உள்ளடக்கத்துக்குச் செல்

இலத்தீன் எழுத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்தீன் எழுத்துக்கள்
எழுத்து முறை வகை
எழுத்து நெடுங்கணக்கு அல்லது மொழியின் அகர வரிசை அல்லது எழுத்துத் தொகுதி
காலக்கட்டம்
~ கிமு 700 முதல் இன்று வரை
திசைLeft-to-right Edit on Wikidata
மொழிகள்இலத்தீன் மற்றும் உரோமானிய மொழிகள்; பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள்; உரோமன்மயமாக்கம் ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே பயன்படுத்தப்படுகின்றது.
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
எகிப்திய பட எழுத்து
 • முன்-சினைட்டியம்
  • முந்திய-கனனிய எழுத்துக்கள்
தோற்றுவித்த முறைகள்
பெருமளவு: இலத்தீனிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களைப் பார்க்கவும்.
நெருக்கமான முறைகள்
சிரிலியம்
காப்டிய எழுத்துக்கள்
ஆர்மேனியம்
ருனியம்/புதாரியம்
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Latn (215), ​Latin
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Latin
ஒருங்குறியில் இலத்தீன் எழுத்துக்கள் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

இலத்தீன் எழுத்துக்கள் அல்லது உரோமன் எழுத்துக்கள் என்பவை இன்று உலகில் மிகவும் அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள நெடுங்கணக்கு எழுத்து முறை ஆகும். இது கிரேக்க எழுத்து முறையின் மேற்கத்திய வகையில் இருந்து வளர்ந்தது. தொடக்கத்தில் இது இலத்தீன் மொழியை எழுதுவதற்காகப் பண்டைய உரோமர்களால் பயன்படுத்தப்பட்டது.

இலத்தீன் எழுத்து முறைமை அனைத்து வகை எழுத்துக்களுக்கும் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது. இது, உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதும் முறை ஆகும். 70% உலக மக்கள்தொகையால் இலத்தீன் எழுத்து முறைமை பயன்படுத்தப்படுகிறது.[1] மத்திய காலத்தில் இலத்தீன் மொழியிலிருந்து நேரடியாக உருவான உரோமானிய மொழிகளையும், செல்டிய, செருமானிய, பால்டிய மொழிகளையும், சில சிலாவிய மொழிகளையும் எழுதப் பயன்பட்டது. இறுதியாக இது ஐரோப்பாவின் பெரும்பான்மையான மொழிகளை எழுதுவதற்கு இப்போது பயன்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றவாத ஆட்சிக்கால நடவடிக்கைகளினாலும், கிறித்தவ மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளினாலும், இந்த எழுத்து முறை கடல்கடந்த நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்க-இந்திய மொழிகள், தாயக ஆத்திரேலிய மொழிகள், ஆத்திரோனீசிய மொழிகள், சில கிழக்காசிய மொழிகள், சில ஆப்பிரிக்க மொழிகள் ஆகியவற்றை எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. மிக அண்மைக் காலத்தில், பெரும்பாலான ஐரோப்பிய மொழியியலாளர்கள், ஐரோப்பிய மொழிகள் அல்லாத மொழிகளை ஒலிமாற்றம் செய்வதற்கு, இலத்தீன் எழுத்து முறையை அல்லது இவ்வெழுத்து முறையைத் தழுவி அமைந்த அனைத்துலக ஒலியன் எழுத்து முறையைப் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.

பெயர்

[தொகு]

இந்த எழுத்து முறைமையானது, உரோமன் எழுத்து முறைமை அல்லது இலத்தீன் எழுத்து முறைமை என்று அழைக்கப்படுகிறது. இது பண்டைய உரோமில் தோன்றியது என்பதைக் குறிப்பிடுகிறது.

