நிலவு மறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூமியின் மூலமாக நிழல் விழுவதன் உருவரைபடம். மைய முழுநிழலினுள், நிலவானது சூரியனின் நேரடி வெளிச்சத்தில் இருந்து முழுமையாக மறைக்கப்படுகிறது. மாறாக, புறநிழலினுள், சூரிய வெளிச்சத்தின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்படுகிறது.
முழுமையான புறநிழல் சந்திர கிரகணம், பூமியின் மூலமாக மறைக்கப்பட்ட சூரியனின் அடுக்குப் பகுதிக்கு நேர்த்தகவில் நிலவை மங்கலாக்குகிறது. இந்த ஒப்பீடுப்படம் ஜனவரி 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தெற்கு நிழல் புறநிழல் நிலவு மறைப்பு (இடது), அதே நிலவில் நிழலின் வெளிப்புறம் (வலது) ஆகியவற்றின் மூலம் இந்த நுட்பமான மங்கலை விவரிக்கிறது.
பூமியில் இருந்து பார்க்கும் போது, பூமியின் நிழலை இரண்டு பொதுமைய வட்டங்களாகக் கற்பனை செய்யலாம். இந்த வரைபடம், சந்திர கிரகணத்தின் வகை பூமியின் நிழலின் வழியாக கடந்து செல்வதற்கு நிலவு தேர்ந்தெடுக்கும் பாதையைச் சார்ந்து வரையறுக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. நிலவும் வெளிப்புற வட்டம் வழியாக, ஆனால் உட்புற வட்டத்தை அடையாமல் கடந்து சென்றால், அது புறநிழல் மறைப்பு ஆகும்; நிலவின் ஒரு பகுதி உட்புற வட்டத்தைக் கடந்து சென்றால் மட்டுமே, அது பகுதி மறைப்பு ஆகும்; மேலும் நிலவும் உட்புற வட்டத்தில் சில புள்ளிகளைக் கடந்து சென்றால், அது முழு மறைப்பு ஆகும்.
லூசியன் ருடாக்ஸால் (Lucien Rudaux) (1874–1947) வரையப்பட்ட ஓவியம், இது நிலவின் புறப்பரப்பில் இருந்து பார்த்தால் சந்திர கிரகணம் எவ்வாறு தெரியலாம் என்பதைக் காட்டுகிறது. நிலவின் புறப்பரப்பானது வானத்தில் பூமியின் முனைகளின் மீது பூமியின் வளிமண்டலத்தின் மூலமாக விலக்கமடைந்த சூரிய வெளிச்சத்தின் பார்வையால் மட்டுமே சிகப்பாக தோன்றுகிறது

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும். அடுத்த முழுமையான சந்திர கிரகணம் ஏப்பிரல் 5, 2014 & அக்டோபர் 8, 2014 இல் ஏற்பட இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளும் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் தெரியாது [1]. உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணம் பூமியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்க முடியலாம். சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் வரை இருக்கும். அதே சமயம் ஒட்டு மொத்த சூரிய கிரகணமும் குறிப்பிட்ட பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.

சந்திர கிரகணங்களின் வகைகள்[தொகு]

பூமியின் நிழல் அம்ப்ரா (கரு நிழல்) மற்றும் பெனும்ப்ரா (குறை நிழல்) ஆகிய இரண்டு மாறுபட்ட பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அம்ப்ராவினுள், நேரடியாக சூரியனின் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது. எனினும், சூரியனின் பெரிய கோண அளவின் விளைவாக, சூரியனின் ஒளி, பூமியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் மட்டுமே ஓரளவிற்குத் தடுப்பதாக இருக்கும், இதற்கு பெனும்ப்ரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

புறநிழல் மறைப்பு (penumbral eclipse) நிலவு பூமியின் பெனும்ப்ரா வழியாகக் கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இந்தப் பென்ம்ப்ரா நிலவின் புறப்பரப்பில் நுட்பமான இருண்ட தன்மைக்குக் காரணமாகிறது. பூமியின் பெனும்ப்ராவினுள் முழுவதுமாக நிலவு இடம்பெறும் போது ஏற்படும் சிறப்பு வகை பெனும்ப்ரல் கிரகணம் முழுமையான பெனும்ப்ரல் கிரகணம் எனப்படுகிறது. முழுமையான பெனும்ப்ரல் கிரகணம் அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது அம்ப்ராவுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.

