கதிரவ மறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
11 ஆகஸ்ட், 1999ல் ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு- இதில் பதுநிலவு நிறமண்டலம் (சிவப்பு) மற்றும் கொரோனா ஆகிய மூன்றும் தெரிகிறது.
முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).
அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து

கதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே புதுநிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது.[1] கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன. இக்கதிரவ மறைப்பு அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.

கதிரவ மறைப்பின் போது நிலவின் நிழல் புவியின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.[2]

கதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பு உச்ச நிலையை மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதற்கு முன்பு அதன் உச்ச நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

வகைகள்[தொகு]

கதிரவ மறைப்பில் நான்கு வகைகள் உள்ளன. அவை:

  • முழுமையான கதிரவ மறைப்பு- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவ தகடு முழுமையாக மறைக்கப்படும்.
  • வளையக் கதிரவ மறைப்பு- நிலவின் எதிர்நிழல் புவியின் மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
  • கலப்பு கதிரவ மறைப்பு- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
  • பகுதி கதிரவ மறைப்பு- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.

நேரம்[தொகு]

நிகழ்வுகள்[தொகு]

உச்சக்கட்டம்[தொகு]

முழுமையான கதிரவ மறைப்பின் உச்சக்கட்டத்தின் போது புவியில் விழும் கதிரவ ஒளிக்கோளத்தின் பகுதி நிலவால் மறைக்கபடுகிறது. எனவே அப்போது கருவட்டமாகத் தெரியும் புதுநிலவையும் அதன் விளிம்பில் சிவப்புத் திட்டுக்கள் போன்று தெரியும் நிறமண்டலத்தையும் அதைச் சுற்றி மங்கலான வெள்ளை நிறத்தில் தெரியும் கொரோனாவும் வெறும் கண்களால் காண இயலும்.

முழுமையான கதிரவ மறைப்பு முடிவுறும் தருவாயில் ஏற்படும் வைர மோதிர நிகழ்வு.

வைர மோதிர நிகழ்வு[தொகு]

முழுமையான கதிரவ மறைப்பு மற்றும் வளைய கதிரவ மறைப்பு ஆகியவற்றின் உச்ச கட்டம் தொடங்கும் போதும் முடிவுறும் போதும் வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.

வரவிருக்கும் கதிரவ மறைப்புகள்[தொகு]

5-6 சனவரி 2019- பகுதி கதிரவ மறைப்பு மற்றும் 26/திசம்பர் 2019 ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும் பகுதிகள்

குறிப்புகள்[தொகு]

  1. esa. "What is an eclipse?" (in en-GB). European Space Agency. https://www.esa.int/Our_Activities/Space_Science/What_is_an_eclipse. 
  2. . https://www.timeanddate.com/eclipse/list.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவ_மறைப்பு&oldid=3462526" இருந்து மீள்விக்கப்பட்டது