லுகான்ஸ்கா மாகாணம்

ஆள்கூறுகள்: 48°55′N 39°01′E / 48.92°N 39.02°E / 48.92; 39.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுகான்ஸ்கா மாகாணம்
Луганська область
லுகான்ஸ்கா மாகாணம் [1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): உக்ரைனின் கிழக்கு நுழைவாயில்[2][3] dawn of Ukraine,[4][5][6]
Luhansk in Ukraine (claims hatched).svg
ஆள்கூறுகள்: 48°55′N 39°01′E / 48.92°N 39.02°E / 48.92; 39.02
நாடு உக்ரைன்
நிறுவப்பட்ட நாள்3 சூன் 1938
தலைநகரம்இலுகன்சுக் நகரம்
அரசு
 • ஆளுநர்செர்கி ஹைதை [7]
 • லுகான்ஸ்க் மாகாணச் சட்டமன்றம்124 உறுப்பினர்கள்
 • Chairpersonவலேரிஜ் ஹொலென்கோ[8])
பரப்பளவு
 • மொத்தம்26,684 km2 (10,303 sq mi)
மக்கள்தொகை (2021)[9]
 • மொத்தம்Red Arrow Down.svg 21,21,322
 • தரவரிசை7-வது இடம்
Demographics
 • அலுவல் மொழிஉக்குரேனிய மொழி
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு91-94
வட்டார குறியீடு+380-64
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-09
வாகனப் பதிவுBB
மாவட்டங்கள்18
நகரங்கள் (மொத்தம்)37
• மண்டல நகரங்கள்14
நகர்புற குடியிருப்பு பகுதிகள்109
கிராமங்கள்792
FIPS 10-4UP14
இணையதளம்loga.gov.ua

லுகான்ஸ்கா மாகாணம் (Luhansk Oblast) உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேத்தில் உருசியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் இலுகன்சுக் நகரம் ஆகும். இம்மாகாணத்தை உருசியா ஆதரவு ஆயுதப் போராளிகளின் கைப்பிடியில் இருந்தது. 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, லுகான்ஸ்கா மாகாணத்தை உருசியா அரசு மட்டும் இறையான்மை கொண்ட இலுகன்சுக் மக்கள் குடியரசாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் இதனை தலைநகரமாக சீவிரோடோனெட்ஸ்க் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.[10]

புவியியல்[தொகு]

உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள் தொன்பாஸ் பிராந்தியத்தில் அமைந்த லுகான்ஸ்கா மாகாணம் 26,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. லுகான்ஸ்கா மாகாணம் வடக்கிலிருந்து தெற்காக 250 கிலோ மீட்டர் நீளமும்; கிழக்கிலிருந்து மேற்காக 190 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இம்மாகாணம் உருசியாவுடன் 746 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இம்மாகாணத்தின் வடக்கிலும், கிழக்கிலும் உருசியா நாடும், மேற்கில் கார்கிவ் மாகாணம், தெற்கில் தோனெத்ஸ்க் மாகாணம் எல்லைகளாக கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

லுகான்ஸ்கா மாகாணத்தில் 90% மக்கள் உருசிய மொழி பேசுகின்றனர். 1991-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில், 7016% லுகான்ஸ்கா மாகாண மக்கள், லுகான்ஸ்கா மாகாணம், உருசியாவின் ஆளுமையின் கீழ் இருப்பதை விரும்பினர். [11] லுகான்ஸ்கா மாகாணத்தின் உருசியர்கள் ஆதரவாளர்கள் நடத்திய உள்நாட்டுப் போருக்குப் பின் 83.86% மக்கள் லுகான்ஸ்கா மாகாணம், தன்னாட்சி கொண்ட குடியரசாக இருப்பதை விரும்பினர்.

8 ஏப்ரல் 2014 அன்று கிரிமியாவை உருசியா ஆக்கிரமிப்பு செய்து உருசியாவுடன் இணைத்துக் கொண்டது. அதே நேரத்தில் தொன்பாஸ் பிரதேசத்தில் உருசியாவில் ஆதரவால், இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகள் தோற்றுவிக்கப்பட்டது.2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகளுக்கு உருசியா அங்கீகாரம் வழங்கியது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

லுகான்ஸ்கா மாகாணம் 18 மாவட்டங்களும், 37 நகரங்களும், 109 நகர்புற குடியிருப்பு பகுதிகளும், 792 கிராமங்களும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

லுகான்ஸ்கா மாகாணத்தில் உருசிய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 39.1%, உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 58% உள்ளனர். 2001-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 68.8% மக்கள் தங்களை உருசியர்கள் என்றும், 30% மக்கள் தம்மை உக்ரைனியர்கள் என பதிவு செய்துள்ளனர்.

பொருளாதாரம்[தொகு]

இம்மாகாணத்தில் நிலக்கரி சுரங்கங்கள், கனரக இயந்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், உலோகத் தொழிற்சாலைகள், வேதியல், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 6 October 2020. 
  2. Oda, UA: LG, 2007, 5 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. Umoloda, Kyiv, UA.
  4. Oda, UA: LG, 1930, 24 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  5. "Territory", 70 years, UA: LG, 14 March 2008 [1977], 24 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 17 September 2008 அன்று பார்க்கப்பட்டது.
  6. "70 years", Calendar, UA: LG, 11 April 2008, 24 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 17 September 2008 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Zelensky explains move to change Luhansk region's governor". UNIAN. 28 October 2019. 8 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
  8. Владимир Николаевич ПРИСТЮК [Vladimir nikolaevich Pristyuk] (ரஷியன்), Luhansk Oblast Council, 24 April 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ua2021estimate என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. "In Severodonetsk, Petro Poroshenko presented Luhansk RSA Head Hennadiy Moskal". President of Ukraine, official website. 18 March 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  11. Referendum%20in%20the%20Soviet%20Union www.csce.gov

வெள் இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுகான்ஸ்கா_மாகாணம்&oldid=3431456" இருந்து மீள்விக்கப்பட்டது