பகுதியளவு சந்திர கிரகணம் நிலவின் சில பகுதிகள் அம்ப்ராவுக்குள் நுழைந்தால் மட்டும் நிகழ்வதாகும். நிலவானது பூமியின் அம்ப்ராவினுள் முழுமையாகப் பயணம் செய்யும் போது, முழுமையான சந்திர கிரகணத்தைக் காணலாம். அந்த நிழலில் நிலவின் வேகம் வினாடிக்கு சுமார் ஒரு கிலோமீட்டராக (2,300 mph) இருக்கிறது. மேலும் அது முழுமையடைவது கிட்டத்தட்ட 107 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எனினும் நிழலுடன் நிலவின் முதல் மற்றும் இறுதி தொடர்புக்கு இடையில் உள்ள மொத்த நேரம் மிகவும் நீண்டதாக இருக்கிறது. மேலும் அது 3.8 மணி நேரங்களுக்கு நிறைவடையலாம்.[2] கிரகண நேரத்தில் பூமியில் இருந்து நிலவின் சார்புடைய தொலைவு கிரகணத்தின் கால அளவை பாதிக்கலாம். குறிப்பாக நிலவு அதன் புவிச் சேய்மை நிலைக்கு அருகில் இருக்கும் போது பூமி அதன் கோள்ப்பாதையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும். அதன் கோள்ப்பாதை வேகம் மெதுவானதாக இருக்கும். அம்ப்ராவின் விட்டம் தொலைவினால் பெருமளவில் குறைவடையாது. ஆகையால் புவிச் சேய்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழுதாக மறைக்கப்பட்ட நிலவின் மொத்த நேரம் நீண்டுவிடும்.

செலனெலியன் அல்லது செலனெஹ்லியன் என்பது சூரியன் மற்றும் மறைக்கப்பட்ட நிலவு இரண்டும் ஒரே நேரத்தில் கண்காணிக்கப்படும் போது ஏற்படுகிறது. இது சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு அல்லது சூரிய உதயத்திற்குப் பிறகு மட்டுமே ஏற்பட முடியும். மேலும் இரண்டும் வானில் கிட்டத்தட்ட எதிரெதிர் புள்ளிகளில் கீழ்வானத்தின் மேல் ஏற்படும். இந்த ஏற்பாடு கிடைநிலை கிரகணம் என்று குறிப்பிடப்படும் தோற்றப்பாட்டுக்கு வழிவகுக்கும். இது பூமியில் சந்திர கிரகண நேரத்தில் எங்கெல்லாம் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஏற்படும். உண்மையில் நிலவை அடையும் சிவப்பு நிற ஒளி பூமியில் ஒரே நேரத்தில் சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்கள் ஏற்படும் இடங்களில் இருந்து வருகிறது. நிலவானது பூமியின் வரைபடவியல் நிழலில் இருந்த போதும். சூரியன் மற்றும் கிரகண நிலவு ஆகியவை வானில் ஒரே நேரத்தில் தோன்றலாம். ஏனெனில் பூமியின் வளிமண்டலம் மூலமாக ஒளியின் ஒளிக்கதிர் விலகல் ஏற்படுவதன் காரணமாக கீழ்வானத்தின் அருகில் உள்ள பொருட்கள் வானில் அவற்றின் உண்மையான புவியியல் நிலையைக் காட்டிலும் உயர்வாக தோற்றமளிக்கும்.[3]

