நரசிம்மகுப்தர்
Appearance
நரசிம்மகுப்தர் | |
---|---|
12வது குப்தப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி பி 495 _ ? |
முன்னையவர் | புத்தகுப்தர் |
பின்னையவர் | மூன்றாம் குமாரகுப்தர் |
துணைவர் | ஸ்ரீமித்திராதேவி |
அரசமரபு | குப்த வம்சம் |
தந்தை | புருகுப்தர் |
மதம் | இந்து சமயம் |
குப்தப் பேரரசு கி பி 320 – 550 | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||
நரசிம்மகுப்தர் (Narasimhagupta Baladitya) வட இந்தியாவின் குப்தப் பேரரசின் 12வது பேரரசர் ஆவார். புருகுப்தரின் மகனான நரசிம்மகுப்தர், புத்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசர் ஆனவர். இவருக்கு நரசிம்மகுப்த பாலாதித்தியன் எனும் பட்டப் பெயரும் உண்டு. நரசிம்மகுப்தர், மால்வா மன்னர் யசோதருமனுடன் இணைந்து, ஹெப்தலைட்டுகளின் வழி வந்த வெள்ளை ஹூணர்களை வட இந்தியாவின் சமவெளிகளிலிருந்து விரட்டி அடித்தார்.
நாளந்தாவில் கிடைக்கப் பெற்ற நரசிம்மகுப்தரின் களிமண் முத்திரைகள் வாயிலாக, நரசிம்மகுப்தரின் பட்டத்து ராணியின் பெயர் ஸ்ரீமித்ராதேவி எனவும், நரசிம்மகுப்தருக்குப் பின் மூன்றாம் குமாரகுப்தர் அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.
நரசிம்மகுப்தர், கங்கைச் சமவெளியை ஆக்கிரமித்த ஹூணர்களின் தலைவர் மிகிரகுலனை வென்றதாகவும் அறியமுடியகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Mookerji, Radhakumud (1995). The Gupta Empire. Delhi: Motilal Banarsidass. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120804401.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)