உள்ளடக்கத்துக்குச் செல்

மிசோரத்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசோரம் 1950 களில் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது

மிசோரத்தின் வரலாறு (history of Misoram) என்பது வடகிழக்கு இந்தியாவின் தொலைதூர பகுதியிலுள்ள மிசோரம் மாநிலத்தின் வரலாறைக் குறிக்கிறது. மேலும் இது பர்மாவின் சின் மாகாணத்திலிருந்து குடிபெயர்ந்த சின் மக்களில் பல இனக்குழுக்களின் வரலாறும் ஆகும். ஆனால் மேற்குப் புலப் பெயர்வு குறித்த தகவல்கள் வாய்மொழி வரலாறு மற்றும் தொல்லியல் கூற்றுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. இதன் பதியப்பட்ட வரலாறானது அண்மையில் அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. இப்போது இப்பகுதியானது சின் மலை மற்றும் வங்காளதேச மக்களுடைய கலவையாக உள்ளது. அதன் வரலாறானது லுசிஸிய, ஹார், லாய், மாரா, சக்மா போன்ற பழங்குடியினரை பெரிதும் பிரதிபலிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுவில் சமயம், அரசியல் மற்றும் கலாச்சாரப் புரட்சிகளைத் தொடர்ந்து, பெரும்பான்மையான மக்கள், ஒரு பெரும் பழங்குடி இனத்தவராக, மிசோவிற்குள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

மிசோராம் குறித்த துவக்கக் கால ஆவணப் பதிவானது 1850 களைச் சேர்ந்த பிரித்தானிய இராணுவ அதிகாரகளால் செய்யப்பட்டவை ஆகும். மிசோ பழங்குடிகளின் இடைவிடாத தாக்குதலின் விளைவாகவும், அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளின் காரணமாகவும், பிரித்தானிய ஆட்சியாளர்கள் பழங்குடிகளை அடக்கி அடிமைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டனர். 1871 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பிரித்தானிய இராணுவப் படையெடுப்புகளால் முழுமையாக லுஷாய் மலைகள் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1947 ஆண்டின் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இப்பகுதி அசாம் மாநிலத்துக்கு உட்பட்ட லுஷாய் மலைகள் மாவட்டமாக ஆக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இந்த மாவட்டமானது ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியின் பெயர் மிசோரம் என்று கலாச்சார ரீதியாக பெயரிடப்பட்டது. 1986 இல் மிசோரம் இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சிக்கு உட்பட்ட ஒரு மாநிலமாக மாறியது.

மக்கள்

[தொகு]

மிசோவின் மூதாதையர்கள் பிரிட்டனின் வருகைக்கு முன்னர் எந்தவொரு எழுத்து முறையும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் திபெத்திய-பர்மிய இனத்தின் உறுப்பினர்களாக மானிடவியலாளர்களால் அடையாளம் காட்டப்பட்டனர்.

மிசோ மலை

[தொகு]

தற்கால மிசோராமில் பிற மக்கள் நுழைவதற்கு முன் இருந்த ஆதி குடிகள் குகி மக்கள் என அழைக்கப்பட்டனர், குடியேறியவர்களில் இரண்டாவது தொகுதியினர் புதிய குகி என்று அழைக்கப்பட்டனர். மிசோ பழங்குடியினரில் லுசாய் மலைகளில் வந்து கடைசியாக கலந்தவர்கள் லுஷெய்ஸ் பழங்குடியினர் ஆவர். அச்சமயத்தில் மியாமரின் எல்லையோரமாக இருந்த டியு ஆற்றைக் கடந்து வந்தவர்கள், ஆளும் சாய்லோ குலமாக அறியப்படும் சஹூமுகாவின் சந்ததியினர் ஆவர். இவர்கள் தங்களை திறமையுள்ள மற்றும் உறுதியான தலைவர்களாக நிரூபித்தனர். கிராமப்புற நிர்வாகத்திதை பாரம்பரிய முறையில் சிறப்பாக செய்தனர். கிராமத்தின் தலைவர் அல்லது லால் எனப்படுபவர் சாகுபடிக்கு நிலங்களை ஒதுக்கி, கிராமங்களில் உள்ள அனைத்து சச்சரவுகளையும் தீர்ப்பவராக, ஏழைகளிடம் அக்கறை காட்டுபவராக, புகலிடம் கோருவோருக்கு தங்குமிடம் வழங்குபவராக இருந்தார். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் மிசோ வரலாற்றில் பல பழங்குடித் தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் முயற்சிகள் குறிப்பிடப்படுகின்றன.[1]

