வின்னித்சியா மாகாணம்

ஆள்கூறுகள்: 48°56′N 28°41′E / 48.93°N 28.69°E / 48.93; 28.69
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்னித்சியா மாகாணம்
Вінницька область
வின்னித்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 48°56′N 28°41′E / 48.93°N 28.69°E / 48.93; 28.69
நாடு உக்ரைன்
தலைநகரம்வின்னித்சியா
அரசு
 • ஆளுநர்செர்கி போர்சோவ்[2]
 • வின்னித்சியா மாகாண சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்அனடோலி ஒலியினிக்
பரப்பளவு
 • மொத்தம்26,513 km2 (10,237 sq mi)
பரப்பளவு தரவரிசை12-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 15,29,123
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு21000-23999
வட்டார குறியீடு+380-43
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:UA
மாவட்டங்கள்27
நகரங்கள் (மொத்தம்)18
•  மண்டல நகரங்கள்12
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்29
கிராமங்கள்1466
FIPS 10-4UP23
இணையதளம்www.vin.gov.ua

வின்னித்சியா மாகாணம் (Vinnytsia Oblast) உக்ரைன் நாட்டின் தென்மேற்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் வின்னித்சியா நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 15,29,123 ஆக இருந்தது.

எல்லைகள்[தொகு]

வின்னித்சியா மாகாணத்தின் வடக்கில் சைதோமிர் மாகாணம், வடகிழக்கில் கீவ் மாகாணம், கிழக்கில் செர்கசி மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம், தெற்கில் திரான்சுனிஸ்திரியா மற்றும் மால்டோவா நாடுகள், மேற்கில் செர்னிவ்சி மாகாணம் மற்றும் கமெல்னிட்ஸ்கி மாகாணம், தென்கிழக்கில் ஒடெசா மாகாணம் எல்லைகளாக உள்ளது.

புவியியல்[தொகு]

இம்மாகாணத்தின் ஊடாக தினேப்பர் ஆறு பாய்கிறது. இது மால்டோவா நாட்டுடன் 202 கிலோ மீட்டர் நீளத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மேலும் இது உள்நாட்டில 7 உக்ரைனிய மாகாணங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணம் பல கருங்கல், பழுப்பு நிலக்கரி, பாக்சைட் உள்ளிட்ட கனிமங்கள் நிறைந்தது. உலகின் பெரிய 800 மில்லியன் டன் அளவிற்கு தூய வெள்ளை களிமண் சுரங்கங்கள் கொண்டது. மேலும் வெந்நீர் ஊற்றுகள் கொண்டது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாகாணம் அனல் மின் நிலையங்கள் அதிகம் கொண்டது. மேலும் 39 சர்க்கரை ஆலைகளும், 13 மதுபான தொழிற்சாலைகளும் கொண்டது. மேலும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளும் கொண்டுள்ளது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

வின்னித்சியா மாகாணத்தின் வரைபடம்

இம்மாகாணம் 27 மாவட்டங்கள், 18 நகரங்கள், 1466 கிராமங்கள் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]{{Geographic Location | Centre = வின்னித்சியா மாகாணம் | North = சைதோமிர் மாகாணம் | Northeast = கீவ் மாகாணம் | East = செர்கசி மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம் | South = திரான்சுனிஸ்திரியா,  மல்தோவா | Southwest = | West = செர்னிவ்சி மாகாணம் மற்றும் [[கமெல்னிட்ஸ்கி மாகாணம் | Northwest = | Southeast = ஒடெசா மாகாணம் }}