உள்ளடக்கத்துக்குச் செல்

செர்னிகிவ் மாகாணம்

ஆள்கூறுகள்: 51°20′N 32°04′E / 51.34°N 32.06°E / 51.34; 32.06
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்னிகிவ் மாகாணம்
Чернігівська область
மாகாணம்
செர்னிகிவிஸ்கா மாகாணம் C[1]
கொடி
கொடி
இலச்சினை
சின்னம்
ஆள்கூறுகள்: 51°20′N 32°04′E / 51.34°N 32.06°E / 51.34; 32.06
நாடு உக்ரைன்
நிறுவப்பட்ட ஆண்டு15 அக்டோபர் 1932
நிர்வாகத் தலைமையிடம்செர்னிகிவ் நகரம்
நகரங்கள்செர்னிகிவ், நிஜின், பிரிலுகி
அரசு
 • ஆளுநர்வியாசஸ்லாவ் சாஸ்[2]
 • சட்டமன்றம்64 இடங்கள்
 • அவைத் தலைவர்இகோர் வோடோவென்கோ
பரப்பளவு
 • மொத்தம்31,865 km2 (12,303 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3-ஆம் இடம்
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்9,76,701
 • அடர்த்தி31/km2 (79/sq mi)
Demographics
 • அலுவல் மொழிஉக்குரேனிய மொழி
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம்)
அஞ்சல் குறியீடு
14-17xxx
பிரதேச குறியீடு+380 46
ஐஎசுஓ 3166 குறியீடுUA-74
வாகனப் பதிவுСВ
மாவட்டங்கள்5
மொத்த நகரங்கள்44
பெரிய நகரங்கள்3
பேரூராட்சிகள்34
கிராமங்கள்1494
FIPS 10-4UP02
இணையதளம்www.chernigivstat.gov.ua
chor.gov.ua

செர்னிகிவ் மாகாணம் (Chernihiv Oblast) உக்ரைன் நாட்டின் நடு வடக்கில், உருசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் செர்னிகிவ் நகரம் ஆகும்.

புவியியல்

[தொகு]

31,900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செர்னிகிவ் மாகாணத்தின் கிழக்கில் கீவ் மாகாணம், கிழக்கில் சுமி மாகாணம், தெற்கில் போல்தாவா மாகாணம், வடமேற்கில் பெலரஸ் நாடும், வடகிழக்கில் உருசியாவும் எல்லைகளாகக் கொண்டது.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]
செர்னிகிவ் மாகாணத்தின் வரைபடம்

சூலை 2020ஆம் ஆண்டு முதல் செர்னிகிவ் மாகாணம் 5 மாவட்டங்கள், 3 பெரிய நகரங்கள் , 41 சிறிய நகரங்கள் , 34 பேரூராட்சிகள் மற்றும் 1494 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2015-ஆம் ஆண்டின் மககள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்னிகிவ் மாகாணத்தின் மக்கள் தொகை 10,55,673 ஆகும். இதன் மக்களில் பெரும்பான்மையாக உக்ரேனியர்களும், சிறுபான்மையாக பெலரசியர்கள் மற்றும் உருசியர்கள் உள்ளனர். கிழக்கு மரபுவழி திருச்சபையினர் பெரும்பான்மையாகவும், கத்தோலிக்கர்கள், சீர்திருதத சபையினர் மற்றும் நாத்திகர்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.

பொருளாதாரம்

[தொகு]

இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் இம்மாகாணத்தின் இயற்கை வளம் ஆகும். அத்துடன் மின்னணு இயந்திரங்கள், பொறியியல் இயந்திரங்கள், புகையிலை பொருட்கள், ஜவுளித் தொழில்கள், பீர் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. Zelensky appoints head of Chernihiv Regional State Administration, Ukrinform (4 August 2021)
  • Kardash, Peter. Ukraine and Ukrainians. Ed. Peter Lockwood. Melbourne: Fortuna Publishers, 1988.
  • (1972) Історіа міст і сіл Української CCP - Чернігівська область (History of Towns and Villages of the Ukrainian SSR - Chernihiv Oblast), Kiev. (in உக்குரேனிய மொழி)
  • Information Card of the Region - Official site of the Cabinet of Ministers of Ukraine
  • Богомолець. О. "Замок-музей Радомисль на Шляху Королів Via Regia". — Київ, 2013

வெளி இணைப்புகள்

[தொகு]
செர்னிகிவ் மாகாணம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்னிகிவ்_மாகாணம்&oldid=3842744" இலிருந்து மீள்விக்கப்பட்டது