பிரித்தானியர் ஆட்சி

[தொகு]

ஆரம்ப சந்திப்புகள்

[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் நடுவில், பிரித்தானியப் பேரரசு சிட்டகொங் மற்றும் பர்மாவைச் சுற்றியிருந்த அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் அது பழங்குடியினர் வாழும் மலைப்பாங்கான பகுதிகளின் மீது ஆர்வம் கொண்டிருக்கவில்லை. காரணம் அவர்களை "சீர்திருத்த இயலாத காட்டுமிராண்டிகள்" [2] எனக் கருதினர். மேலும் இந்தப் பழங்குடியினர் சிறுசிறு தனிமைப்படுத்திக்கொண்ட குழுவினராகவும் ஒவ்வொரு குழுவும் பிற குழுக்களுடன் போரிடுபவையாகவும் இருந்தனர். அவர்களுடைய சமய வாழ்வில் பாகால் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் விலங்குகளை பலியிடுதல் உட்பட பல சடங்குகளை மேற்கொள்பவர்களாகவும், இயற்கையை வணங்குபவர்களாகவும் இருந்தனர்.[3] முதலில் லுஷாய் என்பவர் 1826 ஆம் ஆண்டில் பிரிட்டனில் அசாமின் ஆட்சியைப் பதிவு செய்தார். 1850 இல் இருந்து உள்ளூர் அதிகாரிகளால் தெற்கில் உள்ள மலைவாசிகளின் கடுமையான தாக்குதல்களை தடுக்க முடியவில்லை. திடீர் தாக்குதல்கள் மற்றும் சீண்டுதல் ஆண்டு தோறும் நிகழ்ந்தன, மற்றும் ஒரு சமயம் சில்ஹெட்டின் நீதவான் பிரித்தானியப் பிரதேசமாகக் நடத்தப்பட்ட தொடர்ச்சியான படுகொலைகளை பதிவு செய்தார், இதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.[4] 1871 இல் நடந்த தொடர் தாக்குதல்களில் இரு தரப்பிலும் பல மரணங்கள் ஏற்பட்டன, தோட்டங்களும் பெருமளவில் சேதம் அடைந்தன. பல தொழிலாளர்கள் மற்றும் வீரர்கள் அவர்களில் ஒரு ஆறு வயது மேரி வின்செஸ்டர் உட்பட கைதிகளாக பிடிக்கப்பட்டனர். பெர்குஹியா போர்வீரர்களால் மேரி வின்செஸ்டர் பிணைக்கப்பட்டும், மற்ற கைதிகள் வழியில் தூக்கிலிடப்பட்டனர்.[5][6][7][8]

பிரித்தானிய இராணுவத் தாக்குதல்கள்

[தொகு]

1871-1872 ஆண்டுகளில் பிரித்தானிய இராணுவம் லுஷாய் படையெடுப்பு என்ற பெயரிலான தாக்குதலினால் தண்டித்தது. இந்த தொடர் படையெடுப்பானது சிட்டகாங்கிலிருந்து வலப்பக்கமாகவும், கச்சரிலிருந்து இடதுப்பக்கமாகவும் நடந்தது. 1871 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் துவக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் மிசோ கிராமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒடுக்கப்பட்டன, பின் மேரி வின்செஸ்டர் மீட்கப்பட்டார். இதன் பிறகு சற்று அமைதி நிலவியது என்றாலும், பத்தாண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் இடைவிடாத தாக்குதல்கள் வெடித்தன. 1889 ஆம் ஆண்டில் பிரித்தானிய இராணுவம் "தண்டனை 1889" என்ற பெயரில் இன்னொரு தொடர் படை நடவடிக்கையை மேற்கோண்டது. 1889 ஆம் ஆண்டின் இறுதியில் சின் மலை உள்ளிட்ட தெற்கு பகுதியிலுள்ள பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றப்பட்டன. இறுதியில் பழங்குடியினத்தின் அனைத்து பெரிய தலைவர்களுக்கும் அடிபணிந்தனர், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அய்சால் மற்றும் லுங்க்லீவில் நிர்வாக மையங்கள் நிரந்தரமாக பலப்படுத்தப்பட்டன.[9][10]