ஒலிபெயர்ப்பு[2] சூழலில் பெரும்பாலும், "உரோமானியமயமாக்கல்"[3] அல்லது "உரோமானிசம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. "ஒருங்குறி இலத்தீன்"[4] என்ற வார்த்தையை சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் தரநிலையாகப் பயன்படுத்துகிறது.[5]

வரலாறு

[தொகு]

பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள்:

[தொகு]

கி.மு .1 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தை உரோமர்கள் வென்ற பிறகு, இலத்தீன் மொழியானது கிரேக்க எழுத்துக்களான ஒய் (Y) மற்றும் இசட் (Z) ஆகியவற்றைத் தனதாக ஏற்றுக்கொண்டது. கிரேக்க கடன் வார்த்தைகளை எழுத ஒய் மற்றும் இசட் ஆகிய எழுத்துக்கள் இறுதியில் வைத்துப் பயன்படுத்தப்பட்டன. மூன்று கூடுதல் எழுத்துக்களை அறிமுகப்படுத்த பேரரசர் கிளாடியசு எடுத்த முயற்சிகள் வீணாகின. இதனால், பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள், 23 எழுத்துக்களைக் கொண்டிருந்தன.

முற்கால இலத்தீன் எழுத்துக்கள்

(A)

இபி

(B)

இஃசி

(C)

இஃடி

(D)

(E)

எஃபு

(F)

இசட்

(Z)

எச்

(H)

(I)

கே

(K)

எல்

(L)

எம்

(M)

என்

(N)

(O)

பி

(P)

கியூ

(Q)

ஆர்

(R)

எஃசு

(S)

டி

(T)

வி

(V)

எக்சு

(X)

செந்நெறிக்கால இலத்தீன் எழுத்துக்கள்
எழுத்து

(A)

இபி

(B)

இஃசி (C) இஃடி

(D)

(E)

எஃபு

(F)

சி

(G)

எச்

(H)

பெயர் இபே கே இடே ஏ ē எஃபு இகே(g) அஃகா
உச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /aː/ /beː/ /keː/ /deː/ /eː/ /ef/ /geː/ /haː/
எழுத்து

(I)

கே

(K)

எல்

(L)

எம்

(M)

என்

(N)

(O)

பி

(P)

கியூ

(Q)

பெயர் கே எல் எம் என் பே கியூ
உச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /iː/ /kaː/ /el/ /em/ /en/ /oː/ /peː/ /kʷuː/
எழுத்து ஆர்

(R)

எஃசு

(S)

டி

(T)

வி

(V)

எக்சு

(X)

ஒய்

(Y)

இசட்

(Z)

பெயர் ஏர் எஃசு டே(t) இயூ எக்சு ī Graeca கிரேக்கா இசீட்டா
உச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /er/ /es/ /teː/ /uː/ /eks/ /iː ˈgraika/ /ˈzeːta/
கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த இலத்தீன் நெடுங்கணக்கு
A B C D E F Z
H I K L M N O
P Q R S T V X

விரிந்து பரவல்

[தொகு]
இலத்தீன் எழுத்து முறைமையின் பரவல். இருண்ட பச்சைப் பகுதிகள் இலத்தீன் எழுத்து முறைமையை மட்டுமே முதன்மையாகக் கொண்டிருக்கும் நாடுகளை காட்டுகின்றன. இளம் பசுமைப் பகுதிகள் இலத்தீன் எழுத்து முறைமையுடன் மற்ற எழுத்து முறைமைகள் இணைந்த நாடுகளைக் காட்டுகின்றன. இலத்தீன் எழுத்துக்கள் சிலநேரங்களில் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாம்பல் நிறப் பகுதிகள், இலத்தீன் எழுத்துக்கள், (எகிப்தில் ஆங்கிலத்துடனும், அல்சீரியாவில் பிரஞ்சு மொழியுடனும்) அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது மொழி பயன்பாட்டு நாடுகளைக் காட்டுகின்றன. இலத்தின் ஒலிபெயர்ப்பு சீன பைனையின் மொழியில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுக்கிறது.

இத்தாலியன் தீபகற்பத்திலிருந்து, மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு உரோமன் பேரரசின் விரிவாக்கம் அடைந்ததனால், இலத்தீன் எழுத்துக்கள் அந்நாடுகளிலும் பரவியது.

