தோனெத்ஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Donets'k (Донецьк)
Donetsk (Доне́цк)
Donets'k (Донецьк) Donetsk (Доне́цк)-இன் கொடி
கொடி
Donets'k (Донецьк) Donetsk (Доне́цк)-இன் சின்னம்
சின்னம்
உக்ரைனிய வரைபடத்தில் தோனெத்ஸ்கின் அமைவிடம்.
உக்ரைனிய வரைபடத்தில் தோனெத்ஸ்கின் அமைவிடம்.
Map of Donetsk's city center
Map of Donetsk's city center
நாடு உக்ரைன்
மாகாணம்தோனெத்ஸ்க் மாகாணம்
மாநகராட்சிFlag of Donetsk.svg தோனெத்ஸ்க்
நிறுவப்பட்டது18691
நகரமாக1917
மாவட்டங்கள்
அரசு
 • மேயர்அலெக்சாந்தர் லுகியன்சென்கோ
பரப்பளவு
 • நகரம்358 km2 (138 sq mi)
ஏற்றம்169 m (554 ft)
மக்கள்தொகை (சூலை 1, 2011)
 • நகரம்9,75,959
 • அடர்த்தி2,700/km2 (7,100/sq mi)
 • பெருநகர்2,009,700
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு83000 — 83497
தொலைபேசி குறியீடு+380 622, 623
வாகன உரிமம்АН
சகோதர நகரங்கள்போக்கம், சார்லெரோய், குடைசி, பிட்சுபேர்க், செப்பீல்டு, டரன்டோ, மாஸ்கோ, வினியசு
1 Donetsk was founded in 1869 as Yuzovka.
²The population of the metropolitan area is as of 2004.

தோனெத்ஸ்க் (Donetsk, உக்ரைனியன்: Донецьк; உருசியம்: Доне́цк) உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கல்மியசு ஆற்றின் கரையில் அமைந்துள்ள தோனெத்ஸ்க் நகரம், உக்ரைனின் பொருளியல், தொழில் மற்றும் அறிவியல் மையமாக விளங்குகிறது. பல நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமான திறன்மிகு தொழிலாளர்கள் இந்நகரத்தில் வாழ்கின்றனர்.

இந்நகரம் 1869ஆம் ஆண்டில் வேல்சு வணிகர் ஜான் ஹூயுஸ் தமது இரும்பு உருக்காலை மற்றும் பல நிலக்கரிச் சுரங்கங்களை நிறுவியபோது உருவாகியது. அவரது நினைவால் இதன் பெயர் யுசோவ்கா (Yuzovka, Юзовка) என அழைக்கப்பட்டது ("யூஸ்" என்பது உருசிய அல்லது உக்ரைனிய ஒலிப்பாகும்). சோவியத் ஒன்றியத்தில் இங்கு இரும்பாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. 1924–1931காலகட்டத்தில் இந்த நகருக்கு இசுடாலினோ (Сталино) என்று பெயர் மாற்றப்பட்டது. 1932இல் தோனெத்ஸ்க் வலயத்தின் மையமாக இந்த நகரம் விளங்கியது. இன்றும் இந்த நகரம் உக்ரைனின் நிலக்கரி மற்றும் இரும்பாலைத் தொழிலின் மையமாக விளங்குகிறது.

தோனெத்ஸ்கில் தற்போது (2010) 982,000க்கும் கூடுதலானோர் வாழ்கின்றனர். [1] இதன் பெருநகர் பகுதியில் 1,566,000 வாழ்கின்றனர் (2004). உக்ரைனின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாக தோனெத்ஸ்க் விளங்குகிறது.[2]

இந்த நகரின் செல்லப்பெயராக "மில்லியன் ரோசா நகரம்" உள்ளது.[3]

யூரோ 2012[தொகு]

யூஈஎஃப்ஏ யூரோ 2012 கால்பந்துப் போட்டிகள் நடக்கும் எட்டு நகரங்களில் இது ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Results / General results of the census / Number of cities". 2001 Ukrainian Census. 9 ஜனவரி 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 August 2006 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-11 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தோனெத்ஸ்க்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோனெத்ஸ்க்&oldid=3559797" இருந்து மீள்விக்கப்பட்டது