நிலவானது அம்ப்ராவைக் கடந்து செல்லும் போது நிழல் கூம்பினுள் பூமியின் வளிமண்டலத்தினால் சூரிய ஒளியில் ஒளிக்கதிர் விலகல் ஏற்படுவதன் காரணமாக முழுவதுமாக மறையாது. பூமியில் வளிமண்டலம் இல்லை என்றால் நிலவானது கிரகணத்தின் போது முழுவதுமாக இருண்டு இருக்கும். சிவப்பு நிறம் பூமியின் வளிமண்டலத்தின் நீண்ட மற்றும் அடர்த்தியான அடுக்கின் மூலமாக கடந்து செல்லும் நிலவை சூரிய வெளிச்சம் அடைவதன் காரணமாக ஏற்படுகிறது. அங்கு அது சிதறலை ஏற்படுத்தும். சிறிய அலைநீளங்கள் சிறிய துகள்களின் மூலமாக சிதறல் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் அதனால் வளிமண்டலத்தின் வழியாக ஒளி கடந்து செல்லும் போது நீண்ட அலைநீளங்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கும். இந்த இறுதி ஒளி நம் பார்வைக்கு சிவப்பாக இருக்கும். சூரிய அஸ்தமனங்கள் மற்றும் சூரிய உதயங்களின் போது வானம் சிவப்பு நிறமாக மாறுவதற்கும் இதே விளைவு காரணமாகிறது. இதனை மாற்று வழியில் நாம் சிந்தித்தால் அதாவது நிலவில் இருந்து நாம் பார்க்கும் போது, சூரியன் பூமியின் பின்னால் அஸ்தமனம் (அல்லது உதயம்) ஆவது போல் தோன்றும்.

சிதறலடைந்த ஒளியின் அளவு வளிமண்டலத்தில் உள்ள குப்பை அல்லது மேகங்களைப் பொறுத்தது ஆகும். மேலும் இது எவ்வளவு ஒளிச் சிதறல் அடைந்திருக்கிறது என்பதைக் கட்டுப்படுத்தும். பொதுவில் வளிமண்டலத்தில் குப்படை அதிகமாக உள்ள இடங்களில், ஒளியின் மற்ற அலைநீளங்களில் உள்ளவை நீக்கப்படும் (சிவப்பு ஒளியுடன் ஒப்பிடப்படுகிறது), விடப்பட்ட முடிவு ஒளி ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் விளைவாக ஏற்படும் நிலவின் செம்பு-சிவப்பு நிறம் ஒரு கிரகணத்திற்கும் மற்றொரு கிரகணத்திற்கும் மாறுபட்டு இருக்கும். எரிமலைகள் வளிமண்டலத்தில் அதிக அளவிலான தூசினை உமிழ்வதில் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. மேலும் கிரகணத்திற்கு சிறிது நேரம் முன்பு பெருமளவில் அது வெடித்துக் கிளம்பி இருந்தால் அதன் நிறத்தில் பெருமளவில் விளைவுகள் ஏற்படலாம்.

டேஞ்சன் அளவி[தொகு]

பின்வரும் அளவி (டேஞ்சன் அளவி) சந்திர கிரகணத்தின் ஒட்டுமொத்த கருமையை மதிப்பிடுவதற்காக ஆண்ட்ரே டேஞ்சனால் உருவாக்கப்பட்டது ஆகும்.[4]

L=0 : மிகவும் அடர்ந்த கிரகணம். நிலவு கிட்டத்தட்ட மறைந்திருக்கும், குறிப்பாக மத்தியில் முழுமையாக மறைந்திருக்கும்.
L=1 : அடர்ந்த கிரகணம், சாம்பல் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். விவரங்களை வேறுபடுத்துவது சிரமத்துடன் மட்டுமே இருக்கும்.
L=2 : ஆழ்ந்த சிவப்பு அல்லது துரு நிற கிரகணம். மிகவும் அடர்ந்த மைய நிழல், அதே சமயம் அம்ப்ராவின் வெளிப்புற முனை குறிப்பிடத்தக்களவில் பொலிவுடன் காணப்படும்.
L=3 : செங்கல்-சிவப்பு கிரகணம். அம்ப்ரா நிழல் பொதுவாக பொலிவுடன் அல்லது மஞ்சள் விளிம்புடன் இருக்கும்.
L=4 : மிகவும் பொலிவான செம்பு-சிவப்பு அல்லது ஆரஞ்சு கிரகணம். அம்ப்ரா நிழல் நீல நிறமாகவும், மிகவும் பொலிவான விளிம்புடனும் இருக்கும்.

