திறந்த பாடத்திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வால்டர் லீவின் MIT திறந்த பாடத்திட்டமொன்றில் வழங்கிய விரிவுரை

பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படும்பொழுது அவை திறந்த பாடத்திட்டங்கள் எனப்படும். அறிவியல் அனைவருக்கும் தடைகள் இன்றி கிடைப்பதே மனித மேன்பாட்டுக்கு உதவும் என்ற கோட்பாட்டின் செயல்பாட்டு வெளிப்பாடே திறந்த பாடத்திட்டங்கள். திறந்த பாடத்திட்டங்களின் முதன்மை எடுத்துக்காட்டு மாசற்சூசஸ் தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம் ஆகும். அதன் முன்மாதிரியை பின்பற்றி யப்பான், சீனா, மற்றும் பல நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடங்களை திறந்த பாடத்திட்டங்களாக வழங்கிவருகின்றன.

திறந்த பாடத்திட்டங்கள் மூலம் பாடங்களுக்குரிய தகவல்கள், பயிற்சிகள் தொகுக்கப்பட்டு பகிரப்படுகின்றன. ஆசிரியர்களின் உரைகளும் ("lectures") தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

பயனர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் தரப்பட்ட வசதிகளை பயன்படுத்தலாம், ஆனால் பரீட்சையோ, சான்றிதழ்களோ, ஆசிரியர் பயனர் தொடர்பாடலோ தற்சமயம் திறந்த பாடத்திட்டங்கள் மூலம் வழங்கப்படுவதில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]