உள்ளடக்கத்துக்குச் செல்

கெர்சன் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெர்சன் மாகாணம்
Херсонська область
மாகாணம்
கெர்சன்ஸ்கா மாகாணம்[1]
Flag of Kherson Oblast
கொடி
Coat of arms of Kherson Oblast
சின்னம்
நாடு உக்ரைன்
(பெரிய அளவில் உருசியா ஆக்கிரமித்துள்ளது)[2]
தலைநகரம்கெர்சன்
அரசு
  ஆளுநர்ஹென்னடியு லகுதா[3]
  உருசியா நியமித்துள்ள நிழல் ஆளுநர்விளாடிமிர் சால்டோ பிளாக் [4]
  கெர்சன் மாகாண சட்டமன்றம்64 இடங்கள்
பரப்பளவு
  மொத்தம்28,461 km2 (10,989 sq mi)
மக்கள்தொகை
 (2021)
  மொத்தம்10,16,707
  தரவரிசை22வது இடம்
  அடர்த்தி36/km2 (93/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்)
  கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
73-75
ஏரியா குறியீடு+380-55
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:UA
வாகனத் தகடு பதிவுВT
மாவட்டங்கள்18
நகரங்கள்9
மண்டல நகரங்கள்3
பேரூராட்சிகள்30
கிராமங்கள்658
FIPS 10-4UP08
இணையதளம்www.oda.kherson.ua

கெர்சன் மாகாணம் உக்ரைன் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும். இது உக்ரைனின் தெற்கில் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது கிரிமியாவிற்கு வடக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும். 28,461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 10,16,707 மக்கள் தொகையும் கொண்ட கெர்சன் மாகாணத்தில், பழத்தோட்டங்கள் அதிக உள்ளதால், இதனை உக்ரைன் நாட்டின் பழக்கூடை என்று அழைக்கப்படுகிறது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, உருசியர்கள் கெர்சன் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி, தனது கைப்பாவை ஆளுநரை நியமித்துள்ளது.

புவியியல்

[தொகு]

கெர்சன் மாகாணத்தில் வடக்கில் தினிப்ரோவ்ஸ்க் மாகாணம், தெற்கில் சர்சைக்குரிய கருங்கடல் மற்றும் கிரிமியா தன்னாட்சிக் குடியரசும், மேற்கில் மைக்கோலைவ் மாகாணமும், கிழக்கில் அசோவ் கடல் மற்றும் சப்போரியா மாகாணமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கெர்சன் மாகாணத்தின் நடுவில் தினேப்பர் ஆறு வடக்கிலிருது, தெற்காக பாய்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கெர்சன் மாகாணத்தின் மக்கள் தொகை 1,083,367 ஆகும். மக்கள் தொகையில் பெண்கள் 53.3% ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 38 ஆக உள்ளது. இம்மாகாண மக்கள் தொகையில் 61.5% நகர்புறங்களில் வாழ்கின்றனர். இதன் 38.5% அல்லது 467,600 பேர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர்.

  • உக்ரைனிய மொழி பேசுவோர் - 82.0%
  • உருசிய மொழி பேசுவோர் – 14.1%
  • பெலேருஸ் மொழி பேசுவோர் – 0.7%
  • மெஸ்கெட்டியன் துருக்கிய மொழி பேசுவோர் – 0.5%
  • கிரிமிய தார்த்தர் மொழி பேசுவோர் – 0.5%
  • பிறர்– 2.2%

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு

[தொகு]

2 மார்ச் 202 அன்றுஉக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் நடைபெற்ற கெர்சன் சண்டையின போது[5], 2 மார்ச் 202 அன்று உருசிய இராணுவம், கெர்சன் நகரத்தையும் கைப்பற்றியது.[6] பின்னர் 23 மார்ச் 2022 அன்று கெர்சன் மாகாணம் முழுவதையும் கைப்பற்றியது. கெர்சன் மாகாணத்தை நிர்வகிக்க உருசிய ஆதரவு ஆளுநரை இராணுவம் நியமித்துள்ளது. [7] [8]

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]
கெர்சன் மாகாணச் செயலகக் கட்டிடம்

கெர்சன் மாகாணம் 18 மாவட்டங்களையும், 9 நகரங்களையும், 30 பேரூராட்சிகளையும், 658 கிராமங்களையும்கொண்டது. 2015-இல் கெர்சன் நகரத்தை 3 நகர்புற மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[9]

