செர்னிவ்சி மாகாணம்

ஆள்கூறுகள்: 48°17′N 26°01′E / 48.28°N 26.01°E / 48.28; 26.01
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்னிவ்சி மாகாணம்
Чернівецька область
செர்னிவெத்ஸ்கா மாகாணம் [1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 48°17′N 26°01′E / 48.28°N 26.01°E / 48.28; 26.01
நாடு உக்ரைன்
நிறுவப்பட்ட நாள்9 ஆகஸ்டு 1940
தலைநகரம்செர்னிவ்சி நகரம்
அரசு
 • ஆளுநர்செர்கி ஒசாசுச் [2][3]
 • செர்னிவ்சி மாகாணச் சட்டமன்றம்64 உறுப்பினர்கள்
 • தலைவர்ஐவான் முண்டயன்
பரப்பளவு
 • மொத்தம்8,097 km2 (3,126 sq mi)
பரப்பளவு தரவரிசை25வது இடம்
மக்கள்தொகை (2021)[4]
 • மொத்தம் 8,96,566
 • தரவரிசை26வது இடம்
 • ஆண்டு வளர்ச்சி−0.4%%
Demographics
 • அலுவல் மொழிஉக்குரேனிய மொழி
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு58-60xxx
வட்டாரக் குறியீடு+380-37
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-77
வாகனப் பதிவுСЕ
மாவட்டங்கள்11
நகரங்கள் (மொத்தம்)11
•  மண்டல நகரங்கள்2
நகர்புற குடியிருப்பு பகுதிகள்8
கிராமங்கள்398
FIPS 10-4UP03
இணையதளம்www.oda.cv.ua
www.rada.gov.ua

செர்னிவ்சி மாகாணம், உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த சிறு மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் செர்னிவ்சி நகரம் ஆகும். இம்மாகாணத்தின் தெற்கில் உருமேனியா மற்றும் மல்தோவா நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணம் கார்பேத்திய மலைகள், காடுகள், சமவெளிகள் கொண்டது. தினிஸ்டர் ஆறு இம்மாகாணத்தில் பாய்கிறது. 2020-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 8,96,566 ஆகும்.

புவியியல்[தொகு]

8,097 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செர்னிவ்சி மாகாணம், உக்ரைன் நாட்டின் பரப்பளவில் 1.3% கொண்ட மிகச்சிறிய மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாயும் 75 ஆறுகள் உள்ளது. இம்மாகாணத்தின் பெரிய ஆறு தினிஸ்டர் ஆறு 290 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.[5]இம்மாகாணம் 3 வகையான புவியியல் அமைப்புகளை கொண்டது. புல்வெளி காடுகள், கார்பேத்திய மலைகள் மற்றும் காடுகள் ஆகும்.

அமைவிடம்[தொகு]

உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த செர்னிவ்சி மாகாணத்தின் தெற்கில் உருமேனியா மற்றும் மல்தோவா நாடுகளும், பிற திசைகளில் இவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம், * தெர்னோப்பில் மாகாணம், கெமெள்னிட்சிகி மாகாணம் மற்றும் வின்னித்சியா மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணம் உருமேனியாவுடன் 226 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மல்தோவாவுடன் 198 கிலோ மீட்டர் நீளத்திற்கும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

செர்னிவ்சி மாகாணத்தின் வரைபடம்

சூலை 2020 முதல் இம்மாகாணம் 3 மாவட்டங்கள், 11 நகரங்கள், 8 நகர்புற குடியிருப்புகள் மற்றும் 252 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

Ethnic division of the Chernivtsi Oblast according to the latest 2001 Ukrainian census results. Areas inhabited by Ukrainians, Romanians, Moldovans, Russians, and other ethnicities are depicted in yellow, blue, green, red, and white respectively. Circle sizes represent total population size in each area. Some consider Romanians and Moldovans to form a single ethnic group.

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[6]இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 75% (689.1 ஆயிரம்), உருமேனியா மொழி பேசுபவர்கள் 12.5% (114.6 ஆயிரம்), மல்தோவா 7.3% (67.2 ஆயிரம்) மற்றும் உருசிய மொழி பேசுபவர்கள் 4.1% (37.9 ஆயிரம்) உள்ளனர். மேலும் பெலருசியா, யூத மொழிகள் பேசுபவர்கள் 1.2% ஆக உள்ளனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 2020-10-06. 
  2. "Government adopts a series of personnel decisions". Cabinet of Ministers of Ukraine. October 28, 2019. https://www.kmu.gov.ua/en/news/uryad-prijnyav-nizku-kadrovih-pitan. 
  3. "Serhiy Osachuk appointed new head of Chernivtsi RSA". Ukrinform. November 25, 2019. https://www.ukrinform.net/rubric-polytics/2824826-osachuk-appointed-new-head-of-chernivtsi-regional-state-administration.html. 
  4. "Чисельність наявного населення України (Actual population of Ukraine)" (PDF) (in உக்ரைனியன்). State Statistics Service of Ukraine. Archived from the original (PDF) on 6 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. About Oblast பரணிடப்பட்டது 2008-05-03 at the வந்தவழி இயந்திரம் Chernivtsi Oblast State Administration (in உக்குரேனிய மொழி)
  6. 2001 Ukrainian Census | English version | Results | General results of the census | National composition of population | Chernivtsi region பரணிடப்பட்டது 2007-11-13 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்னிவ்சி_மாகாணம்&oldid=3842746" இலிருந்து மீள்விக்கப்பட்டது