லுஷாய் மலைகள்

[தொகு]

1895 ஆம் ஆண்டு மிசோ மலைகள் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு மலைகள் 1898 ஆம் ஆண்டில் லுஷாய் மலை மாவட்டத்தில் இணைக்கப்பட்டன, மாவட்டத்தின் தலைமையகமாக ஐசாவால் இருந்தது. அசாமில் பழங்குடி ஆதிக்கம் உள்ள பகுதியில் பிரித்தானிய நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதற்கான செயல்முறை 1919 இல் தொடங்கியது. மிசோராமின் லுஷாய் மலைப் பகுதிகளில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டத் தொடங்கிபின் முதல் அரசியல் கட்சி வடிவுபெறத் தொடங்கியது, மிசோ பொது மக்கள் சங்கம் (Mizo Common People's Union) 1946 ஏப்ரல் 9 இல் உருவாக்கப்பட்டது. பின்னர் கட்சியின் பெயர் மிசோ யூனியன் (Mizo Union) என மாற்றப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் நெருங்கி வந்தபோது, சிறுபான்மையினர் மற்றும் பழங்குடி உறுப்பினர்களுடனான விஷயங்களை சமாளிக்க இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தது. வடகிழக்குப் பிரதேசத்தின் பழங்குடி விவகாரங்கள் குறித்து அரசியலமைப்பு அவைக்கு ஆலோசனை வழங்குவதற்காக கோபிநாத் பர்தலை தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டது. மிசோ யூனியன் இந்த துணைக் குழுவிடம் லுஷாய் மலைப் பகுதியை ஒட்டிய அனைத்து மிசோ வசிப்பிடங்களையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அளித்தது. இருப்பினும், விடுதலைக்குப் பின்னர் லுஷாய் மலைப் பகுதிகளை பர்மாவுடன் இணைக்கும் கோரிக்கை விடுத்து ஐக்கிய மிசோ விடுதலை அமைப்பு (United Mizo Freedom Organisation) ஒரு புதிய கட்சி உருவானது.[11]

கிறித்துவமும் கல்வியும்

[தொகு]

மிசோவின் முன்னோர்கள் எந்த எழுத்து முறையையும் கொண்டிருக்கவில்லை, அவர்களின் தொல் வழிபாட்டின் அடிப்படையில் இயற்கை சார்ந்த அனைத்துதையும் வணங்கினர். பிரித்தானியர் அவர்களை திறமையாக நிர்வாகம் செய்ய வசதியாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் கிறித்துவத்துவத்துக்கு மாற்ற வேண்டியிருந்தது. இதற்கு தெளிவான தீர்வாக கிறித்தவ மறை பணிகளை ஊக்குவிப்பது என்றானது. லுஷாய் மலைப் பகுதிக்கு முதலில் வந்த மறை பணியாளர் வில்லியம் வில்லியம்ஸ் ஆவார். அந்த சமயத்தில் அவர் காசி மலைகளில் (இப்போது மேகாலயா) இல் பணியாற்றினார். என்றாலும் அவர் 1891 ஆண்டு மார்ச்ச் மாதம் ஒரு வாரம் மட்டும் வந்திருந்தார்.[12][13] 1894 சனவரி 11 இல், எப்.டபில்யூ. சவிட்ஜ் மற்றும் ஜே.எச். ஆர்ய்ட்டன் ஆகியோர் அபோரிஜினஸ் மிஷனின் ஆணைக்கிணங்க, அய்சால் வந்தடைந்ததனர். இது மிசோராமில் முறையான கல்வி மற்றும் கிறித்துவம் ஆகியன வளர காரணமானது. அவர்கள் திங்பூய் ஹுவான் டிலாங்கில் ("டீ கிரேடென்"), மெக்டொனால்ட் மலை, சர்க்காவத்தில் தங்கினர். அவர்கள் உடனடியாக இலத்தீன் எழுத்துகள் அடிப்படையில் மிசோவுக்கு எழுத்துக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சேவிட்ஜ் 1894 ஏப்ரல் 1 அன்று முதல் பள்ளியைத் தொடங்கினார். அவர்களது முதல் மாணவர்களாக சுகா மற்றும் தங்பன்கா ஆகியோர் இருந்தனர்.[14] மேலும் அவர்கள் லூக்கா மற்றும் யோவானுடைய நற்செய்திகளையும் மற்றும் திருத்தூதர் பணிகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டனர். அவர்கள் 1898 ஆம் ஆண்டில் லுஷாய மொழி (துலீயன் டயலிக்) இலக்கணம் மற்றும் அகராதி போன்றவற்றை உருவாக்கி வெளியிட்டனர். இதுவே மிசோ மொழியின் அடித்தளமாக மாறியது.[15] 1903 ஆம் ஆண்டில் லண்டனின் பாப்டிஸ்ட் மிஷனரி சொசைட்டி (பி.எம்.எஸ்) லுங்கிண்டிற்கு அருகில் உள்ள செர்கானுக்கு லாரன் மற்றும் சேவிட்ச் ஆகியோரை அனுப்பி பாப்டிஸ்ட் தேவாலயத்தை அமைத்தது. அங்கிருந்து அவர்களால் தேவாலயம், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.[16] ஜே.எச் லாரனின் தம்பியும் மிஷனண்ட் எவாஞ்சலிக்கல் சர்ச் நிறுவனருமான யான ஆர்தர் லாரன் லுரைன் மற்றும் லூலாய் மலைகளின் தெற்குப் பகுதியில் உள்ள மாரா மக்கள் மத்தியில் முதன் முதலில் மறைபணியாற்றினார். அவர் மார்லாந்துக்கு (தற்போது மிசோரமின் தெற்குப் பகுதி மற்றும் பர்மாவின் சின் மாநிலத்துடன் இணைந்த பகுதி) சென்று 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 இல் செக்கார் (சியாகோ) கிராமத்தில் குடியேறினார். லாரனால் மெராவுக்கு எழுத்துக்களை உருவாக்கி, விவிலியம் மற்றும் பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை உருவாக்கினார்.[17] பெருமளவு மிசோ மக்களிடையே சுவிசேஷம் செய்யும் பணியை அவர் மேற்கொண்டார்.[18][19][20]

