கருப்புக் கழுத்துக் கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புக் கழுத்துக் கொக்கு
Grus nigricollis -Bronx Zoo-8-3c.jpg
அமெரிக்காவின் நியூயார்கின் புரோன்ஸ் விலங்கு காட்சியகத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: கொக்கு
பேரினம்: Grus
இனம்: G. nigricollis
இருசொற் பெயரீடு
Grus nigricollis
Przhevalsky, 1876
GrusNigricollisMap.svg

கருப்புக் கழுத்துக் கொக்கு (black-necked crane) என்பது ஒரு நடுத்தர அளவு கொக்கு ஆகும். இவை ஆசியாவின் திபெத் பீடபூமியில் இனச்சேர்க்கைகாக ஆண்டின் சில மாதங்களில் வந்து சேர்கின்றன. இந்தியா, பூட்டான் போன்ற நாடுகளுக்கு வலசை வருகின்றன.[2] இது சம்மு காசுமீர் மாநிலப் பறவை ஆகும். இவை 139 செ.மீ. (55 அங்குளம்) நீளமாகவும், இறக்கை விரிந்த நிலையில் 235 செ.மீ (7.8 அடி) இருக்கும். 5.5 கிலோ (12 பவுண்ட்) எடையுள்ளதாக இருக்கும். இது பழுப்புக் கலந்த கருமையான நீண்ட கால்களும், கரிய கழுத்தும், மங்கிய சாம்பல் நிற உடலும், வாலில் தொங்கிய நிலையில் கருமையான இறகுகளும் கொண்டிருக்கும். இவை சிறுவிலங்குகள், வேர்கள், கிழங்குகள் தானியங்கள, பூச்சிகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.

குறிப்புகள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Grus nigricollis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. இளவெயிலே மரச்செறிவே 24: வாழ்வின் அர்த்தம் உணர்த்திய பனிச்சிறுத்தை 16 மார்ச் 2019- இந்து தமிழ் திசை