உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சொல் பற்றிய உரையாடல்

[தொகு]

ஆங்கில விக்கியிலிருந்து கட்டுரையை வெட்டி ஒட்டி, முதல் பட்தியான வரைவிலக்கணத்தை மட்டும் உள்ளபடியே மொழிபெயர்த்துள்ளேன். இருப்பினும் தமிழில் இச்சொல் எல்லா இடங்களிலும் science என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படவில்லையாதலால், இதை வேறுவிதமாக எழுத வேண்டியிருக்கலாம். -- Sundar \பேச்சு 12:58, 22 பெப்ரவரி 2006 (UTC)

விஞ்ஞானம் என்பதற்கு என்ன குறை?, அதுதானே சரியான சொல். அறிவியல் என்பது பூரணமற்ற சொல். science என்பதை அறிவியல் என்று பெயர்ப்பது அவ்வள்வு சரியாக எனக்கு படவில்லை. விஞ்ஞானம் வடமொழி என்று சிலர் கூறலாம், ஆனால் அறிவியல் சரியான பொருள் தருவதாக இல்லை. மேலும் அறிவியல் அறிவை பாவிப்பதையே குறிக்கிறது, அறிவை பாவிப்பது விஞ்ஞானம் ஆகாது. சரியான தமிழ் சொல்லுள்ள போது அதை பயன்படுத்தியாக வேண்டும், இல்லாத போது வடமொழி சொற்களை பாவிப்பதில் தவறில்லை. - சுரேன்
அறிவியல் என்பது ஒரு கல்வித்துறையைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில், science என்ற ஆங்கிலச் சொல்லைப் போல் விஞ்ஞானம் என்ற சொல் அறிந்து கொள்ளும் முறைமை என்ற பொருளைத் தருமானால், அதை இக்கட்டுரையின் தலைப்பாகப் பயன்படுத்துவதில் எனக்கு தயக்கம் இல்லை. இதை யாராவது உறுதிப்படுத்துங்கள். அவ்வாறு நாம் மாற்றிவிட்டால், அறிவியல் என்ற தலைப்பில் அந்த கல்வித்துறையைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதி விஞ்ஞானம் கட்டுரைக்கு இணைப்பு தரலாம். மேலும், இதன் சரியான பொருளைத் தரும் வேறு ஏதாவது சொல் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு மொழிச்சொல் பல பொருள் தரும்பொழுது, அதற்கு இணையாக வேறு மொழியில் ஒரே சொல் இருக்க வேண்டுமென்பதில்லை. முதல் சொல்லின் வெவ்வேறு பொருட்களுக்கு இணையாக பல சொற்கள் இரண்டாம் மொழியில் இருக்கலாம். -- Sundar \பேச்சு 06:17, 23 பெப்ரவரி 2006 (UTC)

ஆங்கிலமொழியிலுள்ள இணையச் சொற்பிறப்பியல் அகராதியிலிருந்து science என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தையும், மதராஸ் பல்கலைக்கழக அகராதியில் விஞ்ஞானம் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தையும் இங்கே வெட்டி ஒட்டியுள்ளேன்.

science
c.1300, "knowledge (of something) acquired by study," also "a particular branch of knowledge," from O.Fr. science, from L. scientia "knowledge," from sciens (gen. scientis), prp. of scire "to know," probably originally "to separate one thing from another, to distinguish," related to scindere "to cut, divide," from PIE base *skei- (cf. Gk. skhizein "to split, rend, cleave," Goth. skaidan, O.E. sceadan "to divide, separate;" see shed (v.)). Modern sense of "non-arts studies" is attested from 1678. The distinction is commonly understood as between theoretical truth (Gk. episteme) and methods for effecting practical results (tekhne), but science sometimes is used for practical applications and art for applications of skill. Main modern (restricted) sense of "body of regular or methodical observations or propositions ... concerning any subject or speculation" is attested from 1725; in 17c.-18c. this concept commonly was called philosophy. To blind (someone) with science "confuse by the use of big words or complex explanations" is attested from 1937, originally noted as a phrase from Australia and New Zealand.