லுஷாய் மலை மாவட்டம்

[தொகு]

போர்டோலோய் துணைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி உரிமையை அளிக்க அரசாங்கம் ஏற்றுக் கொண்டது மேலும் இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. லுஷாய் மலை மாவட்ட தன்னாட்சி கவுன்சில் 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிசோக்களின் விருப்பமானது சுயாட்சியை விரும்புவதாக இருந்து. 1954 இல் மாநில மறுசீரமைப்பு ஆணையத்திடம் (SRC) திரிபுரா மற்றும் மணிப்பூரில் மிசோ மக்கள் மிகுதியாக உள்ள பகுதிகள் மற்றும் அஸ்ஸாமில் உள்ள மாவட்டக் கவுன்சில் பகுதி போன்றவற்றை ஒருங்கிணைந்த பிராந்தியமாக்க வேண்டி மாவட்ட கவுன்சில் மற்றும் மிசோ யூனியன் பிரதிநிதிகள் முறையிட்டனர். மாநில மறுசீரமைப்பு ஆணையம் செய்த பரிந்துரைக்களைக் கண்டு வடகிழக்கில் உள்ள பழங்குடி தலைவர்கள் மகிழ்ச்சி இழந்தனர். அவர்கள் 1955 ஆம் ஆண்டில் அய்சால் நகரில் சந்தித்து, ஒரு புதிய அரசியல் கட்சியாக, கிழக்கு இந்திய ஒன்றியம் (EITU) என்பதை உருவாக்கி, அசாமின் தங்கள் அனைத்து மலை மாவட்டங்களையும் உள்ளடக்கிய தனி மாநிலம் வேண்டி கோரிக்கை விடுத்தனர். மிசோ யூனியனில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து பலர் கிழக்கு இந்திய ஒன்றிய கட்சியில் (EITU) இணைந்தன. இந்த நேரத்தில், ஐக்கிய மிசோ விடுதலை அமைப்பும் (UMFO) கிழக்கு இந்திய ஒன்றிய கட்சியுடன் (EITU) இணைந்தது. பின்னர் மலைப்பிரதேச சிக்கல்களை சுலியா அமைச்சகம் புரிந்து கொண்டதையடுத்து, EITU தனி மலை மாநிலக் கோரிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.[21]

மௌடம் பஞ்சம்

[தொகு]

