திபெத்திய சிறுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்திய சிறுமான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Antilopinae
பேரினம்: Procapra
இனம்: P. picticaudata
இருசொற் பெயரீடு
Procapra picticaudata
Hodgson, 1846

திபெத்திய சிறுமான் (Tibetan Gazelle) என்பது ஒரு மான் இனமாகும். இவை குறிப்பாக திபெத்திய பீடபூமியிலும், வடகிழக்கு லடாக், சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றன.

விளக்கம்[தொகு]

இந்த மான்கள் சிறிய வகை மான்கள் ஆகும். ஆண், பெண் ஆகிய இருவகை மான்களும் தோராயமாக 13-16 கிலோ (29 -35 இராத்தல் ) எடை கொண்டவை. தோள்பட்டைவரை 54 முதல் 65 சென்டிமீட்டர் (21-26 அங்குலம்) உயரம் உடையவை. தலை முதல் உடல்வரை 91 முதல் 105 செ.மீ (36-41 அங்குலம்) நீளம் கொண்டவை. ஆண் மான்கள் பின் நோக்கி கூராக வளைந்த கொம்புகள் கொண்டவை. வால் குறுகியும் முனையில் கருமையாகவும் இருக்கும். பெண்மானுக்குக் கொம்புகள் கிடையாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Procapra picticaudata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. {{cite web}}: Invalid |ref=harv (help) Database entry includes a brief justification of why this species is of near threatened.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_சிறுமான்&oldid=2785574" இலிருந்து மீள்விக்கப்பட்டது