பிற்கால குப்தர் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிபி 490–கிபி 750
கிபி 590ல் பிற்கால குப்த வம்சத்தினர் உச்ச நிலையில் இருந்த போது மகத நாடு (பழுப்பு நிறத்தில்) மற்றும் பக்கத்து நாடுகளும்[1]
கிபி 625ல் ஹர்ஷவர்தனர் ஆட்சியில் மகதம் உள்ளிட்ட பிற சிற்றரசுகள்
கிபி 625ல் ஹர்ஷவர்தனர் ஆட்சியில் மகதம் உள்ளிட்ட பிற சிற்றரசுகள்
தலைநகரம்பாடலிபுத்திரம்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
கிபி 490
• முடிவு
கிபி 750
முந்தையது
பின்னையது
[[குப்தப் பேரரசு]]
[[அல்கான் ஹூனர்கள்]]
[[மௌகரி வம்சம்]]
புஷ்யபூதி வம்சம்

பிற்கால குப்த வம்சம் (Later Gupta dynasty) பண்டைய இந்தியாவின் கிழக்கில் உள்ள மகத நாட்டை குப்தப் பேரரசுக்கு பின்னர் கிபி 490 முதல் 750 முடிய ஆண்டனர். பிற்கால குப்த வம்சத்தினர் தங்களை பாரம்பரிய குப்த வம்சத்தின் வழிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டனர்.[2]

வரலாறு[தொகு]

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பிற்கால குப்தர்கள் மகத நாட்டை ஆட்சி செய்தனர்.[3] பிற்கால குப்த வம்சத்தை நிறுவிய மன்னர் கிருஷ்ண குப்தரின் மகளை மௌகரி வம்ச இளவரசன் ஆதித்திய சேனனை மணந்தார். ஆதித்திய சேனனின் அப்சத் கல்வெட்டின் படி, கிருஷ்ண குப்தரின் பேரன் ஜீவித குப்தர் இமயமலை நாடுகள் மற்றும் வங்காளத்தின் தெற்கு பகுதிகள் மீது படையெடுத்தான் எனக்கூறுகிறது.[4]

ஜீவிதகுப்தரின் மகனான குமார குப்தரின் ஆட்சியின் போது மௌகரி வம்ச மன்னர் ஈசானவர்மனை 554ல் போரில் வென்றார். மௌகரிகள் குமார குப்தரின் மகன் தாமோதர குப்தரை வென்றனர். [4] தாமோதர குப்தரின் மகன் மகாசேனா குப்தர் புஷ்யபூதி வம்சத்தவர்களுடன் கூட்டணி அமைத்தார். மேலும் மகாசேனா குப்தரின் சகோதரியை தானேசர் மன்னர் ஆதித்தியவர்தனுக்கு மணமுடித்தார். மகாசேனா குப்தர் காமரூபம் மீது படையெடுத்து மன்னர் சுஸ்வதிதா வர்மனை வென்றார்.[4] அதே நேரத்தில் மகத நாட்டின் மீது மௌகரி வம்ச மன்னர் சர்வவர்மன், காமரூப மன்னர் சுப்ரதிஷ்டா வர்மன் மற்றும் திபெத்திய மன்னர் சோங்சென் காம்போ படையெடுத்தனர். போரில் மௌகாரி மன்னன் சர்வ வர்மன், 575ல் தாமோதர குப்தனை தோற்கடித்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் சர்வ வர்மன் தற்கால உத்தரப் பிரதேசம் முழுமைக்கும் ஆட்சியாளரானார்.[5][6] இச்சூழ்நிலையில் மகாசேன குப்தர் மகதத்தை விட்டு மால்வாவிற்கு தப்பிச் சென்றார். அதே நேரத்தில் புஷ்யபூதி வம்ச பேரரசர் ஹர்ஷவர்தனர் (ஆட்சிக் காலம் 606–647) மகத நாட்டில் பிற்கால குப்தர்களின் ஆட்சியை நிலைநிறுத்தி, தனது பேரரசின் சிற்றரசர்களில் ஒருவரான நியமித்தார்.[3]

