கிழக்கு பாகிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்கு பாக்கிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


கிழக்கு பாக்கிஸ்தான் (வங்காள மொழி: পূর্ব পাকিস্তান ,உருது மொழி : مشرقی پاکستان ) பாக்கிஸ்தான் நாட்டின் 1955ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு மாகாணத்தை குறிக்கும்.

வரலாறு[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் கிழக்கு பகுதிகளை 1905ல் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் எனப்பிரிக்கப்பட்டது.[1] [2] மீண்டும் வங்காள மொழி பேசும் கிழக்கு வங்காளப் பகுதிகளை 1912ல் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் பகுதியாக[தொகு]

1947ல் இந்தியப் பிரிவினையின் போது, கிழக்கு வங்காளம் என்று அழைக்கப்பட்ட கிழக்கு வங்காளம் பாக்கிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. 1955ஆம் ஆண்டு கிழக்கு வங்காளம் என்ற பெயர் கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது.

வங்காள தேசம்[தொகு]

இந்தியாவின் ஆதரவோடு நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் முடிவில் 1971 ஆம் ஆண்டு வங்காள தேசம் என்ற சுதந்திர நாடானது.

நிலபரப்பளவு[தொகு]

கிழக்கு பாகிஸ்தான் 147,570 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நாடாகும். இந்த நாட்டின் மூன்று திசையிலும் இந்திய நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தெற்கு திசையில் வங்க கடல் அதன் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Partition of Bengal
  2. Partition of Bengal
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_பாகிஸ்தான்&oldid=2319800" இருந்து மீள்விக்கப்பட்டது