ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு
.
[தொகு]ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். இது உலகிலேயே, பாதுகாப்பு தொடர்பான பெரிய அமைப்பு. ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற 1975 ஆம் ஆண்டு கருத்தரங்கில், ஐரோப்பிய பாதுகாப்பு குறித்த உரையாடலே இதன் தொடக்கத்திற்கான மூலம். மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம், நேர்மையான தேர்தல்கள், ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்டவை இதன் முக்கியக் குறிக்கோள்கள். இதில் தலைமையகப் பணியாளர்களாக 550 பேரும், களப் பணியாளர்களாக 2300 பேரும் பணியாற்றுகின்றனர்..[1] இதில் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த 57 உறுப்பினர் நாடுகள் உள்ளன. பனிப்போர் காலத்தில் இது தொடங்கப்பட்டது.
வரலாறு
[தொகு]ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கருத்தரங்களில் இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 1950 களில் இது குறித்து பேசப்பட்டாலும், பனிப்போரின் காரணமாக தடைபட்டன. 1972 ஆம் ஆண்டில் ஹெல்சின்கியில் நடைபெற்ற மாநாட்டில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் உந்துதலின் பேரில் இந்த மாநாடு நடைபெற்றது. ஐரோப்பிய மண்டலத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமுகமான உறவினைத் தொடர, பல கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பெரும்பாலனவை, பெல்கிறேட், மத்ரித், வியன்னா நகர்களில் நிகழ்ந்தன.
மொழிகள்
[தொகு]இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக ஆறு மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியம், ரசியன்
பங்கேற்கும் நாடுகள்
[தொகு]நாடு | இணைந்த நாள் | ஹெல்சிங்கி சட்டத்தை ஏற்றவை | பாரிசு சட்டத்தை ஏற்றவை |
---|---|---|---|
அல்பேனியா | 19 சூன் 1991 | 16 செப்டம்பர் 1991 | 17 செப்டம்பர் 1991 |
அந்தோரா | 25 ஏப்ரல் 1996 | 10 நவம்பர் 1999 | 17 பிப்ரவரி 1998 |
ஆர்மீனியா | 30 சனவரி 1992 | 8 சூலை 1992 | 17 ஏப்ரல் 1992 |
ஆஸ்திரியா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
அசர்பைஜான் | 30 சனவரி 1992 | 8 சூலை 1992 | 20 டிசம்பர் 1993 |
பெலருஸ் | 30 சனவரி 1992 | 26 பிப்ரவரி 1992 | 8 ஏப்ரல் 1993 |
பெல்ஜியம் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
Bosnia and Herzegovina | 30 ஏப்ரல் 1992 | 8 சூலை 1992 | |
பல்கேரியா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
கனடா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
குரோவாசியா | 24 மார்ச்சு 1992 | 8 சூலை 1992 | |
சைப்பிரசு | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
செக் குடியரசு | 1 சனவரி 1993 | ||
டென்மார்க் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
எசுத்தோனியா | 10 செப்டம்பர் 1991 | 14 அக்டோபர் 1991 | 6 டிசம்பர் 1991 |
பின்லாந்து | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
பிரான்சு | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
சியார்சியா | 24 மார்ச்சு 1992 | 8 சூலை 1992 | 21 சனவரி 1994 |
செருமனி | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
கிரேக்க நாடு | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
அங்கேரி | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
ஐசுலாந்து | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
அயர்லாந்து | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
இத்தாலி | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
கசக்கஸ்தான் | 30 சனவரி 1992 | 8 சூலை 1992 | 23 செப்டம்பர் 1992 |
கிர்கிசுத்தான் | 30 சனவரி 1992 | 8 சூலை 1992 | 3 சூன் 1994 |
லாத்வியா | 10 செப்டம்பர் 1991 | 14 அக்டோபர் 1991 | 6 டிசம்பர் 1991 |
லீக்கின்ஸ்டைன் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
லித்துவேனியா | 10 செப்டம்பர் 1991 | 14 அக்டோபர் 1991 | 6 டிசம்பர் 1991 |
லக்சம்பர்க் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
மாக்கடோனியக் குடியரசு [2] | 12 அக்டோபர் 1995 | ||
மால்ட்டா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
மல்தோவா | 30 சனவரி 1992 | 26 பிப்ரவரி 1992 | 29 சனவரி 1993 |
மொனாகோ | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
மங்கோலியா | 21 நவம்பர் 2012[3] | ||
மொண்டெனேகுரோ | 22 சூன் 2006 | 1 செப்டம்பர் 2006 | |
நெதர்லாந்து | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
நோர்வே | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
போலந்து | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
போர்த்துகல் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
உருமேனியா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
உருசியா (as USSR) | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
சான் மரீனோ | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
செர்பியா (as FR Yugoslavia) | 10 நவம்பர் 2000 | 27 நவம்பர் 2000 | 27 நவம்பர் 2000 |
சிலவாக்கியா | 1 சனவரி 1993 | ||
சுலோவீனியா | 24 மார்ச்சு 1992 | 8 சூலை 1992 | 8 மார்ச்சு 1993 |
எசுப்பானியா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
சுவீடன் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
சுவிட்சர்லாந்து | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
தஜிகிஸ்தான் | 30 சனவரி 1992 | 26 பிப்ரவரி 1992 | |
துருக்கி | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
துருக்மெனிஸ்தான் | 30 சனவரி 1992 | 8 சூலை 1992 | |
உக்ரைன் | 30 சனவரி 1992 | 26 பிப்ரவரி 1992 | 16 சூன் 1992 |
ஐக்கிய இராச்சியம் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
ஐக்கிய அமெரிக்கா | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
உஸ்பெகிஸ்தான் | 30 சனவரி 1992 | 26 பிப்ரவரி 1992 | 27 அக்டோபர் 1993 |
வத்திக்கான் நகர் | 25 சூன் 1973 | 1 ஆகஸ்டு 1975 | 21 நவம்பர் 1990 |
நிதி நிலவரம்
[தொகு]1993 ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு ஒதுக்கும் நிதி யூரோவில் தரப்பட்டுள்ளது.