விஞ்ஞானம் (p. 3650) [ viññāṉam ] n viññāṉam . < Pkt. viññā nam < vi-jñāna. 1. True knowledge; உண்மை யறிவு. மேதகு விஞ்ஞானத்தான் மெய்ம்மையாம் சுபாவந் தானே (ஞானவா. தாம. 3). 2. (Buddh.) The faculty of consciousness, as a constituent element of Being, one of pañca-kantam, q.v.; பஞ்சகந்தத்துள் ஒன்றாய் ஏனைய நான்கு கந்தங்களின் உண்மை நிலையை அறியும் அறிவு. (மணி. 3, 33.) 3. (Šaiva.) Šiva's Jñāṉa Šakti; சிவபிரானது ஞான சத்தி. (அஷ்டப். இரத்தின.)

ஆங்கில அகராதிப்படி science என்பது to know, to distinguish போன்றவற்றைத்தான் அடிப்படையில் பொருளாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அண்மையில்தான் அதற்கு இன்றைய பொருளையும் ஏற்றியிருக்கிறார்கள். நிற்க விஞ்ஞானம் என்பதும் இன்றைய science இன் அடிப்படைக் கோட்பாடுகளின் பொருள் விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. உண்மையறிவு என்று இங்கே குறிப்பிடப்படுவது மெய்யியல் (theology) சார்ந்தது. இன்றைய விஞ்ஞானத்தின் யதார்த்தத்துக்கு ஒவ்வாதது. எனவே விஞ்ஞானம் என்பது இன்றைய science என்பதற்குச் சரியான பொருள் என்பது பொருந்தாக் கூற்று.

என்னைப் பொறுத்தவரை இரண்டு சொற்களுமே science என்ற துறையின் சரியான பொருளைத் தருகின்றன என்று கூற முடியாவிட்டாலும், science என்ற சொல்லை ஆங்கிலத்தில் புதிய பொருளிலும் பயன்படுத்திக்கொள்வது போல விஞ்ஞானம் அல்லது அறிவியல் ஆகிய சொற்களையும் புதிய பயன்படுத்துவது தவறாகாது. இவ்விரு சொற்களையுமே முறையே இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பயன்படுத்திவருவதும் நாம் அறிந்ததே. எனினும் விக்கிபீடியா போன்ற பொதுவான முயற்சிகளில் கூடிய அளவுக்குப் பலரும் புரிந்து கொள்ளக்கூடியதாகவும், நல்ல தமிழாகவும் உள்ள சொற்களையே பயன்படுத்துவது நல்லது இந்த அடிப்படையில் தான் நான் கல்வி கற்றபோது விஞ்ஞானம் என்றே கற்றிருந்தும் தற்போது அறிவியல் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன். வழிமாற்றிகளைப் (Redirects) பயன்படுத்துவது மூலமும், கட்டுரைகளில், முடிந்த அளவுக்கு மாற்றுச் சொற்களையும் குறிப்பிட்டு விளக்குவது மூலமும், எல்லாத் தரப்பினரும் புரிந்து கொள்ளும்படி செய்யமுடியும். Mayooranathan 07:11, 23 பெப்ரவரி 2006 (UTC)