பெயர்உக்ரைனியப் பெயர்பரப்பளவு
(km2)
மக்கள் தொகை
2015
நிர்வாகத் தலைமையிடம்நகர்புற மக்கள் தொகை மட்டும்
கெர்சன்Херсон (місто)423333,737கெர்சன்322,260
ஹோல பிரிஸ்டன்Гола Пристань (місто)914,883ஹோல பிரிஸ்டன்14,568
நோவா காக்கோவ்காНова Каховкa (місто)22368,205நோவா காக்கோவ்கா62,128
காக்கோவ்காКаховкa1636,958காக்கோவ்கா36,958
பெர்ரிஸ்லாவ் மாவட்டம்Бериславський (район)1,72148,025பெர்ரிஸ்லோவ்16,682
பிலோசெர்கா மாவட்டம்Білозерський (район)1,53466,564பிலோசெர்கா9,739
சாப்லிங்கா மாவட்டம்Чаплинський (район)1,72235,219சாப்லிங்கா12,638
ஹெனிசெஸ்க் மாவட்டம்Генічеський (район)3,00859,991ஹெனிசெஸ்க்33,748
ஹோலா பிரிஸ்டன் மாவட்டம்Голопристанський (район)3,41145,827ஹோலா பிரிஸ்டன்14,666
ஹோர்னோஸ்தய்வ்விகா மாவட்டம்Горностаївський (район)1,01819,788ஹோர்னோஸ்தய்வ்விகா6,681
ஐவானிவ்கா மாவட்டம்Іванівський (район)1,12013,995ஐவானிவ்கா4,560
கலஞ்சக் மாவட்டம்Каланчацький (район)91621,568கலஞ்சக்11,169
காகோவ்கா மாவட்டம்Каховський (район)1,45035,968காகோவ்காN/A *
நோவாடுராய்ட்ஸ்கே மாவட்டம்Новотроїцький (район)2,29835,921நோவாடுராய்ட்ஸ்கே14,979
நோவாவான்ட்சோவ்கா மாவட்டம்Нововоронцовський (район)1,00521,442நோவாவான்ட்சோவ்கா6,379
நியுஸ்னி சிரோஹோஸ்சி மாவட்டம்Нижньосірогозький (район)1,20915,985நியுஸ்னி சிரோஹோஸ்சி4,891
ஒலேஸ்கை மாவட்டம்Олешківський (район)1,75971,888ஒலேஸ்கை36,317
ஸ்கதோவ்ஸ்க் மாவட்டம்Скадовський (район)1,45647,930ஸ்கதோவ்ஸ்க்21,830
வெல்யுகா லெபெட்டிகா மாவட்டம்Великолепетиський (район)1,00016,827வெல்யுகா லெபெட்டிகா8,326
வேல்யுகா மாவட்டம்Великоолександрівський (район)1,54025,948வேல்யுகா ஒலெக்சந்திரிவ்கா9,747
வெர்கினியூ ரொஹாசிக் மாவட்டம்Верхньорогачицький (район)91512,003வெர்கினியூ ரொஹாசிக்5,698
விசோகோபில்லியா மாவட்டம்Високопільський (район)70115,121விசோகோபில்லியா6,148

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. ISBN 978-966-475-839-7. Retrieved 2020-10-06. {{cite book}}: |website= ignored (help)
  2. "Russia Says It Takes Control Of Ukraine's Entire Kherson Region". The Nation. March 15, 2022.
  3. Zelensky replaces head of Kherson Regional State Administration பரணிடப்பட்டது 2021-11-05 at the வந்தவழி இயந்திரம், (27 அக்டோபர் 2021)
  4. "Kherson mayor refuses to cooperate with collaborators and invaders". Ukrinform. Retrieved 27 April 2022.
  5. Battle of Kherson
  6. Ukraine invasion: Russian forces capture city of Kherson, a strategic gain for Moscow
  7. Russian occupation of Kherson Oblast
  8. (in uk)Dzerkalo Tyzhnia. 3 January 2015. http://dt.ua/UKRAINE/lishe-3-ukrayinciv-hochut-priyednannya-yih-oblasti-do-rosiyi-160641_.html.
  9. "Population Quantity". UkrStat (in உக்ரைனியன்). Archived from the original on 2015-04-17. Retrieved 7 January 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்சன்_மாகாணம்&oldid=4581391" இலிருந்து மீள்விக்கப்பட்டது