உருசியக் குடியரசு
Jump to navigation
Jump to search
உருசியக் குடியரசு Российская республика Rossiyskaya respublika | ||||||||
இடைக்கால அரசு குடியரசு (அரசு)(15 மார்ச்சு – 14 செப்டம்பர் 1917) (14 செப்டம்பர் – 7 நவம்பர் 1917) | ||||||||
| ||||||||
| ||||||||
நாட்டுப்பண் Rabochaya Marselyeza தொழிலாளிகளின் தேசியகீதம் | ||||||||
1917இல் உருசிய இடைக்கால அரசின் ஆட்சிப் பகுதி. செருமானியப் பேரரசிடம் இழந்த சில மேற்குப் பகுதிகளைத் தவிர பெரும்பான்மையும் உருசியப் பேரரசின் ஆட்சிப் பகுதியாகும்; 1867இல் அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விற்கப்பட்டது.
| ||||||||
தலைநகரம் | பெட்ரோகிராடு (தற்போது சென் பீட்டர்ஸ்பேர்க்) | |||||||
மொழி(கள்) | உருசிய மொழி | |||||||
அரசாங்கம் | உருசிய இடைக்கால அரசு | |||||||
உருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர் | ||||||||
- | 15 மார்ச்சு – 21 சூலை 1917 | ஜார்ஜி இலோவ் | ||||||
- | 21 சூலை – 7 நவம்பர் 1917 | அலெக்சாண்டர் கெரென்சுகி | ||||||
வரலாற்றுக் காலம் | முதலாம் உலகப் போர் | |||||||
- | பெப்ரவரிப் புரட்சி | 15 மார்ச்சு 1917 | ||||||
- | குடியரசாக அறிவிக்கப்பட்டது | 14 செப்டம்பர் | ||||||
- | அக்டோபர் புரட்சி | 7 நவம்பர் 1917 | ||||||
நாணயம் | ரூபிள் | |||||||
| ||||||||
தற்போதைய பகுதிகள் | ||||||||
Warning: Value specified for "continent" does not comply |
உருசியக் குடியரசு (Russian Republic, உருசியம்: Российская республика, tr. Rossiyskaya respublika, IPA: [rɐˈsʲijskəjə rʲɪsˈpublʲɪkə]) பேரரசர் திக்கோலசு II 15 மார்ச்சு [யூ.நா. 2 மார்ச்சு] 1917 அன்று தமது முடியாட்சியை துறந்தபிறகு முன்னாள் உருசியப் பேரரசின் பகுதிகளை குறைந்த காலத்திற்கு சட்டப்படி, ஆட்சி செய்த அரசியல் அமைப்பாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தக் குடியரசு அக்டோபர் புரட்சியால் 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 அன்று உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசால் அகற்றப்பட்டது. அலுவல்முறைப்படி, குடியரசின் அரசாக உருசிய இடைக்கால அரசு இருந்தபோதிலும் நடைமுறைப்படி அரசுக் கட்டுப்பாடு இடைக்கால அரசிற்கும் பெட்ரோகிராடு சோவியத்திற்கும் இடையே பகிரப்பட்டது.