கிரேக்கம், துருக்கி, லெவந்த் மற்றும் எகிப்து போன்ற பேரரசுகளின் கிழக்குப் பகுதியினர் கிரேக்க இலிங்குவா பிரான்கா மொழியைப் பயன்படுத்தினர். ஆனால் இலத்தீன் மொழி, மேற்கத்திய நாடுகளில் பரவலாகப் பேசப்பட்டது. மேற்கத்திய மேற்கத்திய ரோமானிய மொழிகள் இலத்தீன் மொழியிலிருந்து உருவானதால் இலத்தீன் எழுத்துக்களை பயன்பாடு அதிகரித்தது.

மத்திய காலங்கள்

[தொகு]

கிழக்கு சுலாவிக் மொழிகளின் பேச்சாளர்கள் பொதுவாக சிரிலிக் மற்றும் பழமைவாத கிறித்துவத்தை ஏற்றுக்கொண்டனர். செரிபிய நாட்டில், இலத்தீன் மொழியுடன் இணைத்து சிரிலிக் மொழியும் பயன்படுத்துகிறது.[6]

19 ஆம் நூற்றாண்டு முதல்

[தொகு]

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உருமேனியர்கள் இலத்தீன் எழுத்துக்களுக்குத் திரும்பினர். அவர்கள் 1439 இல் புளோரன்சு கவுன்சில்[7] முடியும் வரை இலத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். உரோமானியர்கள், 1453 ஆம் ஆண்டில் பைசண்டைன் (Byzantine) கிரேக்க கான்சுடாண்டினோபுல் (Constantinople) வீழ்ச்சி அடைந்த பின்னர் உருசியா பெருமளவு செல்வாக்கு பெற்றது. மேலும் கிரேக்க மரபுவழி இயூதரின் சிறப்புக்குரிய மூதாதையர்களின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. சுலாவிய சிரிலிக்கிற்கு ஊக்கம் பெற்றது.

20 ஆம் நூற்றாண்டு முதல்

[தொகு]

கசகத்தான் (Kazakhstan), கிர்கிசுத்தான் (Kyrgyzstan), மற்றும் ஈரானிய மொழி பேசும் தசிகித்தான் (Tajikistan) போன்ற பகுதிகளில், அரேபிய எழுத்து முறைமைகளை இலத்தீன் அரேபிய எழுத்து முறைமைகள் இடப்பெயர்ச்சி செய்தன.

2025 ஆம் ஆண்டிற்குள், கத்தோலிக்க சிரிலிக் எழுத்து மொழியை, இலத்தீன் எழுத்துக்களால் இடப்பெயர்ச்சி செய்தல் வேண்டும் என 2015 ஆம் ஆண்டில், கசாக் அரசாங்கம் அறிவித்துள்ளது.[8]

எழுத்து

A

இபி

B

இஃசி

C

இஃடி

D

E

எஃபு

F

சி

G

எச்

H

I

கே

K

எல்

L

எம்

M

என்

N

எழுத்தின் இலத்தீன் பெயர் ā (ஆ) bē (இபே) cē (சே) dē (இடே) ē (ஏ) ef (எஃபு) gē ('கே) hā (அஃகா) ī (ஈ) kā (கா) el (எல்) em (எம்) en (என்)
இலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /aː/ /beː/ /keː/ /deː/ /eː/ /ef/ /geː/ /haː/ /iː/ /kaː/ /el/ /em/ /en/
எழுத்து

O

பி

P

கியூ

Q

ஆர்

R

எஃசு

S

டி

T

வி

V

எக்சு

X

ஒய்

Y

இஸட்

Z

எழுத்தின் இலத்தீன் பெயர் ō (ஓ) pē (பே) qū (கியூ) er (ஏர்) es (எஃசு) tē (தே) ū (ஊ) ex (எக்சு) ī கிரேக்கா zēta (*சீட்டா)
இலத்தீன்

(உச்சரிப்பு)

(பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி)

