கொண்டா காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டா காப்பு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் , தமிழ் நாடு மற்றும் தெலங்காணா
மொழி(கள்)
தெலுங்கு
தொடர்புள்ள இனக்குழுக்கள்

கொண்டா காப்பு (Konda Kapu) என்பவர்கள் தொல்மூத்த பழங்குடியினராவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலங்காணா போன்ற பகுதியில் வாழுகிறார்கள்.[1] இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது வேட்டையாடுதலும், தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தெலுங்கு மொழியைப் பேசுகிறார்கள்[2].இந்தியாவில் 1981 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவர்கள் 28033 பேர் ஆந்திராவிலும், 1524 பேர் தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் வாழுவதாக கூறப்படுகிறது.கொண்டா காப்பு சமூகத்தை சேர்த்தவர்கள் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் , விஜயநகரம் மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். இவர்கள் மலைகளின் காவலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இச்சமூகத்தினர் எழுத்தறிவு 18.48% ஆகும்[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. pp. 21–22. Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  2. எஸ். பூபதி, ed. (1988). தமிழ்நாட்டின் மொழிச்சூழல். தமிழ்ப் பல்கலைக்கழகம். கொண்டா காப்பு, கொண்டா ரெட்டி பழங்குடி இனத்தவர் தெலுங்கின் கிளைமொழிகளையும் பேசுகின்றனர்
  3. P. K. Mohanty, ed. (2004). Encyclopaedia of Primitive Tribes in India. Gyan Publishing House. p. 359. Archived from the original on 2021-07-30. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  4. India. Commissioner for Scheduled Castes and Scheduled Tribes, ed. (1986). Report of the Commissioner for Scheduled Castes and Scheduled Tribes. Manager, Government of India Press. p. 555. Konda Kapu and Kondareddii These communities are included in the list of the Scheduled Tribes of Andhra Pradesh. In Telegu 'Konda" means hill. Therefore, it is obvious that the members of these communities are living in hills {{cite book}}: no-break space character in |quote= at position 11 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டா_காப்பு&oldid=3499098" இலிருந்து மீள்விக்கப்பட்டது