லோத்தா மக்கள்
லோத்தா மக்கள் | |
---|---|
மதங்கள் | இந்து சமயம், இசுலாம் |
மொழிகள் | லோதி மொழி, சத்திரி மொழி, வங்காள மொழி, ஒடியா மொழி |
நாடு | இந்தியா |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | மேற்கு வங்காளம், ஒடிசா |
தொடர்புடைய குழுக்கள் | முண்டா மக்கள், லோத்தா முஸ்லீம்கள், சபர் மக்கள் |
லோத்தா மக்கள் (Lodha people), இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் இந்து சமயம் மற்றும் இசுலாம் சமயங்களைப் பின்பற்றும் இப்பழங்குடி மக்கள் லோதி மொழி, சத்திரி மொழி, வங்காள மொழி மற்றும் ஒடியா மொழிகளைப் பேசுகின்றனர். மேற்கு வங்காளத்தில் வாழும் லோத்தா மக்களில் பெரும்பான்மையாக மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மற்றும் ஜார்கிராம் மாவட்டங்களில் வாழ்கின்றனர். இடஒதுக்கீடு வசதிக்காக இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லோத்தா பழங்குடி மக்கள் தொகை 84,966 ஆகவும், எழுத்தறிவு 34.8% ஆகவும் இருந்தது.[1] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், லோத்தா பழங்குடி மக்கள் தொகை, மேற்கு வங்காளத்தில் ஒரு இலட்சம்|இலட்சத்திற்கு]] சற்று குறைவாகவும், ஒடிசாவில் 10,000 அளவில் உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் லோத்தா பழங்குடி மக்கள் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிகம் வாழ்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "West Bengal: Data Highlights the Scheduled Tribes" (PDF). Census of India 2001. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2009-09-26.
- ↑ "Mayurbhanj, Tribal languages, festivals and culture". பார்க்கப்பட்ட நாள் 2009-09-26.