பதியப்பட்ட வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதியப்பட்ட வரலாறு அல்லது எழுதப்பட்ட வரலாறு என்பது, எழுத்து மூலமான பதிவையோ பிற ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களையோ அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாறு சார்ந்த விபரிப்பைக் குறிக்கிறது. பதியப்பட்ட வரலாறு, கடந்தகாலம் குறித்த பிற விபரிப்புகளான தொன்மம் சார்ந்த, வாய்மொழி மூல, தொல்லியல் சார்ந்த விபரிப்புக்களில் இருந்தும் வேறுபட்டது.

பரந்த உலக வரலாற்றைப் பொறுத்தவரை, பதியப்பட்ட வரலாறு, ஏறத்தாழ கிமு 4ம் ஆயிரவாண்டுகளின் பண்டைய உலகம் குறித்த விபரங்களோடு தொடங்குகிறது. இது எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்ட காலத்துடன் பொருந்துகிறது. சில புவியியற் பகுதிகள் அல்லது பண்பாடுகளைப் பொறுத்தவரை, பதியப்பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலேயே தொடங்குகிறது. அங்கே எழுத்துமூல ஆவணங்கள் அதிகம் பயன்பாட்டில் இல்லாதிருந்தமையே இதற்குக் காரணமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதியப்பட்ட_வரலாறு&oldid=1994377" இருந்து மீள்விக்கப்பட்டது