லிவீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவீவ்
Львів
லிவீவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரத்தின் காட்சி
லிவீவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரத்தின் காட்சி
லிவீவ்-இன் கொடி
கொடி
லிவீவ்-இன் சின்னம்
சின்னம்
Official logo of லிவீவ்
Logo
குறிக்கோளுரை: "Semper fidelis"
எப்போதும் விசுவாசம்
உக்ரைன் வரைபடத்தில் லிவீவ் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் வரைபடத்தில் லிவீவ் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
நாடு உக்ரைன்
மாகாணம் லிவீவ் மாகாணம்
மாவட்டம்லிவீவ் நகராட்சி
நிறுவப்பட்டது1256
மாக்டெபர்கு சட்டம்1353
அரசு
 • மேயர்அன்ட்ரி சதோவி
பரப்பளவு
 • நகரம்182.01 km2 (70.27 sq mi)
ஏற்றம்296 m (971 ft)
மக்கள்தொகை (2010)
 • நகரம்760,000
 • அடர்த்தி4,298/km2 (11,130/sq mi)
 • பெருநகர்1,498,000
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறி79000
தொலைபேசி குறியீடு+380 32(2)
வாகன எண்ணொட்டுBC (2004 முன்னால்: ТА,ТВ,ТН,ТС)
இணையதளம்http://lviv.travel/en/index (English)
http://www.city-adm.lviv.ua (Ukrainian)

லிவீவ் (Lviv) மேற்கு உக்ரைனில் உள்ள லிவீவ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். உக்ரைனின் இன்றைய பண்பாட்டு மையங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள லிவீவ் வரலாற்றிலும் போலிய மற்றும் யூதர்களின் பண்பாட்டு மையமாக இருந்துள்ளது. இரண்டாம் உலகப் போர், பெரும் இன அழிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த 1944-46 ஆண்டின் போலிய இடம்பெயர்வுகள் வரையிலும் போலந்தியர்களும் யூதர்களுமே பெரும்பான்மையினராக இருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலக் கட்டிடங்களும் கற்கள் பதித்த சாலைகளும் உலகப்போரில் தப்பித்து பிந்தைய சோவியத் ஆட்சியிலும் சிதைவுறாது உள்ளது. லிவீவ் பல்கலைக்கழகமும் லிவீவ் பல்தொழில் கழகமும் உயர் கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. உலகத்தரம் வாய்ந்த பண்பாட்டு நிறுவனங்களாக சேர்ந்திசை இசைக்குழுவும் லிவீவ் ஓப்பரா மற்றும் பாலே தியேட்டரும் புகழ்பெற்றுள்ளன. ஓல்டு டவுன் எனப்படும் பண்டைய நகர்ப்பகுதி உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 2006இல் லிவீவ் தனது 750வது ஆண்டுநாளைக் கொண்டாடியது.

யூஈஎஃப்ஏ யூரோ 2012 நடத்தப்படும் நான்கு உக்ரைனிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லிவீவ்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவீவ்&oldid=3602646" இருந்து மீள்விக்கப்பட்டது