மிசோ வரலாற்றில் மௌடம் பஞ்சம் என்று குறிப்பிடப்படும் பெரும் பஞ்சமானது 1959 ஆம் ஆண்டில் மிசோ மலைகளில் பேரழிவை ஏற்படுத்தியது.[22] பஞ்சத்துக் காரணம், காட்டில் உள்ள மூங்கில்கள் பூத்ததுவே காரணமாகும், இதனால் எலிகளின் எண்ணிக்கை பெருகியது. எலிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் காரணமாக கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பயிர்கள் போன்றவை வெகுவாக அழிவை ஏற்படுத்தின. இதனால் பல மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கிடையில் 1955 இல் மிசோ கலாச்சார சங்கம் அதன் செயலாளரான பு லால்டெங்காவால் உருவாக்கப்பட்டது. 1960 மார்ச்சில், மிசோ கலாச்சார சங்கத்தின் பெயர் பஞ்சத்திற்கு எதிராக போராட 'மௌடம் முன்னணி' என மாற்றப்பட்டது. பின்னர் 1960 செப்டம்பரில் மிசோ தேசிய பஞ்ச முன்னணி (MNFF) என்று பெயர் மாற்றம் பெற்றது. அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை உள் கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் தேசிய பஞ்ச முன்னணியைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மிசோ இளைஞர்கள் செய்த உதவிப் பணிகளால் முன்னணி கணிசமாக புகழ் பெற்றது.[23]

கிளர்ச்சி

[தொகு]

பேரழிவிலிருந்து மீண்ட பிறகு மிசோ தேசிய பஞ்ச முன்னணி 1961 அக்டோபர் 22 அன்று மிசோ தேசிய முன்னணி (MNF) ஒரு புதிய அரசியல் அமைப்பாக மாறியது. இதன் குறிப்பிடத்தக்க இலக்காகாக சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட அகண்ட மிசோராமாக இருந்தது. இது அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சியாக 1966 பெப்ரவரி 28 அன்று உருவானது. இதைத் தொடர்ந்து அய்சால், லுங்க்லெய், சாவ்ங்தெ, சிக்மலாங் மற்றும் பிற இடங்களில் அரசு நிறுவங்கள் தாக்கப்பட்டன. 1966 மார்ச் 5 மற்றும் 6 அன்று அய்சால் நகரின் மீது இந்திய அரசு அயோவாலை டோபோனி மற்றும் ஹண்டர் ஜெட் வானூர்திகளைக் கொண்டு குண்டுவீசியது.[24] தன் நாட்டைச் சேர்ந்த குடிமக்களை ஒடுக்க இந்தியா விமானப்படை கொண்டு தாக்கியது இதுவே முதன் முறையாகும்.[25] அடுத்த நாள், பல மணிநேரங்களுக்கு பாரிய குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடந்தன, அதில் டஃப்ரூ மற்றும் ஷிஙா வேங் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சாம்பலாயின, என "அய்சால் நகரைச் சேர்ந்த 62 வயதான ரோதங்க்பூயாவை நினைவு கூர்ந்தார்.[26] மிசோ தேசிய முன்னணி 1967 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. மிசோ மாவட்ட கவுன்சில் குழுவானது 1971 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்ததுடன் மிசோரமுக்கு முழு மாநில அந்தஸ்தைக் கோரியது. இந்திய அரசாங்கம் மிசோ மலைகளை ஒன்றிய பிரதேசமாக 1971 சூலையில் மாற்ற முடிவு செய்தது. 1972 சனவரி 21 அன்று மிசோரம் என்ற பெயரில் ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மிசோரமுக்கு பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன, மக்களவைக்கு ஒன்று மாநிலங்களவைக்கு ஒன்று என ஒதுக்கப்பட்டன.[27]

மிசோரம் மாநிலப் பிறப்பு

[தொகு]

இந்தியப் பிரதமராக ராஜீவ் காந்தி 1984 இல் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. லால்டங்கா பிரதமரை 1985 பெப்ரவரி 15 அன்று சந்தித்தார். இரு தரப்புக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது. மிசோரம் சமாதான உடன்படிக்கையானது மிசோ தேசிய முன்னணி மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு இடையே 1986 சூனில் கையெழுத்தானது.[28] 1987 பிப்ரவரி 20 ஆம் தேதி மிசோரம் இந்தியக் கூட்டாட்சியில் ஒரு மாநிலமாக உருவானது.[29][30]

