தொல்லுயிர் எச்சம்
(புதைபடிவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |



தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்).
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும்.
