மிசோ மலைகள்

ஆள்கூறுகள்: 23°10′N 92°50′E / 23.167°N 92.833°E / 23.167; 92.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசோ மலைகள்
மிசோ மலை
உயர்ந்த இடம்
உச்சிபுவாங்பூய்
உயரம்2,157 m (7,077 அடி)
ஆள்கூறு23°10′N 92°50′E / 23.167°N 92.833°E / 23.167; 92.833
புவியியல்
மிசோ மலைகள் is located in இந்தியா
மிசோ மலைகள்
மிசோ மலைகள்
இந்தியாவில் அமைவிடம்
அமைவிடம்மிசோரமும் திரிபுராவும், இந்தியா
மூலத் தொடர்பட்கை மலைத்தொடர்

மிசோ மலைகள் (Mizo Hills) அல்லது உலூசாய் மலைகள் (Lushai) இந்தியாவின் மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலத்திலுள்ள மலைத்தொடர் ஆகும். இது பட்கை மலைத்தொடர் தொகுதியின் ஒரு பகுதியாகும். இதன் உயரமான புள்ளி, புவாங்பூய் 2,157 மீ உயரம் உடையது. புவாங்பூயின் மற்றொரு பெயர் நீல மலை ஆகும்[1].

தாவரங்களும் விலங்குகளும்[தொகு]

இந்த மலைகளின் பெரும்பகுதி அடர்ந்த மூங்கில் காடுகளைக் கொண்டிருக்கின்றது. இதன் கிழக்கு பகுதிகளில் குறைவான மழைப் பொழிவு இருப்பதால் புற்கள் மறைத்த சரிவுகள் காணப்படுகின்றன. உலுசாய் மலைகளில் உயரமான கொடுமுடி புவாங்பூய் எனும் நீல மலை ஆகும்[2] .

குடியிருப்பவர்கள்[தொகு]

இந்த மலையில் குடியிருப்பவர்கள் உலுசாய்களும் பிற மிசோ பழங்குடியினர்களும் ஆவர், ஆனால் மக்கட்தொகை மிகமிகக் குறைவு. தெரிந்த காலம் முதல் இங்குக் குடியிருப்பவர்கள் குகிகளாவர். 1840 இல் வடக்கிலிருந்து படையெடுக்கும் வரை உலுசாய்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இவர்கள் 1849 இல் பிரித்தானியர்களை முதலில் தாக்கியுள்ளனர், வட கிழக்கு இந்தியாவில் கலகம் செய்த பழங்குடியினருள் இவர்கலே முதன்மையானவர்கள், ஆனால் 1890 ஆம் ஆண்டுக்குப் பிறகு வட உலுசாய் கிராமங்களில் அமைதி நிலவியது. 1892 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிழக்கு உலுசாய்கள் குறையத் தொடங்கினர்[2]. தென் உலுசாய் மலைநாட்டின் மேலாண்மை 1898 இல் வங்கத்திலிருந்து அசாமிற்கு மாற்றப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

நூல்தொகை[தொகு]

  • T. H. Lewin, Wild Races of N.E. India (1870)
  • Lushai Hills Gazetteer (Calcutta, 1906)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_மலைகள்&oldid=3745666" இருந்து மீள்விக்கப்பட்டது