வோல்னோவாகா நகரம்
வோல்னோவாகா Волноваха | |
---|---|
நகரம் | |
வோல்னோவாகா தொடருந்து நிலையம் | |
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 47°36′08″N 37°29′31″E / 47.60222°N 37.49194°E | |
நாடு | ![]() |
மாகாணம் | தோனெத்ஸ்க் மாகாணம் |
மாவட்டம் | வோல்னோவாகா மாவட்டம் |
நிறுவிய ஆண்டு | 1881 |
நகராட்சி | 1938 |
பரப்பளவு | |
• மொத்தம் | 21 km2 (8 sq mi) |
ஏற்றம் | 271 m (889 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 21,441 |
இணையதளம் | [1] |
வோல்னோவாகா (Volnovakha) உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தின் வோல்னோவாகா மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 21,441 ஆகும். இந்நகரத்தின் மக்களில் பெரும்பான்மையோர் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் ஆவார். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு தென்கிழக்கே 785 கிலோ மீட்டர் தொலைவிலும், தோனெத்ஸ்க் மாகாணத் தலைநகரான தோனெத்ஸ்க் நகரத்திற்கு தென்மேற்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
தட்ப வெப்பம்[தொகு]
இந்நகரத்தில் சூன், சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கோடைக்கால வெப்பம் 28 பாகை செல்சியஸ் இருக்கும். நவம்பர், டிசம்பர், சனவரி மாதங்களில் குளிர்கால அதிகபட்ச வெப்பம் - 4.0 பாகை செல்சியஸ் வரை இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், வோல்னோவாகா (1981–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -1.2 (29.8) |
-0.6 (30.9) |
5.3 (41.5) |
14.5 (58.1) |
21.1 (70) |
25.2 (77.4) |
27.8 (82) |
27.3 (81.1) |
21.1 (70) |
13.4 (56.1) |
4.9 (40.8) |
-0.1 (31.8) |
13.2 (55.8) |
தினசரி சராசரி °C (°F) | -4.0 (24.8) |
-4.0 (24.8) |
1.1 (34) |
9.1 (48.4) |
15.4 (59.7) |
19.5 (67.1) |
21.9 (71.4) |
21.3 (70.3) |
16.4 (61.5) |
8.6 (47.5) |
1.6 (34.9) |
-2.9 (26.8) |
8.6 (47.5) |
தாழ் சராசரி °C (°F) | -6.5 (20.3) |
-6.8 (19.8) |
-2.1 (28.2) |
4.7 (40.5) |
10.2 (50.4) |
14.5 (58.1) |
16.6 (61.9) |
16.0 (60.8) |
10.5 (50.9) |
4.8 (40.6) |
-1.0 (30.2) |
-5.3 (22.5) |
4.6 (40.3) |
பொழிவு mm (inches) | 52.2 (2.055) |
44.0 (1.732) |
49.0 (1.929) |
45.0 (1.772) |
52.1 (2.051) |
65.4 (2.575) |
55.0 (2.165) |
45.8 (1.803) |
42.9 (1.689) |
35.4 (1.394) |
49.8 (1.961) |
53.8 (2.118) |
590.4 (23.244) |
% ஈரப்பதம் | 88.4 | 85.4 | 79.3 | 66.3 | 60.9 | 63.6 | 61.1 | 57.9 | 65.7 | 75.6 | 87.4 | 89.7 | 73.4 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 9.9 | 7.7 | 8.8 | 7.2 | 7.3 | 8.2 | 6.6 | 4.6 | 5.4 | 5.9 | 8.1 | 9.8 | 89.5 |
ஆதாரம்: World Meteorological Organization[1] |
படக்காட்சிகம்[தொகு]
-
இரண்டாம் உலகப்போர் விடுதலை நினைவுச் சின்னம்
-
வாசிலி சாபாயேவ் நினைவுச் சின்னம்
-
உள்ளூர் வரலாற்று அருங்காட்சியகம்
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு[தொகு]
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது வோல்னோவாகா நகரத்தின் மீது மார்ச் முதல் வாரத்தில் குண்டு வீச்சுகளால் அரசுக் கட்டிடங்களையும், உட்கட்டமைப்புகளையும் தாக்கி அழித்தது. 5 மார்ச் 2022 அன்று இந்நகர மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக உருசியா ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization இம் மூலத்தில் இருந்து 17 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210717143555/https://www.ncei.noaa.gov/pub/data/normals/WMO/1981-2010/RA-VI/Ukraine/12.6.%20WMO_Normals_Excel_Template%20%282%29.xls.
- ↑ Ukraine crisis: Russia declares ceasefire to allow Mariupol and Volnovakha residents leave city