வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
Володимир Зеленський
Volodymyr Zelensky, 31 March 2019.jpg
மார்ச் 2019 இல் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் தேர்தல் வெற்றியாளர்
பதவியேற்பு
3 சூன் 2019 இல்
முன்னவர் பெட்ரோ போரேலாசெங்கோ
தனிநபர் தகவல்
பிறப்பு வோலோடிமிர் ஒலெக்சான்ட்ரோவிச் ஜெலன்ஸ்கி
25 சனவரி 1978 (1978-01-25) (அகவை 43)
கிரைவி ரி, உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் யூனியன்
அரசியல் கட்சி மக்களின் சேவகன் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
ஒலேனா கியாஸ்கோ (தி. 2003)
பிள்ளைகள் 2
கல்வி கிவ் தேசிய பொருளாதார பல்கலைக்கழகம், கிரைவி ரி பொருளாதாரக் கல்வி நிறுவனம்
Notable works சுவதி
மக்களின் சேவகன்
ஆஃபீசு ரொமான்சு அவர் டைம்
பெரிய நகரத்தில் காதல்
செவ்ஸ்கி எதிர் நெப்போலியன்
கையொப்பம்

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) (பிறப்பு 25 சனவரி 1978) என்பவர் உக்ரைனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். இவர் ஒரு நடிகரும், திரைக்கதாசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் நடந்த உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் குவர்டால் 95 என்ற பெயருடைய தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'மக்களின் சேவகன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உக்ரைனின் அதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.[1] இந்த நிகழ்ச்சியானது 2015 முதல் 2019 முடிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மார்ச் 2018 இல் குவர்டால் 95 நிறுவனத்தின் பணியாளர்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயராலேயே ஒரு கட்சி தொடங்கப்பட்டது.[2][3] இவர் 73.22% வாக்குகள் பெற்று உக்ரைன் நாட்டின் தற்போதைய அதிபரான பெட்ரோ போரேலாசெங்கோ என்பவரை தோற்கடித்துள்ளார்.[4]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Ukraine election: Comedian Zelensky 'wins presidency by landslide'". BBC News. 21 April 2019. https://www.bbc.com/news/world-europe-48007487. பார்த்த நாள்: 21 April 2019. 
  2. (உக்ரைனிய மொழி) Lawyer Zelensky has registered a new political party "Servant of the people", UNIAN (3 December 2017)
  3. (உக்ரைனிய மொழி) The boundary of a joke. How Zelensky prepares for the election பரணிடப்பட்டது 8 பெப்ரவரி 2019 at the வந்தவழி இயந்திரம், Ukrayinska Pravda (25 October 2018)
  4. (in Ukrainian) "Central Election Commission of Ukraine – Ukrainian Presidential Election 2019 (run-off)". மூல முகவரியிலிருந்து 24 April 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 April 2019.