கிரகண சுழற்சிகள்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் இரண்டு சந்திர கிரகணங்கள் ஏற்படும், எனினும் முழுமையான சந்திர கிரகணம் குறிப்பிடத்தக்க அளவில் பொதுவானவையாக இல்லாமல் இருக்கின்றன. ஒருவருக்கு கிரகணத்தின் தேதி மற்றும் நேரம் தெரிந்தால், சாரோஸ் சுழற்சி போன்ற கிரகண சுழற்சியைப் பயன்படுத்தி மற்ற கிரகணங்கள் எப்போது ஏற்படலாம் என்பதைக் கணிக்க இயலும்.

சமீபத்திய மற்றும் வரவிருக்கும் சந்திர கிரகண நிகழ்வுகள்[தொகு]

 • மார்ச் 3, 2007, சந்திர கிரகணம் ― முதல் முழுமையான சந்திர கிரகணம் 2007 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஏற்பட்டது, மேலும் அதனை அமெரிக்க நாடுகள், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் ஓரளவு பார்க்க முடிவதாக இருந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் முழுமையான நிகழ்வையும் காண முடிந்தது. அந்த நிகழ்வு 01ம:15நி நீடித்தது, 20:16 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் இல் ஆரம்பித்தது, மேலும் 22:43 UTC இல் முழுமை அடைந்தது.[5]
 • ஆகஸ்ட் 2007 சந்திர கிரகணம் ― ஆகஸ்ட் 28, 2007 இல் அந்த ஆண்டில் இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்பட்டது. ஆரம்ப நிலை 07:52 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் இல் ஆரம்பித்தது, மேலும் 09:52 UTC இல் முழுமை அடைந்தது. இந்த கிரகணத்தை கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பசிபிக் பகுதி மற்றும் அமெரிக்க நாடுகள் ஆகிய பகுதிகளில் காணமுடிந்தது.[6]
 • பிப்ரவரி 2008 சந்திர கிரகணம் ― 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரே முழுமையான சந்திர கிரகணம் பிப்ரவரி 21, 2008 இல் ஏற்பட்டது, 01:43 UTC இல் ஆரம்பித்தது, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காண முடிந்தது.[7]
 • டிசம்பர் 31, 2009 இல் பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்பட்டது.
 • அடுத்த முழுமையான சந்திர கிரகணம் டிசம்பர் 21, 2010 இல் ஏற்படும்.

1995-1998[தொகு]

நிலவு மறைப்பு series sets from 1995-1998
Ascending node   Descending node
சாரோசு
படிமம்
Date
Viewing
Type
Chart
Saros
Photo
Date
Viewing
Type
Chart
112 1995 Apr 15
Lunar eclipse from moon-1995Apr15.png
Partial
Lunar eclipse chart close-1995Apr15.png
117 1995 Oct 08
Lunar eclipse from moon-1995Oct08.png
Penumbral
Lunar eclipse chart close-1995Oct08.png
122 1996 Apr 04
Lunar eclipse from moon-1996Apr04.png
Total
Lunar eclipse chart close-1996Apr04.png
127 1996 Sep 27
Lunar eclipse from moon-1996Sep27.png
Total
Lunar eclipse chart close-1996Sep27.png
132 1997 Mar 24
Lunar eclipse from moon-1997Mar24.png
Partial
Lunar eclipse chart close-1997Mar24.png
137 1997 Sep 16
Lunar eclipse from moon-1997Sep16.png
Total
Lunar eclipse chart close-1997Sep16.png
142 1998 Mar 13
Lunar eclipse from moon-1998Mar13.png
Penumbral
Lunar eclipse chart close-1998Mar13.png
147 1998 Sep 06
Lunar eclipse from moon-1998Sep06.png
Penumbral
Lunar eclipse chart close-1998Sep06.png
Last set 1994 May 25 Last set 1994 Nov 18
Next set 1999 Jan 31 Next set 1998 Aug 08

