கோல் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல் மக்கள் (Kol people) என்பவர்கள் கிழக்கு இந்தியாவின் சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதியிலிருந்து ஜார்கண்ட், மேற்கு வங்களம், பிகார், அசாம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசங்களில் குடிய்பெயர்ந்த பழங்குடி மக்கள் ஆவார். காடுகளையும், காட்டுப் பொருட்களை சேகரித்து விற்று வாழும் இம்மக்கள் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் துணை மொழியான முண்டா மொழியில் கிளை மொழியான கோல் மொழியை பேசுகின்றனர். நிலவுடமை அற்ற கோல் மக்கள் சர்னா சமயம், இந்து சமயம் மற்றும் கிறித்தவ சமயங்களை பின்பற்றுகின்றனர்.

இட ஒதுக்கீட்டின் நன்மை பெற இந்திய அரசு கோல் மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 10 இலட்சம் கோல் மக்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் வாழும் கோல் மக்களின் எண்ணிக்கை 5 இலட்சம் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்_மக்கள்&oldid=3490873" இருந்து மீள்விக்கப்பட்டது