விளக்கத்திற்கு நன்றி, மயூரநாதன். உங்கள் கருத்தை ஏற்கிறேன். பண்பாட்டுக் காரணங்களினால் அறிவு சார்ந்த கருத்துருக்களின் தொகை ஆங்கிலத்திலும், இந்தியா , இலங்கை போன்ற கிழக்கத்திய நாடுகளின் மொழிகளிலும் வெவ்வேறாக இருக்கிறது என்று எண்ணுகிறேன். அதனால், இருக்கும் கருத்துருக்களின் பொருள் எல்லைகள் பயன்பாட்டில் நீட்டித்துக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு நீட்டிக்கப்படுபவற்றை நாமும் ஏற்றுக் கொள்வோம். அதே நேரத்தில் மாற்றுச் சொற்கள் புனையப்பட்டால் அவற்றையும் குறிப்பிடுவோம். இவ்வகையில் ஒரு பொருளுக்கான பல சொற்களையும் நாம் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. -- Sundar \பேச்சு 07:21, 23 பெப்ரவரி 2006 (UTC)
மயூரநாதன் நீங்கள் தரும் பொருள் பொதுவாக மெய்ஞானத்தையே சுட்டி நிற்கின்றது. மேலும் சென்னை அகரமுதலி 50 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டதை நீங்கள் மறக்ககூடாது. என்னை பொறுத்தவரை அறிவியல் என்ற சொல்லைவிட விஞ்ஞானம் தான் சாலப்பொருத்தமாகவுள்ளது. மேலும் விஞ்ஞானம் சுத்தமான வடமொழி சொல்லல்ல, ஞானம் என்பது தமிழே. ஆகவே அதை பயன்படுத்துவதே நன்று. பிராணவாயுனை oxygen என்று எழுதும் போது science விஞ்ஞானம் என்று எழுதுவதில் தவறில்லை. - சுரேன்


முதலில் அறிவியலை விஞ்ஞானம், மெஞ்ஞானம் என்ற இரண்டு மார்க்கங்களையும் கொண்ட ஒரு பொது சொல்லாகத்தான் நானும் பார்த்தேன். ஆனால், தமிழகத்தில் அறிவியலை விஞ்ஞானம் என்ற பதத்திலேயே பயன்படுத்துவதாக அறிகின்றேன். த.வி. ஒரு பொதுவான தளம், தமிழகத்தின் பொது பயன்பாட்டை கருதி அறிவியலை பயன்படுத்துவதே சரியென்பது எனது தனிப்பட்ட கருத்து. --Natkeeran 14:38, 23 பெப்ரவரி 2006 (UTC)

அறிவியல் என்பது ஒரு கல்வித்துறையைக் குறிப்பதாகவே பொருள் தருகிறது.
எது அதிக பயன்பாட்டில் உள்ளது என்பது இங்கு முக்கியம் இல்லை (அல்லது தமிழ்நாட்டு வழக்கோ, இலங்கை வழக்கோ என்பது முக்கியம் இல்லை). எது சரியானது என்பதே இங்கு முக்கியம். இது ஒரு கலைக்களஞ்சியம், ஆகவே வழக்குகள் போன்றவை பார்பது உசிதமல்ல. எது சரியானது என்பதே முக்கியம். அதிகமாக பயன்படுத்தப்படும் சொல்லெனின் அதை அடைப்புக்குள் கொடுக்கலாம், மேலும் அதை மீள்வழிப்படுத்தி விடலாம். - சுரேன்

சுரேன், விஞ்ஞானம் தான் சரி என்று தொடந்து சொல்லிக்கொண்டிருப்பதனால் அதுவே சரியாய் விடாது. சான்றுகள் தேவை. மெய்ஞானத்துக்காய் அமைந்த சொல்லை இன்றைய science க்கும் ஏற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கருத்துமுதல்வாதத்தின் (spiritualism) அடிப்படையிலான விஞ்ஞானம் என்பதைப் பொருள்முதல்வாத (materialism) அடிப்படையிலமைந்த science க்கு முரண்பாடாக ஏற்றிச் சொல்வது சரியென்று சொல்வது எப்படி? பொதுவான அறிவு என்பதை அடியாகக் கொண்ட சொல்லான அறிவியல் என்பதையும் science க்கு ஏறியிருக்கிறோம். ஆனால் அங்கே முரண்பாடு கிடையாது. science என்பதன் பொருளும் "knowledge (of something) acquired by study" என்றுதான் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவியல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே உசிதமானது. Mayooranathan 09:04, 24 பெப்ரவரி 2006 (UTC)

