உள்ளடக்கத்துக்குச் செல்

அல்கான் ஹூனர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்கான் ஹூனர்கள்
370–670
அல்கான் மன்னர் கிங்கிலாவின் (அண். 450 கி.பி) உருவப்படம். அல்கான் நாணயங்களில் காணக்கூடிய அல்கான் (தம்கா S1 என அழைக்கப்படுகிறது) காளை/சந்திர தம்கா[1]அல்கான் நாணயம்.
கி.பி 500-530 க்கு இடையில் இந்தியாவில் அண்டை அரசுகளுடன் அல்கான் ஹூனர்களின் உள்ளூர் கட்டுப்பாட்டைக் குறிக்கும் கல்வெட்டுகளின் இடங்களைக் காணலாம்.[2][3] அல்கான் ஹூனர்களின் பிராந்தியப் பரப்பளவு பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.[4]
தலைநகரம்கபிசா இராச்சியம்
உடபந்தா[5]
சகலா[6][7]
பேசப்படும் மொழிகள்பிராமி எழுத்துமுறை மற்றும் பாக்திரியம் (எழுத்து வடிவம்)
சமயம்
சைவ சமயம்
மகாயான பௌத்தம்
சரதுசம்[8]
அரசாங்கம்நாடோடிப் பேரரசு
வரலாற்று சகாப்தம்பிந்தைய பழங்காலம்
• தொடக்கம்
370
• முடிவு
670
நாணயம்Drachm
முந்தையது
பின்னையது
சாசானியப் பேரரசு
கிடாரிகள்
குப்தப் பேரரசு
ஹெப்தலைட்டுகள்
நெசாக் ஹூனர்கள்
துர்க் ஷாஹிகள்
இரண்டாவது அவுலிகாரா வம்சம்
கார்கோடகப் பேரரசு
மௌகரி வம்சம்
பிற்கால குப்தர் வம்சம்
தானிக் இராச்சியம்
திரிபுரியின் காலச்சூரிகள்
தற்போதைய பகுதிகள்ஆப்கானித்தான்
பாக்கித்தான்
இந்தியா

அல்கான் ஹூனர்கள் (Alchon Huns) மேலும் அல்கோனோ, அல்க்சன், அல்கான், அலகானா, வால்க்சன் என்றும் அழைக்கப்படும் இவர்கள் , நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் பொ.ச. 4 நூற்றாண்டு முதல் பொ.ச.6 ஆம் நூற்றாண்டு அரசுகளை நிறுவிய நாடோடி மக்களாவர். இவர்கள் இராச்சியம் முதலில் பரோபமிசஸில் அமைந்திருந்தாகக் குறிப்பிடப்பட்டு, பின்னர் தென்கிழக்கு, பஞ்சாப் , மத்திய இந்தியா வரையிலும், ஏரண் முதல் கோசாம்பி வரையிலும் விரிவடைந்திருந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீதான அல்கான்களின் படையெடுப்பு, அவர்களுக்கு முன்பு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆட்சி செய்து வந்த கிடாரைட்டு ஹுனர்களை ஒழித்தது. மேலும் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கும் பங்களித்தது. ஒரு வகையில் இடைக்கால இந்தியாவை முடிவுக்குக் கொண்டு வந்தது.[9]

ஹூனர்களின் இந்தியப் படையெடுப்பு முந்தைய நூற்றாண்டுகளில் யவன ( இந்தோ-கிரேக்கர்கள் ), சாகா ( இந்தோ-சிதியர்கள் ), பலவா ( இந்தோ-பார்த்தியர்கள் ) மற்றும் குசானர் ஆகியோரால் துணைக் கண்டத்தின் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து வருகிறது. அல்கோன் பேரரசு மத்திய மற்றும் தெற்காசியாவில் நிறுவப்பட்ட நான்கு பெரிய ஹுன மாநிலங்களில் மூன்றாவதாக இருந்தது. அல்கோன்களுக்கு முன் கிடாரைட்டுகள் இருந்தனர். பாக்திரியாவில் ஹெப்தலைட்டுகள் மற்றும் இந்து குஷில் நெசாக் ஹுனர்கள் ஆகியோர் வெற்றி பெற்றனர். அல்கோன் அரசர்களின் பெயர்கள் அவர்களின் விரிவான நாணயங்கள், புத்த கணக்குகள் மற்றும் இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ள பல நினைவு கல்வெட்டுகள் ஆகியவற்றிலிருந்து அறியப்படுகின்றன.

அல்கோன்கள் நீண்ட காலமாக ஹெப்தாலைட்டுகளின் ஒரு பகுதியாக அல்லது துணைப்பிரிவாக அல்லது அவர்களின் கிழக்குக் கிளையாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இப்போது அவை ஒரு தனி அமைப்பாகக் கருதப்படுகின்றன.[10] [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rezakhani 2017, ப. 105-124.
  2. Bakker 2020.
  3. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 25. ISBN 0226742210.
  4. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 145, map XIV.1 (k). ISBN 0226742210.
  5. Bakker, Hans (2017), Monuments of Hope, Gloom and Glory in the Age of the Hunnic Wars: 50 years that changed India (484–534), Royal Netherlands Academy of Arts and Sciences, Section 4, ISBN 978-90-6984-715-3, archived from the original on 11 January 2020, retrieved 20 May 2019
  6. Bakker, Hans (2014-07-16). The World of the Skandapurāṇa (in ஆங்கிலம்). BRILL. ISBN 9789004277144.
  7. Dani, Ahmad Hasan (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations: A.D. 250 to 750 (in ஆங்கிலம்). Motilal Banarsidass. ISBN 9788120815407.
  8. Jäger, Ulf. "A Unique Alxon-Hunnic Horse-and-Rider Statuette (Late Fifth Century CE) from Ancient Bactria / Modern Afghanistan in the Pritzker Family Collection, Chicago" (PDF). Sino-Platonic Papers. Archived (PDF) from the original on 2022-04-04. Retrieved 2023-02-16.
  9. Bakker, Hans (2017), Monuments of Hope, Gloom and Glory in the Age of the Hunnic Wars: 50 years that changed India (484–534), Royal Netherlands Academy of Arts and Sciences, Section 4, ISBN 978-90-6984-715-3, archived from the original on 2020-01-11, retrieved 2022-03-21
  10. "Note 8: It is now clear that the Hephtalites were not part of those Huns who conquered the land south of the Hindu-Kush and Sind as well in the early 6th century. In fact, this latter Hunnic group was the one commonly known as Alkhon because of the inscriptions on their coins (Vondrovec, 2008)."
  11. Rezakhani, Khodadad. "From the Kushans to the Western Turks" (in en). King of the Seven Climes: 207. https://www.academia.edu/32671225. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கான்_ஹூனர்கள்&oldid=4273076" இலிருந்து மீள்விக்கப்பட்டது