வாய்மொழி வரலாறு
Appearance
வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக நபர்கள், சமூகங்கள், நிகழ்வுகள், விடயங்கள் பற்றி வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல், பாதுகாத்தல், பகிர்தல், விளங்க்கிக்கொள்தல் முறையையும், அது தொடர்பான கற்கையையும், அந்தச் சேகரிப்புக்களையும் குறிக்கிறது.[1] வாய்மொழி வரலாறு எழுத்தாவணங்களைத் தாண்டி தகவலைப் பெற, பதிவுசெய்ய முனைகிறது. பொதுவாக வாய்மொழி வரலாறு பங்கேற்பாளர்களுடான நேர்காணலாக அமைகிறது. இந்த நேர்காணல் ஒலி அல்லது நிகழ்படமாக பதிவுசெய்யப்படுகின்றது. இந்த மூலங்கள் பின்னர் படி எழுதப்படலாம் (transcribe), மொழி பெயர்க்கப்படலாம், குறிப்புரைக்கப்படலாம். இவை பெரும்பாலும் ஆவணகங்களால், நூலகங்களால் பாதுகாக்கப்பட்டு அணுக்கப்படுத்தப்படுகிறன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oral History: Defined". oralhistory.org. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2016.