சாரோசு (வானியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாரோசு சுழற்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிரகணங்கள் (அ) மறைப்புகளின் காலச்சுழலையும் (periodicity) மறுநிகழ்வையும் (recurrence) கணிப்பதற்கு உதவும் சுழற்சி சாரோஸ் சுழற்சி எனப்படும். இது 6,585.3 நாள்கள் (18 ஆண்டுகள் 11 நாள்கள் 8 மணி) காலம் கொண்ட ஒரு சுழற்சியாகும்.[1] இதற்கு நிலவின் சுழற்சிப்பாதையில் ஏற்படும் திசைமாற்றமே காரணம். ஒவ்வொரு சாரோசு சுழற்சிக்குப் பிறகும் அனலி (சூரியன்), பூமி, நிலவு இவை மூன்றும் அதே சார்பு இடஒருங்குக்கு (relative spatial alignment) வருகின்றன; ஒவ்வொரு சாரோசு சுழற்சிக்குப் பின்னும் ஒரே வகையான மறைப்பு (கிரகணம்) ஏற்படும்.[2] எனவே இவ்வகையான மறைப்புகளை சாரோசு வரிசை எனலாம். ஆனால் ஒவ்வொரு சாரோசு வரிசை மறைப்புக்கு இடையிலும் கிட்டத்தட்ட 40 சூரிய / நிலவு மறைப்புகள் மொத்தத்தில் ஏற்படுகின்றன; இவற்றின் இடவொருங்கு சாரோசு இடவொருங்கிற்கு வேறுபட்டு இருக்கும்.[3]

வரலாறு[தொகு]

ஒத்த நிலவு மறைப்புகள் (சந்திர கிரகணங்கள்) மீண்டும் மீண்டும் மறுநிகழ்வு அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலநேரம் எடுப்பதை சால்டியர்கள் ( பாபிலோனிய வானியல் அறிஞர்கள்) அறிந்திருந்தனர்.[4]

பெயரிடப்படுதல்[தொகு]

சாரோஸ் (கிரேக்கம்:σάρος) என்ற பெயரை முதலில் (1691) பயன்படுத்தியவர் எட்மண்ட் ஹாலி. ஆனால் இந்தப் பெயர் சரியான தேர்வல்ல என்பதை கியோம் லே ஜெண்டில் என்ற பிரென்சு வானியலாளர் சுட்டிய பின்னரும் சாரோசு என்ற சொல்லே நிலைத்து விட்டது.[4]

குறிப்பு[தொகு]

  1. Nasa
  2. Saros cycle
  3. Saros cycle - Description 2nd para
  4. 4.0 4.1 Saros cycle - History
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரோசு_(வானியல்)&oldid=3860352" இலிருந்து மீள்விக்கப்பட்டது