".
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Diskit
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஸ்கித்&oldid=2991145" இருந்து மீள்விக்கப்பட்டது