/oː/ /peː/ /kʷuː/ /er/ /es/ /teː/ /uː/ /eks/ /iː 'graika/ /'zeːta/
   உதட்டு ஒலிகள் நுனிநாப் பல்லின ஒலிகள் முன்னண்ணவின ஒலிகள் மேலண்ணத்தின் ஒலிகள் குரல்வளை ஒலி
சமநிலை உதட்டு ஒலி
வல்லெழுத்து voiced /b/ /d/ /ɡ/  
voiceless /p/ /t/   /k/ /kʷ/
உரசொலி voiced   /z/
voiceless /f/ /s/ /h/
மூக்கொலி /m/ /n/      
ரகர ஒலி /r/      
உயிர்ப்போலி   /l/ /j/ /w/

புதிய இலத்தீன் எழுத்துக்கள்

[தொகு]
உரோம எழுத்துக்கள் உச்சரிப்பு
மரபார்ந்த மேற்கத்திய  மையம் கிழக்குச் சீமை
பிரான்சு இங்கிலாந்து போர்த்துக்கல் சுபெயின் இத்தாலி ரோமானியா ஜேர்மனி நெதர்லாந்து ஸ்கண்டினேவியா
c
முன் "æ", "e", "i", "œ", y
/ k / / s / / s / / s / / θ / / tʃ / / tʃ / / ts / / s / / s /
cc
முன் "æ", "e", "i", "œ", "y"
/ kk / / ks / / ks / / ss / / kθ / / ttʃ / / ktʃ / / kts / / ss / / ss /
ch / kʰ / / k / / k / / k / / k / / k / / k / / k /, / x / / x / / k /
g
முன் "æ", "e", i", "œ", "y"
/ ɡ / / ʒ / / dʒ / / ʒ / / x / / dʒ / / dʒ / / ɡ / / ɣ / or / x / / j /
j / j / / j / / j / / j / / j /
qu
முன் "a", "o", "u"
/ kʷ / / kw / / kw / / kw / / kw / / kw / / kv / / kv / / kv / / kv /
qu
முன் "æ", "e", "i"
/ k / / k / / k /
sc
முன் "æ", "e", "i", "œ", "y"
/ sk / / s / / s / / s / / sθ / / ʃ / / stʃ /, / sk /
(முன்னர் / ʃt /)
/ sts / / s / / s /
t
முன் அசையழுத்தம் i+உயிரெழுத்து "s", "t", "x" எழுத்துகளுக்கு ஆரம்பத்தில் அல்லது முடிவில்
/ t / / ʃ / / θ / / ts / / t / / ts / / ts / / ts /
v / w / / v / / v / / v / / b / ([β]) / v / / v / / v / / v / / v /
z / dz / / z / / z / / z / / θ / / dz / / z / / ts / / z / / s /
கி.மு. 6 ம் நூற்றாண்டு இடியூனோசு (Duenos) கல்வெட்டு, பழைய இலத்தீன் எழுத்துக்களின் முந்தைய அறியப்பட்ட வடிவங்களைக் காட்டுகிறது

மேலும் பார்க்க

[தொகு]
 • உரோமானிய எழுத்துக்கள்
 • மொழிகளின் எழுத்து முறைமை மூலப்பட்டியல்
 • மேற்கு இலத்தீன் எழுத்து முறைமை (கண்னியாக்கம்)
 • கணிதத்தில் இலத்தீன் எழுத்துகள் பயன்பாடு

மேற்கோள்கள்

[தொகு]
 1. Haarmann 2004, ப. 96
 2. "Search results | BSI Group". Bsigroup.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
 3. "Romanisation_systems". Pcgn.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
 4. "ISO 15924 – Code List in English". Unicode.org. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.
 5. "Search – ISO". Iso.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
 6. "ZAKON O SLUŽBENOJ UPOTREBI JEZIKA I PISAMA" (PDF). Ombudsman.rs. 17 May 2010. Archived from the original (PDF) on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-05.
 7. "Descriptio_Moldaviae". La.wikisource.org. 1714. பார்க்கப்பட்ட நாள் 2014-09-14.
 8. Kazakh language to be converted to Latin alphabet – MCS RK. Inform.kz (30 January 2015). Retrieved on 2015-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்தீன்_எழுத்துகள்&oldid=3544524" இலிருந்து மீள்விக்கப்பட்டது