1998-2002[தொகு]

Lunar eclipse series sets from 1998-2002
Descending node   Ascending node
Saros Date
Viewing
Type
Chart
Saros Date
Viewing
Type
Chart
109 1998 Aug 08
Lunar eclipse from moon-1998Aug08.png
Penumbral
Lunar eclipse chart close-1998Aug08.png
114 1999 Jan 31
Lunar eclipse from moon-1999Jan31.png
Penumbral
Lunar eclipse chart close-1999Jan31.png
119 1999 Jul 28
Lunar eclipse from moon-1999Jul28.png
Partial
Lunar eclipse chart close-1999Jul28.png
124 2000 Jan 21
Lunar eclipse from moon-2000Jan21.png
Total
Lunar eclipse chart close-2000Jan21.png
129 2000 Jul 16
Lunar eclipse from moon-2000Jul16.png
Total
Lunar eclipse chart close-2000jul16.png
134 2001 Jan 09
Lunar eclipse from moon-2001Jan09.png
Total
Lunar eclipse chart close-2001Jan09.png
139 2001 Jul 05
Lunar eclipse from moon-2001Jul05.png
Partial
Lunar eclipse chart close-2001Jul05.png
144 2001 Dec 30
Lunar eclipse from moon-2001Dec30.png
Penumbral
Lunar eclipse chart close-2001Dec30.png
149 2002 Jun 24
Lunar eclipse from moon-2002Jun24.png
Penumbral
Lunar eclipse chart close-2002Jun24.png
Last set 1998 Sep 06 Last set 1998 Mar 13
Next set 2002 May 26 Next set 2002 Nov 20

2002–2005[தொகு]

Lunar eclipse series sets from 2002–2005
Descending node   Ascending node
Saros
Photo
Date
View
Type
Chart
Saros
Photo
Date
View
Type
Chart
111 2002 மே 26
Lunar eclipse from moon-2002May26.png
penumbral
Lunar eclipse chart close-2002May26.png
116 2002 நவ 20]]
Lunar eclipse from moon-2002Nov20.png
penumbral
Lunar eclipse chart close-2002Nov20.png
121
Lunar eclipse May 2003-TLR75.jpg
2003 மே 16
Lunar eclipse from moon-2003May16.png
total
Lunar eclipse chart close-03may16.png
126
Lunar eclipse November 2003-TLR63.jpg
2003 நவ 09
Lunar eclipse from moon-2003Nov09.png
total
Lunar eclipse chart close-03nov09.png
131
Total lunar eclipse May 4 2004-Jpeter smith.jpg
2004 மே 04
Lunar eclipse from moon-2004May04.png
total
Lunar eclipse chart close-04may04.png
136
Oct 28 2004 total lunar eclipse-espenak.png
2004 அக் 28
Lunar eclipse from moon-2004Oct28.png
total
Lunar eclipse chart close-04oct28.png
141
Penumbral eclipse Minneapolis 24 April 2005.png
2005 ஏப் 24
Lunar eclipse from moon-2005Apr24.png
penumbral
Lunar eclipse chart close-05apr24.png
146 2005 அக் 17
Lunar eclipse from moon-2005Oct17.png
partial
Lunar eclipse chart close-2005Oct17.png
Last set 2002 சூன் 24 Last set 2001 திச 30
Next set 2006 மார் 14 Next set 2006 செப் 7

2006–2009[தொகு]

