தேசிய நெடுஞ்சாலை 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1
1

தேசிய நெடுஞ்சாலை 1
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இதேநெஆ
நீளம்:534 km (332 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு: தே.நெ. 3, லே
 
மேற்கு முடிவு:Invalid type: S, கட்டின் பாலா மாவட்டம்
அமைவிடம்
மாநிலங்கள்:சம்மு காசுமீர், லடாக்
முதன்மை
இலக்குகள்:
பாரமுல்லா, சிறிநகர், கார்கில்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 87 தே.நெ. 301
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை 1 (தேநெ 1)(National Highway 1 -India) என்பது இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றிய பிரதேசங்களுக்கு இடையே செல்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா) பழைய பகுதிகளைக் கொண்டுள்ளது.[2] இந்தியாவின் வடக்கு கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை என்பதைக் குறிக்கிறது.

இமயமலை மலைகள் வழியாக தேநெ 1

பாதை விளக்கம்[தொகு]

லடாக், லே அருகே தேசிய நெடுஞ்சாலை 1

தேசிய நெடுஞ்சாலை 1 ஊரியிலிருந்து பாரமுல்லா, சிறிநகர், சோனாமார்க், சோஜி லா கணவாய், திராஸ், கார்கில் மற்றும் லே செல்கிறது. இந்த பாதை உயரமான மலைப்பாதைகள் வழியாகச் செல்கிறது. பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகளில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை லடாக் பகுதியின் உயிர்நாடியாகும். ஒரு மாற்றுப் பாதை, லே-மணாலி நெடுஞ்சாலை உள்ளது. ஆனால் அது இன்னும் உயரமான மலைப்பாதையாகும். தெநெ 1 இந்தியா-பாக்கித்தான் எல்லைக்கு அருகில் செல்கிறது.

போக்குவரத்து[தொகு]

சம்மு மற்றும் காஷ்மீர் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இந்த வழித்தடத்தில் ஸ்ரீநகர் மற்றும் லே இடையே வழக்கமான சொகுசு மற்றும் சாதாரண பேருந்து சேவைகளை கார்கிலில் ஓர் இரவு பயணமாக வழங்குகிறது. பயணத்திற்கு ஸ்ரீநகரில் மகிழ்வுந்துகளும் கிடைக்கின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_1&oldid=3559304" இருந்து மீள்விக்கப்பட்டது