அகிச்சத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 28°22′16″N 79°08′10″E / 28.371°N 79.136°E / 28.371; 79.136

Multi-coloured political map
வட பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்த அகிச்சத்ரா. உத்திரப்பிரதேசத்தின், பரேலி மாவட்டம் ராம்சகர் கிராமத்தினருகே கண்டறியப்பட்ட இந்த நகரின் மிச்சங்கள்.

அகிச்சத்ரா (Ahichchhatra) என்பது முற் காலத்தில் வட பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்தது. கி.பி. 10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளமாக இருந்தது தெரியவந்தது. இங்கு கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷானர் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுடுமண் தெய்வ உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகிய முக்கியமான பொருட்கள் கண்டறியப்பட்டன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அகிச்சத்ரா". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 21. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிச்சத்ரா&oldid=2678318" இருந்து மீள்விக்கப்பட்டது