Lunar eclipse series sets from 2006–2009
Descending node   Ascending node
Saros
Photo
Date
Viewing
Type
Chart
Saros
Photo
Date
Viewing
Type
Chart
113
Penumbral lunar eclipse 2006 March 14 Warrenton VA.jpg
2006 Mar 14
Lunar eclipse from moon-2006Mar14.png
penumbral
Lunar eclipse chart close-06mar14.png
118
Partial lunar eclipse Sept 7 2006-Mikelens.jpg
2006 Sep 7
Lunar eclipse from moon-2006Sep07.png
partial
Lunar eclipse chart close-2006Sep07.png
123
Red moon during lunar eclipse.jpg
2007 Mar 03
Lunar eclipse from moon-2007Mar03.png
total
Lunar eclipse chart close-07mar03.png
128
Lunar Eclipse.jpg
2007 Aug 28
Lunar eclipse from moon-2007Aug28.png
total
Lunar eclipse chart close-2007aug28.png
133
February 2008 total lunar eclipse John Buonomo.jpg
2008 Feb 21
Lunar eclipse from moon-2008Feb21.png
total
Lunar eclipse chart close-08feb20.png
138
20080816eclipsed2.jpg
2008 Aug 16
Lunar eclipse from moon-2008Aug16.png
partial
Lunar eclipse chart close-2008Aug16.png
143
Penumbral lunar eclipse Feb 9 2009 NavneethC.jpg
2009 Feb 9
Lunar eclipse from moon-2009Feb09.png
penumbral
Lunar eclipse chart close-09feb09.png
148
Penumbral lunar eclipse Aug 6 2009 John Walker.gif
2009 Aug 06
Lunar eclipse from moon-2009Aug06.png
penumbral
Lunar eclipse chart close-2009aug06.png
Last set 2005 Apr 24 Last set 2005 Oct 17
Next set 2009 Dec 31 Next set 2009 Jul 07

2009–2013[தொகு]

Lunar eclipse series sets from 2009–2013
Ascending node   Descending node
Saros Date
Viewing
Type
chart
Saros Date
Viewing
Type
chart
110 2009 July 07
Lunar eclipse from moon-2009Jul07.png
penumbral
Lunar eclipse chart close-2009jul07.png
115
December 2009 partrial lunar eclipse-cropped.jpg
2009 Dec 31
Lunar eclipse from moon-2009Dec31.png
partial
Lunar eclipse chart close-2009Dec31.png
120
Lunar eclipse june 2010 northup.jpg
2010 June 26
Lunar eclipse from moon-2010Jun26.png
partial
Lunar eclipse chart close-2010jun26.png
125 2010 Dec 21
Lunar eclipse from moon-2010Dec21.png
total
Lunar eclipse chart close-10dec21.png
130 2011 June 15
Lunar eclipse from moon-2011Jun15.png
total
Lunar eclipse chart close-2011jun15.png
135 2011 Dec 10
Lunar eclipse from moon-2011Dec10.png
total
Lunar eclipse chart close-2011Dec10.png
140 2012 June 04
Lunar eclipse from moon-2012Jun04.png
partial
Lunar eclipse chart close-2012Jun04.png
145 2012 Nov 28
Lunar eclipse from moon-2012Nov28.png
penumbral
Lunar eclipse chart close-2012Nov28.png
150 2013 May 25
Lunar eclipse from moon-2013May25.png
penumbral
Lunar eclipse chart close-2013May25.png
Last set 2009 Aug 06 Last set 2009 Feb 9
Next set 2013 Apr 25 Next set 2013 Oct 18

2013–2016[தொகு]

Lunar eclipse series sets from 2013–2016
Ascending node   Descending node
Saros Date
Viewing
Type Saros Date
Viewing
Type
112 2013 Apr 25
Lunar eclipse from moon-2013Apr25.png
Partial
Lunar eclipse chart close-2013Apr25.png
117 2013 Oct 18
Lunar eclipse from moon-2013Oct18.png
Penumbral
Lunar eclipse chart close-2013Oct18.png
122 2014 Apr 15
Lunar eclipse from moon-2014Apr15.png
Total
Lunar eclipse chart close-2014Apr15.png
127 2014 அக். 08
Lunar eclipse from moon-2014Oct08.png
Total
Lunar eclipse chart close-2014Oct08.png
132 2015 Apr 04
Lunar eclipse from moon-2015Apr04.png
Total
Lunar eclipse chart close-2015Apr04.png
137 2015 Sep 28
Lunar eclipse from moon-2015Sep28.png
Total
Lunar eclipse chart close-2015Sep28.png
142 2016 Mar 23
Lunar eclipse from moon-2016Mar23.png
Penumbral
Lunar eclipse chart close-2016Mar23.png
147 2016 Sep 16
Lunar eclipse from moon-2016Sep16.png
Penumbral
Lunar eclipse chart close-2016Sep16.png
Last set 2013 May 25 Last set 2012 Nov 28
Next set 2017 Feb 31 Next set 2016 Aug 08

