நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம்
நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம்
Дніпропетровська область | |
---|---|
மாகாணம் | |
நிப்ரோபெட்ரோவ்ஸ்கா மாகாணம்[1] | |
அடைபெயர்(கள்): Дніпропетровщина (Dnipropetrovshchyna), Січеславщина (Sicheslavshchyna) | |
ஆள்கூறுகள்: 48°23′N 34°43′E / 48.39°N 34.71°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்டது. | 27 பிப்ரவரி 1932 |
தலைநகரம் | நிப்ரோ நகரம் |
நகரங்கள் | நிப்ரோ, கிரிவோய் ரோக், கமியன்ஸ்கே, நிகோபோல் |
அரசு | |
• ஆளுநர் | வாலன்டைன் ரெஸ்னிசென்கோ[2] |
• மாகாணக் குழு | 120 உறுப்பினர்கள் |
• தலைவர் | மைகோலா லுகாஸ்ஹக்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,974 km2 (12,345 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ▼ 31,42,035 |
Demographics | |
• அலுவல் மொழி | உக்ரைனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழகக்த்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 49-53xxx |
[பிரதேச குறியீடு | +380-56 |
வாகனப் பதிவு | AE |
மாவட்டங்கள் | 22 |
நகரங்கள் (மொத்தம்) | 20 |
• மண்டல நகரங்கள் | 18 |
நகர்புற குடியிருப்புகள் | 46 |
கிராமங்கள் | 1369 |
10-4 | UP04 |
இணையதளம் | www.adm.dp.gov.ua www.rada.gov.ua |
நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் (Dnipropetrovsk Oblast), உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் நிப்ரோ நகரம் ஆகும். இது உக்ரைனின் முக்கிய தொழில் துறை மாகாணம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 31,42,035 ஆகும். பரப்பளவில் இம்மாகாணம் உக்ரைன் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் முக்கிய நகரங்கள் நிப்ரோ, கிரிவோய் ரோக், கமியன்ஸ்கே மற்றும் நிகோபோல் ஆகும். தினேப்பர் ஆறு இம்மாகாணத்தின் ஊடாகப் பாய்கிறது.
2019-ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இம்மாகாணத்தின் பெயரை சிசெஸ்லாவ் மாகாணம் எனப்பெயர் மாற்றம் செய்ததது[4]
புவியியல்
[தொகு]31,974 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. தினேப்பர் ஆறு இம்மாகாணத்தின் ஊடாகப் பாய்கிறது. இதன் வடக்கில் [[[போல்தாவா மாகாணம்]], கிழக்கில் தோனெத்ஸ்க் மாகாணம், தெற்கில் சப்போரியா மாகாணம் மற்றும் கெர்சன் மாகாணம் மற்றும் மேற்கில் மைக்கோலைவ் மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் இரும்பு மற்றும் பிற உலோக கனிமங்கள் அதிகம் உள்ளது.
மாகாண நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]இம்மாகாணம் 22 மாவட்டங்களையும், 20 நகரங்களையும், 46 நகர்புற குடியிருப்புகளையும், 1369 கிராமங்களையும் கொண்டது.
மக்கள் தொகை பரம்ப்பல்
[தொகு]இம்மாகாணத்தின் மக்கள் தொகையில் கீழ்கண்டவாறு மக்கள் உள்ளனர்.
- உக்ரேனியர்கள் – 79.3%,
- உருசியர்கள் – 17.6%,
- பெலேரஷ்யர்கள் – 0.8%,
- யூதர்கள் – 0.4%,
- ஆர்மீனியர்கள் – 0.3%,
- அசர்பைஜானியர்கள் – 0.2%,
- மால்டோவினியர்கள் – 0.12%,
- ரோமாணி மக்கள் – 0.11%,
- தாதர்கள் – 0.11%,
- ஜெர்மனியர்கள் – 0.11%,
- பிறர் – 0.95%;
இம்மாகாணத்தில் உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் 47.5%, உக்ரைனிய மரபுவழி கீவ்வியன் திருச்சபையினர் 10.7%, உரோமைக் கத்தோலிக்கர்கள் 1.3%, உக்ரைனிய மரபுவழி தன்னாட்சி திருச்சபையினர் 0.8%, புரோட்டஸ்டண்ட் சபையினர் 32.3% அக உள்ளனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Zelensky appoints Reznichenko as head of Dnipropetrovsk region, Ukrinform (11 December 2020)
- ↑ (in உக்குரேனிய மொழி) The Dnipropetrovsk regional council was headed by Zelensky's compatriot, Ukrayinska Pravda (16 December 2020)
- ↑ "Legal news in Ukraine: Constitutional Court approved renaming of Dnipropetrovsk region, notaries require salary increase, a note of Ukraine to Russia, treaty on friendship with Russia has been expired". Українське право - інформаційно-правовий портал. 8 April 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Dnipropetrovsk Oblast
- Official site of Dnipropetrovsk Oblast Administration (in ஆங்கில மொழி and உக்குரேனிய மொழி)
- Information Card of the Region Cabinet of Ministers of Ukraine (in ஆங்கில மொழி, உக்குரேனிய மொழி, and உருசிய மொழி)
- நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் திறந்த ஆவணத் திட்டத்தில்