மேற்கோள்கள்

[தொகு]
 1. T. Raatan (2006). History, Religion and Culture of North East India. Isha Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8205-178-9.
 2. Strom, Donna (1 July 1980). "Christianity and Culture Change among the Mizoram". Missiology: an International Review 8 (3): 307–317. doi:10.1177/009182968000800304. 
 3. Lalsangkima Pachuau (2006). "Mizo "Sakhua" in Transition". Missiology 34 (1): 41–57. doi:10.1177/009182960603400105. https://archive.org/details/sim_missiology_2006-01_34_1/page/41. 
 4. Bertram Sausmarez Carey; Henry Newman Tuck (1896). The Chin Hills: a history of our people. Superintendent, government printing, Burma.
 5. Hluna, J.V. (2003). Mizoram Hmar Bial Missionary-te Chanchin. Aizawl, India: The Synod Literature & Publication Board.
 6. J. Meirion Lloyd (1991). History of the Church in Mizoram: Harvest in the Hills. Synod Publication Board.
 7. "Chapter 1. The terrifying tribesmen of the Mizo Hills". www.mizostory.org. Mizo Story. Archived from the original on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
 8. Champhai. "ZOLUTI (MARY WINCHESTER) CHANCHIN – Ama Ziak" [ZOLUTI (MARY WINCHESTER) CHANCHIN - Her Autobiography] (in Mizo). Kan Lungkham Champhai. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 9. A. Thanglura (1988). Mihrang leh Sahrang. Aizawl, India: Self. pp. 81–85, 93–96.
 10. Lewin TH Col. (2007) [1912]. A Fly on the Wheel: Or, How I Helped to Govern India. UK: Oxford University Press. pp. 2656–290.
 11. Chaterjee, Suhas (1985). Mizoram under the British rule. Mittal Publication. p. 225.
 12. "Page 2: William Williams visits the Mizo Hills". Mizo Story. Archived from the original on 13 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 13. PimPom (13 February 2012). "Rev. William Williams leh Mizoram a a sulhnu hmasa" [Rev. William Williams and his initial works in Mizoram] (in Mizo). mi(sual).com. Archived from the original on 10 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
 14. Suresh K. Sharma (2006). Documents on North-East India: Mizoram. Mittal Publications. pp. 63–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183240864.
 15. "Lorrain and Savidge 1898". The World Atlas of Language Structures Online. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
 16. BMS. "Mizoram". BMS World Mission. Archived from the original on 15 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 17. K. Robin (2008). "The Lakhers in Mizoram". In Jagadish K. Patnaik (ed.). Mirzoram, Dimensions and Perspectives: Society, Economy, and Polity. New Delhi: Concept Pub. Co. pp. 325–327. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180695148.
 18. "GENERAL BACKGROUND OF THE MARA EVANGELICAL CHURCH". Mara Evangelical Church. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
 19. "Mara Evangelical Church". World Council of Churches. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
 20. "A BRIEF HISTORY OF THE EVANGELICAL CHURCH OF MARALAND". Evangelical Church Of Maraland. Archived from the original on 2 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 21. J Zorema (2007). Indirect Rule In Mizoram 1890-1954. Mitta Publications.
 22. "Mautam, the flowers of famine". Indian Express. http://www.indianexpress.com/news/mautam-the-flowers-of-famine/203113/. பார்த்த நாள்: 17 August 2012. 
 23. Jagdish, Patnaik (2008). Mizoram, Dimensions and Perspectives: Society, Economy, and Polity. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180695148. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
 24. Sanjeev Miglani (19 April 2010). "Bombing your own people: the use of air power in South Asia". ராய்ட்டர்ஸ். Archived from the original on 2010-11-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-14.
 25. Lalchungnunga (1994). Mizoram politics of regionalism and national integration. Reliance Publishing House.
 26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-12-05.
 27. Baruah, Sanjib (2007). Durable Disorder: Understanding the Politics of Northeast India. Oxford University Press.
 28. Chaterjee, Suhas. Making of Mizoram: Role of Laldenga, Volume 2. MD Publication.
 29. Nunthara, C. (1996). Mizoram : society and polity (1. publ. ed.). New Delhi: Indus Publ. Co. pp. 290–293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-059-0. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
 30. Chatterjee, Suhas (1994). Making of Mizoram : role of Laldenga (Two volumes ed.). New Delhi: M.D. Publications. pp. 320–324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85880-38-9. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோரத்தின்_வரலாறு&oldid=4041195" இலிருந்து மீள்விக்கப்பட்டது