2016–2020[தொகு]

Lunar eclipse series sets from 2016–2020
Descending node   Ascending node
Saros Date Type
Viewing
Saros Date
Viewing
Type
Chart
109 2016 Aug 18
Lunar eclipse from moon-2016Aug18.png
Penumbral
Lunar eclipse chart close-2016Aug18.png
114 2017 Feb 11
Lunar eclipse from moon-2017Feb11.png
Penumbral
Lunar eclipse chart close-2017Feb11.png
119 2017 Aug 07
Lunar eclipse from moon-2017Aug07.png
Partial
Lunar eclipse chart close-2017Aug07.png
124 2018 Jan 31
Lunar eclipse from moon-2018Jan31.png
Total
Lunar eclipse chart close-2018Jan31.png
129 2018 Jul 27
Lunar eclipse from moon-2018Jul27.png
Total
134 2019 Jan 21
Lunar eclipse from moon-2019Jan21.png
Total
Lunar eclipse chart close-2019Jan21.png
139 2019 Jul 16
Lunar eclipse from moon-2019Jul16.png
Partial
Lunar eclipse chart close-2019Jul16.png
144 2020 Jan 10
Lunar eclipse from moon-2020Jan10.png
Penumbral
Lunar eclipse chart close-2020Jan10.png
149 2020 Jul 05
Lunar eclipse from moon-2020Jul05.png
Penumbral
Lunar eclipse chart close-2020Jul05.png
Last set 2016 Sep 16 Last set 2016 Mar 23
Next set 2020 Jun 05 Next set 2020 Nov 30

மேலும் காண்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

 1. Lunar Eclipses: What Are They; When is the Next One?
 2. Hannu Karttunen. Fundamental Astronomy. Springer. http://books.google.com/books?id=DjeVdb0sLEAC&pg=PA139&lpg=PA139&dq=lunar+eclipse+%22maximum+duration%22&source=web&ots=2g2ku9x57X&sig=x5J8rF3DEVu4-TkJGhYr9LhW_GQ. 
 3. John Hammond (May 15, 2003). "Weather Centre: Astronomical event threatened by the Great British weather". BBC News. Archived from the original on 2010-12-20. http://web.archive.org/web/20101220041630/http://www.bbc.co.uk/weather/ukweather/daily_review/news/15052003news.shtml. பார்த்த நாள்: 2008-02-20. 
 4. Paul Deans and Alan M. MacRobert. "Observing and Photographing Lunar Eclipses". Sky and Telescope.
 5. "Total Lunar Eclipse: March 3, 2007". NASA Eclipse Page. NASA (2008). மூல முகவரியிலிருந்து 2012-07-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-02-20.
 6. "Total Lunar Eclipse: August 28, 2007". NASA Eclipse Page. NASA (2008). மூல முகவரியிலிருந்து 2012-07-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-02-20.
 7. "Total Lunar Eclipse: February 20, 2008". NASA Eclipse Page. NASA (2008). மூல முகவரியிலிருந்து 2012-07-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-02-20.
 • பாவ்-லின் லியு, சந்திர கிரகணங்களின் அடிப்படை 1500 கி.மு-கி.பி 3000 , 1992
 • ஜீன் மீயஸ் மற்றும் ஹெர்மான் முக்கெ சந்திர கிரகணங்களின் அடிப்படை . ஆஸ்ட்ரானாமிஸ்சஸ் பூரோ, வியன்னா, 1983
 • எஸ்பெனாக், எஃப்., சந்திர கிரகணங்களின் ஐம்பது ஆண்டு அடிப்படை: 1986-2035. NASA ரெஃபரன்ஸ் வெளியீடு 1216, 1989

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவு_மறைப்பு&oldid=2220895" இருந்து மீள்விக்கப்பட்டது