உள்ளடக்கத்துக்குச் செல்

தொச்சாரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொச்சாரியர்கள் (Tocharians) எனப்படுவர்கள் தொச்சாரிய மொழிகளை பேசிய மக்கள் ஆவர். இம்மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஆகும். பொ. ஊ. 400 முதல் பொ. ஊ. 1200 வரையிலான தோராயமான காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 7,600 பதிவேடுகளில் இருந்து இம்மொழிகள் அறியப்படுகின்றன. சீனாவின் தற்போதைய சிஞ்சியாங்கின் தாரிம் வடிநிலத்தின் வடக்கு நுனியில் இப்பதிவேடுகள் கண்டெடுக்கப்பட்டன.[1] பண்டைக் கால கிரேக்க நூல்களில் பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டு முதல் பாக்தீரியா பகுதியை ஆக்கிரமித்திருந்த தொக்கரோய் (இலத்தீன் தொச்சாரி) என்று அழைக்கப்பட்ட மக்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட மக்களுக்கு "தொச்சாரியர்கள்" என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இந்த அடையாளப்படுத்தலானது பொதுவாக தவறு எனக் கருதப்படுகிறது. எனினும், தொச்சாரியர்கள் என்ற பெயரானது இந்த மொழிகள் மற்றும் இதை பேசியவர்களுக்கு பொதுவான பெயராக வழங்கப்படுகிறது. இவர்களது உண்மையான இனப் பெயர் என்னவென்று தெரியவில்லை. எனினும் இவர்கள் தங்களைத் தாமே அக்னி, குசி மற்றும் குரோரன் அல்லது சமஸ்கிருத நூல்களில் அக்னியா, குச்சியா என்று குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. (Mallory 2015, ப. 4).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொச்சாரியர்கள்&oldid=3780725" இலிருந்து மீள்விக்கப்பட்டது