இராதாகிருஷ்ண மாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதாகிருஷ்ண மாத்தூர்
இராதாகிருஷ்ண மாத்தூர்
லடாக்கின் முதல் துணைநிலை ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 அக்டோபர் 2019
முன்னையவர்புதிய பணியிடம்
இந்தியப் பாதுகாப்புத் துறை செயலாளர்
பதவியில்
25 மே 2013 – 24 மே 2015
முன்னையவர்சசி காந்த் சர்மா
பின்னவர்ஜி. மோகன் குமார்
பதவியில்
1 அக்டோபர் 2012 – 24 மே 2013
முன்னையவர்சேகர் அகர்வால்
பின்னவர்ஜி. சி. பட்டி
இந்திய அரசுச் செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிதுறை செயலாளர்
பதவியில்
9 நவம்பர் 2011 – 30 செப்டம்பர் 2012
தலைமைச் செயலாளர், திரிபுரா அரசு
பதவியில்
22 டிசம்பர் 2003 – 22 அக்டோபர் 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராதாகிருஷ்ண மாத்தூர்

25 நவம்பர் 1953 (1953-11-25) (அகவை 70)
உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
வாழிடம்(s)இராஜ் நிவாஸ், லே
முன்னாள் கல்லூரிஇந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
பன்னாட்டு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம்
வேலைஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி

இராதாகிருஷ்ண மாத்தூர் (Radha Krishna Mathur) (பிறப்பு: 25 நவம்பர் 1953), ஓய்வு பெற்ற 1977-ஆம் ஆண்டுத் தொகுப்பு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், லடாக் ஒன்றியப் பகுதியின் முதல் மற்றும் தற்போதைய துணைநிலை ஆளுநரும் ஆவார்.

இவர் இந்தியத் தலைமை தகவல் ஆணையாராக நவம்பர் 2018-இல் பணி ஓய்வு பெற்றவர்.[1][2][3][4]

முன்னர் இவர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உற்பத்தி பிரிவின் செயலாளராகவும், இந்தியத் தொழில் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை செயலாளராகவும், திரிபுரா மாநில தலைமைச் செயலராகவும், பணியாற்றியவர்.[5][5][6][6]

கல்வி[தொகு]

ஆர். கே. மாத்தூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் மற்றும் தில்லி தொழில்நுட்பக் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இயந்திரவியல் பட்டம் பெற்றவர்.[5][5][6][6] இவர் பன்னாட்டு தொழிமுனைவோர் மேம்பாட்டு மையத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் பட்டம் பெற்றார்.[6]

லடாக் ஒன்றிய துணைநிலை ஆளுநராக[தொகு]

6 ஆகஸ்டு 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய லடாக் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[7][8]

இந்தியக் குடியரசுத் தலைவர் 25 அக்டோபர் 2019 அன்று இராதாகிருஷ்ண மாத்தூரை, 31 அக்டோபர் 2019-இல் புதிதாக நிறுவப்பட்ட லடாக் ஒன்றியப் பகுதியின் துணைநிலை ஆளுநாக நியமித்தார். இராதகிருஷ்ண மாத்தூர் 31 அக்டோபர் 2019 (நள்ளிரவு) அன்று லடாக்கின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.[9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ensure CIC is free from govt interference".
  2. Yadav, Shyamlal (19 December 2015). "R. K. Mathur set to be new Chief Information Commissioner". இந்தியன் எக்சுபிரசு. New Delhi. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "R. K. Mathur appointed as CIC". தி இந்து. New Delhi. 18 December 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Former defence secretary R. K. Mathur appointed new CIC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. New Delhi. 19 December 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. 5.0 5.1 5.2 5.3 "Radha Krishna Mathur - Executive Record Sheet". Department of Personnel and Training, இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Chief Information Commissioner - Shri Radha Krishna Mathur (Profile)". Central Information Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. President's rule revoked in J&K, 2 Union Territories created
  8. ஜம்மு காஷ்மீர் - லடாக் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
  9. "Radha Krishna Mathur to be LG of Ladakh: All you need to know about him". India Today. 25 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாகிருஷ்ண_மாத்தூர்&oldid=3747571" இலிருந்து மீள்விக்கப்பட்டது