|
|
ஒத்துழைக்கும் நாடுகள்
[தொகு]
மெடிட்டரானியன் பகுதி நாடுகள் |
|
அமைப்புமுறை
[தொகு]கூட்டங்களில் நாடுகளின் தலைவர் பங்கேற்பார். கூட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிகழ்வதில்லை. கடைசிக் கூட்டம், 2010 ஆம் ஆண்டும் டிசம்பர் 1,2 நாட்களில் நடைபெற்றது. இந்த அமைப்பில், மேலான அதிகாரம் பெற்ற குழு, அமைச்சரவைக் குழு ஆகும். இது ஆண்டுக்கொரு முறை கூடும். தூதரக அளவில், நிரந்தர உறுப்பினர்கள் வாரமொருமுறை வியன்னாவில் கூடுவர். மாநாட்டுக் கூட்டத்தை நடத்தும் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரே இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.
இவற்றுடன், பாதுகாப்புக்கான குழுவும் உள்ளது. இது இராணுவ நடவடிக்கைகள் குறித்தவற்றை மேற்பார்வையிடுகிறது.[5] இந்த அமைப்பின் தலைமையகம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. மேலும், கோபனாவன், ஜெனீவா, டென் ஹாக், பிராகா, வார்சா ஆகிய நகரங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.
ஐரோப்பாவில் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற கூட்டம், அரசியல், பாதுகாப்பு, பொருளாதார, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றும். இந்த அமைப்பின் உறுப்பினரின் ஒட்டுமொத்தக் குரலாக இந்த குழு செயல்படுவதால், இதன் தீர்மானங்களுக்கு ஏற்ப செயல்படுமாறு உறுப்பினர் நாடுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மக்களாட்சிக்கும் மனித உரிமைக்குமான அலுவலகம் இதன் மிகப் பழைய உறுப்பினர். இது போலந்து நாட்டின் வார்சா நகரில் உள்ளது.
தேர்தல்களை கண்காணித்தல், மனித உரிமைகளைப் பேணுதல், வேறுபாட்டு உணர்வை தவிர்த்தல், மக்களாட்சி முறையில் வளர்ச்சி காணுதல், சட்டத்தின்படி நடத்தல் ஆகியன இதன் கொள்கைகள். இது ஏறத்தாழ 150 தேர்தல்களை கண்காணித்திருக்கிறது. 35,000 பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த அமைப்பின் ஊடகச் சுதந்திரப் பிரிவு, உறுப்பினர் நாடுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதா எனக் கண்காணிக்கிறது.
தலைவர்
[தொகு]தலைவரின் பொறுப்பில் கீழ்க்கண்டவை அடங்கும்.
- அமைப்பின் துணை நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு
- அமைப்பை முன்னிறுத்தல்
- சண்டை, சச்சரவு ஆகியவற்றை மேற்பார்வையிடுதல்
தலைவர் பதவிக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பார்.
ஐக்கிய நாடுகள் சபையுடனான உறவு
[தொகு]ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின்படி, இந்த அமைப்பு தன்னைத் தானே மண்டல அமைப்பாகக் கருதுகிறது.[6]. இது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள்|ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளராக]]வும் உள்ளது.[7] தலைவர் பொறுப்பில் உள்ளவர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு உரை சுருக்கத்தை வழங்குவார்.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ OSCE Funding and Budget
- ↑ Referred to by the OSCE as the "Former Yugoslav Republic of Macedonia"
- ↑ Asia partner for co-operation 2004-2012.
- ↑ List of Partners for Co-Operation; Mediterranean and Asian States
- ↑ "Vienna Document" (PDF). Archived from the original (PDF) on 2005-04-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.
- ↑ "Secretariat - External Cooperation". OSCE.
- ↑ ஐக்கிய நாடுகள் General Assembly Session 48 Resolution 5.[http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/RES/48/5 Observer status for the Conference on Security and Cooperation in Europe in the General Assembly A/RES/48/5] 22 October 1993. Retrieved 2008-10-01.
- ↑ ஐக்கிய நாடுகள் Security Council Verbatim Report 5982. S/PV/5982 page 2. Mr. Stubb Finland 26 September 2008. Retrieved 2008-10-01.
மேலும் பார்க்கவும்
[தொகு]இணைப்புகள்
[தொகு]ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- அமைப்பைப் பற்றிய கையேடு பரணிடப்பட்டது 2012-11-01 at the வந்தவழி இயந்திரம்