மொகிலெவ் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொகிலெவ் (ஆங்கிலம்: Mogilev) என்பது கிழக்கு பெலாரசில், தினேப்பர் ஆற்றிலிருந்து ,76 கிலோமீட்டர்கள் (47 மைல்கள்) மற்றும் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தின் மற்றும் எல்லையிலிருந்தும் உருசியாவின் பிரையன்சுக் மாகாணத்தின் எல்லையிலிருந்தும் 105 கிலோ மீட்டர் (65 மைல்கள்) தொலைவில் உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 360,918 ஆக இருந்தது. 1956 இல் மதிப்பிடப்பட்ட 106,000 பேராக இருந்தது. இது மொகிலெவ் பிராந்தியத்தின் நிர்வாக மையம் மற்றும் பெலாரசின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

1267 இல் தொடங்கி வரலாற்று ஆதாரங்களில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து, இது லித்துவேனியாவின் கிராண்ட் டச்சியின் ஒரு பகுதியாக இருந்தது, போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் பகுதியின் யூனியன் ஆஃப் லப்ளின் (1569) முதல், இது மொஹைலேவ் என்று அறியப்பட்டது. 16 -17 ஆம் நூற்றாண்டுகளில், நகரம் கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு வர்த்தக பாதைகளின் முக்கிய முனைகளில் ஒன்றாக வளர்ந்தது. 1944 ஆம் ஆண்டில், முற்றிலும் அழிந்த நகரம் செஞ்சிலுவைச் சங்கத்தால் விடுவிக்கப்பட்டு சோவியத் கட்டுப்பாட்டுக்குத் திரும்பியது. மொகிலெவ் அப்போது ஜெர்மன் வீரர்களுக்கான தொழிலாளர் முகாமின் தளமாக இருந்தது. 1991 இல் பெலாரஸ் சுதந்திரம் பெற்றதிலிருந்து, மொகிலேவ் அதன் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

மதம்[தொகு]

1991 ஆம் ஆண்டு மொகிலெவ் இலத்தீன் கத்தோலிக்க மறைமாவட்ட மொகிலேவ்ரோமன் கத்தோலிக்க பேராயர் மின்ஸ்க்-மொஹைலெவ் உடன் இணைக்கும் வரை ஆயரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மொழி[தொகு]

மொகிலேவின் அதிகாரப்பூர்வ மொழி ரஷ்ய மொழியாகும்.

பொருளாதாரம்[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல பெரிய எஃகு ஆலைகளைக் கொண்ட ஒரு பெரிய உலோகவியல் மையம் கட்டப்பட்டது. மேலும், பாரந்தூக்கிகள், தானுந்துகள், உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு இரசாயன ஆலை ஆகியவற்றின் பல முக்கிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. 1950 களின் பதனிடுதல் இந்நகரத்தின் முக்கிய தொழிலாக இருந்தது, மேலும் அது தானியம், தோல், உப்பு, சர்க்கரை, மீன், மர மற்றும் தீக்கல் கண்ணாடி போன்ற தொழில்களின் ஒரு பெரிய வியாபார மையமான இருந்தது: நகரம் தினேப்பர் ஆற்றின் பெரும் துறைமுகப்பட்டினத்தின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. மற்றும் ஒரு விமான நிலையமமும் அமைந்துள்ளது.. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் பெலாரசை ஒரு சுதந்திர நாடாக நிறுவியதிலிருந்து, மொகிலேவ் அந்த நாட்டின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்துறை மையங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நகரமைப்பு[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரப் பகுதி, ரதுனா என பெயரிடப்பட்டது, இது போலந்து-லிதுவேனியன் பொதுநலவாயக் காலத்தில் கட்டப்பட்டது. நகரத்தின் பிரமாண்டமான கோபுரம் பெரும் வடக்குப் போர் மற்றும் பெரும் தேசபக்தி போரின்போது கடுமையான சேதத்தை சந்தித்தது. இது இறுதியில் 1957 இல் இடிக்கப்பட்டு 2008 இல் போருக்கு முந்தைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது. மொகிலேவின் மற்றொரு முக்கியமான அடையாளமாக ஆறு தூண்கள் கொண்ட புனித இசுதான்சுவா தேவாலயம் ஒன்று உள்ளது, இது 1738 மற்றும் 1752 க்கு இடையில் பரோக் கட்டிட பாணியில் கட்டப்பட்டது மற்றும் அதன் ஓவியங்களால் வேறுபடுகிறது.

புனித நிக்கோலசின் மடம் 1668 இன் அற்புதமான தேவாலயத்தையும், அதே போல் ஆயர்களின் அமைவிடம், மணிக்கூண்டு, சுவர்கள் மற்றும் வாயில்களையும் பாதுகாக்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக மாறுவதற்காக தற்போது பரிசீலனையில் உள்ளது.[1] சிறிய அடையாளங்களில் 1780 களில் இருந்து வந்த ஆர்க்கிபிசுகோபல் அரண்மனை மற்றும் நினைவு வளைவு மற்றும் நியோ-மறுமலர்ச்சி மற்றும் உருசிய மறுமலர்ச்சி பாணிகளின் கலவையில் உள்ள மகத்தான திரையரங்கு ஆகியவை அடங்கும். மொகிலேவின் நகர்ப்புறப் பகுதியான பாலிகோவிச்சியில், 350 மீட்டர் உயரமுள்ள தொலைக்கட்ட்சி கோபுரம் உள்ளது, இது பெலாரசின் மிக உயரமான கட்டமைப்புகளில் ஒன்றாகும்.

நிலவியல்[தொகு]

மொகிலெவ் ஒரு சூடான-கோடைகால ஈரப்பதமான கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது (கோப்பன் காலநிலை வகைப்பாடு).

குறிப்புகள்[தொகு]

  1. UNESCO World Heritage Centre (2004-01-30). "St. Nicholas Monastery Complex in the city of Mahilyou – UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிலெவ்_நகரம்&oldid=2980053" இலிருந்து மீள்விக்கப்பட்டது