உள்ளடக்கத்துக்குச் செல்

கூர்ஜர தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கூர்ஜர தேசம் is located in இந்தியா
Bhinmal
Bhinmal
Mandore
Mandore
Jalore
Jalore
Patan
Patan
Didwana
Didwana
Rajore (Rajorgarh)
Rajore (Rajorgarh)
Bayana
Bayana
Sindh
Sindh
Bharuch
Bharuch
Ujjain
Ujjain
Valabhi
Valabhi
Kannauj
Kannauj
கூர்ஜர தேசம் முக்கோண வடிவில் சிவப்பு புள்ளியிட்ட பகுதிகள்

கூர்ஜர தேசம் அல்லது குஜராத்திரம் (Gurjaradesa or Gurjaratra) பரத கண்டத்தின் வரலாற்று புகழ் மிக்க பகுதியாகும். கிபி 6 - 12 நூற்றாண்டில் கூர்ஜர தேசம், தற்கால வடக்கு குஜராத், தெற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் குஜ்ஜர் இன மக்கள் அதிகம் வாழ்ந்ததால் இப்பகுதிக்கு கூர்ஜர தேசம் பெயராயிற்று.

கூர்ஜர தேசத்தின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, கிபி 650 - 1036 முடிய கன்னோசியை தலைநகரமாகக் கொண்டு மேற்கிந்தியப் பகுதிகளை ஆண்டனர்.

வரலாறு

[தொகு]

பாணபட்டரின் ஹர்ச சரித்திரத்தில்

[தொகு]

கிபி ஏழாம் நூற்றாண்டின் சமஸ்கிருத கவிஞரான பாணபட்டர் எழுதிய ஹர்ச சரித்திரம் எனும் நூலில், மேற்கிந்தியாவின் கூர்ஜர தேசம் குறித்த குறிப்புகள் உள்ளது. அந்நூலில் கூர்ஜர தேசம், சிந்து, மால்வா, தெற்கு குஜராத்தின் லாட தேசம், வடக்கு குஜராத் மற்றும் இராஜஸ்தானின் பெரும் பகுதிகளை கொண்டிருந்தது.[1]

கிபி 631 - 645ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங்கின் கூற்றின் படி, கூர்ஜர தேசத்தின் தலைநகரம் பீன்மல் விளங்கியது. இதன் அண்டை நாடுகளாக பரூச், உஜ்ஜைன், வல்லபி, சௌராட்டிரம் மற்றும் அவந்தி நாடுகள் இருந்தன.

கூர்ஜர தேசம் 833 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கிபி 628ல் கூர்ஜர தேசத்தின் சப்பா வம்ச மன்னர் வியாக்கிரமுகன் ஆட்சிக் காலத்தின் கூர்ஜர தேசத்தின் கணிதவியலாளரும், வான சாத்திர அறிஞருமான பிரம்மகுப்தர் பல அறிவியல் நூல்களை எழுதினார். [2] ஹர்ஷவர்தனப் பேரரசில் இருந்த கூர்ஜர தேசம், ஹர்சரின் மறைவிற்குப் பின், கூர்ஜர தேசம் தன்னாட்சி கொண்ட நாடாக விளங்கியது.

கிபி 712ல் முகமது பின் காசிம் தலைமையிலான அரபுப் படைகளால், கூர்ஜர தேசத்தின் பல பகுதிகள் அரபியர்கள் கைப்பற்றினர். [3] முகமது பின் காசிம் இறந்த பின்னர் மீண்டும் கூர்ஜரர்கள் தங்கள் இழந்த பகுதிகளை அரேபியர்களிடமிருந்து மீட்டனர்.[4]

கூர்ஜர ஆட்சியாளரகள்

[தொகு]

கிபி 600ல் இராஜா ஹரிச்சந்திர ரோகில்லாதி என்பவர், இராஜஸ்தானின் மாண்டவியபுரம் எனும் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு கூர்ஜர தேசம் எனும் சிறு நாட்டை நிறுவினார். .[5] அவரது வழித்தோன்றலான நாகபட்டர் என்பவர், கிபி 680ல் தலைநகரத்தை மாண்டவியபுரத்திலிருந்து, மேர்த்தா எனும் நகரத்திற்கு மாற்றினார்.[6] இறுதியில் கூர்ஜர மன்னர்கள் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தனர்.[7][8]

பிற்கால குறிப்புகள்

[தொகு]

கிபி 778ல் உதயோதனன் சூரி என்ற கவிஞர் எழுதிய குவலயமாலா எனும் நூலில் அழகிய கூர்ஜர தேசத்தின் கூர்ஜர மக்களையும், [9] சிந்து நாட்டு சைந்தவர்களையும், தெற்கு குஜராத்தின் லாடர்களையும், பஞ்சாபின் மாலவர்களையும், தெற்கு இராஜஸ்தானின் மேவாரி மக்களையும் குறிக்கிறது.[10]

குஜராத்திரம் எனும் சொல் முதலில் கிபி 861ல் கக்கூகா எனுமிடத்தில் உள்ள கட்டியாலா கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது.[11] பிற்கால வரலாற்று ஆவணங்கள், குஜராத்திர மண்டலம் பழைய ஜோத்பூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது எனக் கூறுகிறது.[12]

பிற்காலத்தில் கூர்ஜரம் அல்லது குஜராத்திரம் எனும் சொல், தற்கால குஜராத் மாநிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 1075 - 1154ல் வாழ்ந்த ஜினதத்தா சூரி என்பவர் கூர்ஜரத்தின் தலைநகரமாக தற்கால பதான் நகரம் இருந்ததாக குறிப்பிடுகிறார். கூர்ஜரர்களான சாளுக்கிய சோலாங்கி வம்சத்தினர் கூர்ஜர தேசத்தை கிபி 950 – 1300 முடிய ஆண்டனர். [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Goyal, Shankar (1991), "Recent Historiography of the Age of Harṣa", Annals of the Bhandarkar Oriental Research Institute, 72/73 (1/4): 331–361, JSTOR 41694902
  2. Smith, Vincent A. (October 1907). "`White Hun' Coin of Vyagrahamukha of the Chapa (Gurjara) Dynasty of Bhinmal". Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland. doi:10.1017/S0035869X00036868. 
  3. Blankinship 1994, ப. 319.
  4. Blankinship 1994, ப. 133.
  5. Puri 1986, ப. 34.
  6. Puri 1986, ப. 35.
  7. Puri 1986, ப. 37-39.
  8. Sanjay Sharma 2006, ப. 191.
  9. V. B. Mishra 1954, ப. 50-51.
  10. Manglani, J. J. (March 2012), "Kuvalayamala - A source of Social and Cultural History of Rajasthan" (PDF), International Journal of Recent Research and Review, 1
  11. (Puri 1986, ப. 8); (Krishna Gopal Sharma 1993, ப. 15)
  12. Puri 1986, ப. 8.
  13. Puri 1986, ப. 8-9.
ஆதாரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ஜர_தேசம்&oldid=4059929" இலிருந்து மீள்விக்கப்பட்டது