ஹர்சவர்தனரின் இறப்பிற்குப் பின் பிற்கால குப்த வம்சத்து மன்னர் ஆதித்திய சேனன் மகத நாட்டை, வடக்கில் கங்கை ஆறு முதல் தெற்கே சோட்டா நாக்பூர் மேட்டுநிலம், மேற்கில் கோமதி ஆறு, கிழக்கில் வங்காள விரிகுடா வரை விரிவாக்கம் செய்தார்.[7] இறுதியாக பிற்கால குப்த வம்ச மன்னர் ஆதித்திய சேனன் சாளுக்கியர்களால் தோற்கடிப்பட்டார்.[8]

பிற்கால குப்த வம்சத்தின் இறுதி மன்னராக இரண்டாம் ஜீவித குப்தரை, 750ல் கன்னோசி நாட்டின் வர்மன் வம்ச மன்னர் யசோவர்மன் வென்று, பிற்கால குப்த வம்சத்தை முடிவு கட்டினார்.[7]

ஆட்சியாளர்கள்[தொகு]

அறியப்பட்ட பிற்கால குப்த வம்ச ஆட்சியாளர்கள் பட்டியல்:[9][10][11]

மன்னர் ஆதித்திய சேனன் (ஆட்சிக் காலம் 655-680), பிற்கால குப்த வம்ச மன்னர்களின் பெயர்களை குப்தர் எழுத்துமுறையில் பொறித்த கல்வெட்டு[12]
  • கிருஷ்ண குப்தர் - கிபி 490-505
  • அர்ச குப்தர் - 505-525
  • ஜீவித குப்தர்- 525-550
  • குமார குப்தர் - 550-560
  • தாமோதர குப்தன் - 560-562
  • மகாசேனா குப்தர் - 562-601
  • மாதவ குப்தர் - 601-655
  • ஆதித்திய சேனன் - 655-680
  • இரண்டாம் ஜீவித குப்தர

ஜெயபுர குப்தர்கள்[தொகு]

தற்கால பிகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டப் பகுதிகளைக் கொண்ட ஜெயபுரம் எனும் பகுதியை கிபி 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மன்னர்கள் தங்களை பிற்கால குப்த வம்சத்தவர்கள் எனக்கூறிக்கொண்டனர். [13] இதன் ஆட்சியாளர்கள் குறித்த செப்புப் பட்டயம் 1919ல் கண்டுபிடிக்கப்பட்டது.[14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. பக். 145, map XIV.1 (i). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0226742210. https://dsal.uchicago.edu/reference/schwartzberg/pager.html?object=182. 
  2. Sailendra Nath Sen 1999, ப. 246.
  3. 3.0 3.1 Karl J. Schmidt 2015, ப. 26.
  4. 4.0 4.1 4.2 Sailendra Nath Sen 1999, ப. 247.
  5. Sinha, Bindeshwari Prasad (1977) (in en). Dynastic History of Magadha, Cir. 450-1200 A.D.. Abhinav Publications. பக். 119-120. https://books.google.com/books?id=V3KDaZY85wYC&pg=PA119. 
  6. Mookerji, Radha Kumud (1 January 2016) (in en). Harsha: Calcutta University Readership Lectures 1925. Motilal Banarsidass. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0862-1. https://books.google.com/books?id=q30zEAAAQBAJ&pg=PA55. 
  7. 7.0 7.1 Sailendra Nath Sen 1999, ப. 248.
  8. Alain Daniélou 2003, ப. 151.
  9. Ronald M. Davidson 2012, ப. 35.
  10. Sailendra Nath Sen 1999, ப. 247-248.
  11. Hans Bakker 2014, ப. 83.
  12. Aphsad inscription of Ādityasena
  13. Chakrabarty, Dilip (2010). The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the Ancient Indian Dynasties. Oxford University Press. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199088324. https://books.google.com/books?id=EIAyDwAAQBAJ&dq=khayaravala+pithi&pg=PT115. 
  14. Kumar, Anil (2000). "THE PANCHOBH COPPER-PLATE OF SAMGRAMA GUPTA: A STUDY". Proceedings of the Indian History Congress 61: 1316. 

ஊசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிற்கால_குப்தர்_வம்சம்&oldid=3623397" இலிருந்து மீள்விக்கப்பட்டது