உள்ளடக்கத்துக்குச் செல்

தினேப்பர் ஆறு

ஆள்கூறுகள்: 46°30′00″N 32°20′00″E / 46.50000°N 32.33333°E / 46.50000; 32.33333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேப்பர்
Dnieper
உக்ரைன், தினேப்ரோபெத்ரோவ்சுக் மாகாணத்தில் பாயும் தினேப்பர் ஆறு
தினேப்பர் ஆற்றின் வடிகால் நிலம்
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடு(கள்)உருசியா, பெலருஸ், உக்ரைன்
நகரங்கள்தரோகோபுசு, சிமோலென்சுக், மொகிலெவ் நகரம், கீவ், செர்க்காசி, நிப்ரோ நகரம், சப்போரியா நகரம், கெர்சன் நகரம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுவல்தாய் குன்றுகள், உருசியா
 ⁃ ஆள்கூறுகள்55°52′00″N 33°41′00″E / 55.86667°N 33.68333°E / 55.86667; 33.68333
 ⁃ ஏற்றம்220 மீ
முகத்துவாரம்தினேப்பர் கழிமுகம்
 ⁃ அமைவு
உக்ரைன்
 ⁃ ஆள்கூறுகள்
46°30′00″N 32°20′00″E / 46.50000°N 32.33333°E / 46.50000; 32.33333
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்2,201 கிமீ
வடிநில அளவு504,000 சதுரகிமீ
வெளியேற்றம் 
 ⁃ அமைவுகெர்சன் நகரம்
 ⁃ சராசரி1,670 கனமீ/செ

தினேப்பர் (Dnieper, உருசியம்: Днепр, உக்ரைனியன்: Дніпро, பெலருசிய மொழி: Дняпро) ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும். இது உருசியாவின் வல்தாய் குன்றுகளில் உற்பத்தியாகி பெலருஸ், உக்ரைன் வழியாகப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. உக்ரைன், பெலரசு ஆகிய இரு நாடுகளின் மிகப்பெரிய ஆறு இதுவே. ஐரோப்பாவின் நான்காவது பெரிய ஆறு. இதன் நீளம் 2,145 இல் இருந்து 2,201 கிமீ வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[1] இதன் வடிநிலப் பரப்பு 504,000 சதுரகிமீ ஆகும். இவ்வாற்றின் குறுக்கே பல அணைகளும் நீர்மின் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.

புவியியல்

[தொகு]

இவ்வாறு உருசியாவில் 485 கிமீ-உம் பெலரசுவில் 700 கிமீ-உம் உக்ரைனில் 1,095 கிமீ-உம் பயணிக்கிறது. 504,000 சதுர கிமீ வடிநிலத்தில் 289,000 சதுர கிமீ உக்ரைனிலும்,[2] 118,360 சதுர கிமீ பெலரசியாவில் உள்ளது. [3] இது உக்ரைனை கிழக்கு மேற்கு என இரு பாகமாகப் பிரித்துத் தெற்கு நோக்கிப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு உருசியாவின் வட மேற்கிலுள்ள உயர் நிலத்தில் உள்ள வால்டய் மலைகள் என்ற இடத்தில் கடல்மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது [4] அங்கு இது சிறிய ஆறாகவே உள்ளது. 115 கிமீ தொலைவுக்கு இது பெலரசுக்கும் உக்ரைனுக்கும் எல்லையாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Main Geographic Characteristics of the Republic of Belarus. Main characteristics of the largest rivers of Belarus". Land of Ancestors. Data of the Ministry of Natural Resources and Environmental Protection of the Republic of Belarus. 2011. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.
  2. http://www.encyclopediaofukraine.com/display.asp?AddButton=pages\D\N\DnieperRiver.htm
  3. http://landofancestors.com/travel/statistics/geography/237-main-characteristics-of-the-largest-rivers.html
  4. http://www.encyclopediaofukraine.com/display.asp?AddButton=pages\D\N\DnieperRiver.htm

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேப்பர்_ஆறு&oldid=3267681" இலிருந்து மீள்விக்கப்பட்டது