காசி மலை

ஆள்கூறுகள்: 25°35′N 91°38′E / 25.583°N 91.633°E / 25.583; 91.633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசி மலை (The Khasi Hills) காரோ-காசி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பட்காய் பகுதியிலும் அமைந்துள்ளது. இம்மலைப்பகுதியானது 1970 ஆம் ஆண்டிற்கு முன் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மலை சூழலியல் பகுதியாகும். இது அமைந்திருக்கும் மாவட்டம் காசி மலை மாவட்டம் ஆகும். இம்மலையிலுள்ள உயர்ந்த சிகரம் லும் ஷைலோங் 1968 மீட்டர்கள் உயரமுடையது. இதன் அமைவிடம் 25° 35′ 0″ வடக்கு, 91° 38′ 0″ கிழக்கு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_மலை&oldid=2113169" இருந்து மீள்விக்கப்பட்டது