உங்களுக்கு எத்தகய ஆதாரம் வேண்டும்?? விஞ்ஞானம் எப்போதும் மெய்ஞானத்தை குறிப்பிட பயன்படவில்லை, சைவசமய பாடநூலை பார்த்தீர்களானால் இது உங்களுக்கு புரியும். விஞ்ஞானம் மெய்ஞானத்துக்கு முற்றிலும் மாறானது. இயல் என்றால் என்ன என்று உங்ககுக்கு தேரியுமா? science ஒரு இயலா?? விஞ்ஞானத்தால் spiritualism குறிப்பிடப்படவில்லை, மெய்ஞானம் தான் spiritualism ஈடானது. சென்னை அகரமுதலியில் ஈழம் ஒரு சிங்கள சொல்லேன உள்ளது, அது சரியேன்று எற்கின்றீர்களா? இது போல பல தவறுகள் அதில் உள்ளன. - Suren

குறிப்பு

[தொகு]

அறிவியல் என்பது பட்டறிவு, ஆய்வறிவு மற்றும் இயற்கைக் கோட்பாடு அடிப்படையில் அறிவைப் பெறும் முறை மற்றும் கல்வித் துறையைக் குறிக்கும் சொல்லாகும். இம்முறையில் அறிவின் அடிப்படைக் கூறு கோட்பாடு ஆகும். வருவதுரைக்கும் அல்லது இயலுரைக்கும் கருதுகோள்களை கோட்பாடுகள் என்கிறோம். மனிதர்களின் கூட்டறிவைக் குறிக்கவும் அறிவியல் என்ற சொல் பயன்படுகிறது.

பொதுவாக அறிவியல் எனும் சொல், 'பொது அறிவியல்' என்று பொருள்பட, பொதுப்படையாக பயன்படுத்தப் படுகிறது.

துறைகள்

[தொகு]

அறிவியல் என்னும் சொல் அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் ஆய்ந்து அதுபற்றிய உண்மைகளை முறைப்படி கண்டு நிறுவும் ஒரு பெரும் இயல் (துறை, கலை). ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று அறிவது அறிவியல்.

அறிவியலில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. முதலாவதாக உள்ள துறையிலே மக்கள் மற்றும் விலங்கின குமுகாயங்கள் (சமுதாயங்கள்) பற்றிய ஆய்வுக்கண்டுபிடிப்புகளும் இவை பற்றி நிறுவப்பட்ட கொள்கைகளும் அடங்கும். எடுத்துக்காட்டாக வரலாறு, உளவியல், மாந்தர் வாழ்வியல் முறைகள் போன்ற உட்துறைகள் இதில் அடங்கும். இந்த முதற்பிரிவு அறிவியலை இளகிய-எளிய அறிவியல் துறை (ஆங்கிலத்தில் soft science) என்றும் சொல்வதுண்டு. இரண்டாவது பெரும் பிரிவை கடும் வரம்புகள் உள்ள வலுவான அறிவியல் துறை (hard science) என்றும் சொல்வது வழக்கம். இந்த இரண்டாம் பிரிவில் இயற்கையில் உள்ள எல்லா உயிருள்ள உயிரில்லா பொருள்களின் இயக்கங்களும், இயைபுகளும் அடங்கும். இதற்கு இயற்கை அறிவியல் என்று பெயர். எடுத்துக்காட்டாக இயங்கியல் (இயற்பியல் என்பது தவறான சொல்), இயைபியல் (வேதியல்), உயிரியல் முதலிய உட்துறைகளைச் சொல்லலாம். இந்த இரண்டாம் பெரும் பிரிவான இயற்கை அறிவியலில் கணிதம் பன்முக வலுவோடு பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவியல்&oldid=4137059" இலிருந்து மீள்விக்கப்பட்டது