மருத்துவப் படிமவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வயிற்றுத் தமனி விரிவடைதலின் ஓர் கணித்த குறுக்குவெட்டுப் படிமம்

மருத்துவப் படிமவியல் (Medical imaging) ஒருவருக்கு நோயிருப்பதை அறிந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், நோய்த்தன்மை குறித்து மதிப்பிடவும் மற்றும் மருத்துவ அறிவியலுக்காகவும் மனித உடலை (அல்லது பாகங்களையும் செயல்பாடுகளையும்) படிமங்களாக படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தையும் செயல்முறைகளையும் குறித்ததாகும். உடற்கூற்றியல் மற்றும் உடலியக்கவியல் கல்விக்காகவும் இந்த நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உடலிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்களின் அல்லது திசுக்களின் படிமங்களும் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டாலும் அவை மருத்துவப் படிமவியலின் அங்கமாக அறியப்படுவதில்லை; மாறாக நோயியலின் கூற்றாக குறிப்பிடப்படுகின்றன.

இந்தத் துறை உயிரியல் படிமவியலின் அங்கமாக உள்ளது; ஊடுகதிரியல், அணுசக்தி மருத்துவம், உள்நோக்கியியல், மருத்து வெப்ப வரைவி, மருத்துவ ஒளிப்படம் மற்றும் நுண்நோக்கி|நுண்நோக்கியியல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

படிமம் உருவாக்காத ஆனால் தரவுகளை வரைபடமாகத் தரவல்ல அளவைகளும் பதியும் தொழில்நுட்பங்களும், எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி, காந்த மூளை வரைவி, இதய மின்துடிப்புப் பதிவி போன்றவையும் மருத்துவப் படிமவியலின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன.

உலகளவில் 2010 ஆண்டு வரை 5 பில்லியன் மருத்துவப் படிம ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 2006ஆம் ஆண்டில் மொத்த கதிர் வீச்சுக்கு வெளிபடுத்தியமையில் 50%க்கும் கூடுதலாக மருத்துவ படிமவியலால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மருத்துவ உலகில் "பார்க்கவியலா ஒளி" மருத்துவப் படிமவியல் ஊடுகதிரியல் என்றும் நோயறி படிமவியல் என்றும் கூறப்படுகிறது. இதனை ஆராய்ந்தறியும் (சில நேரங்களில் படிமத்தை எடுக்கும்) மருத்துவர் கதிரியலாளர் என்று அழைக்கப்படுகிறார். எண்ணிம ஒளிதம் அல்லது ஒளிப்படங்களை உள்ளிட்ட கண்ணுக்குப் புலனாகும் ஒளி மருத்துவப் படிமவியல் காயங்களுக்கான சிகிட்சையிலும் தோல் மருத்துவம்|தோல் மருத்துவத்திலும் பயனாகிறது.

மருத்துவப் படிமவியலின் தொழில்நுட்ப கூறுகளையும் எவ்வாறு படிமங்களை எடுப்பது என்பதையும் குறித்த துறை நோயறி கதிர் வரைவியல் எனப்படுகிறது. கதிர் வரைவாளர் அல்லது கதிரியல் தொழில்நுட்பவியலாளர் பொதுவாக நோயறியும் தரத்துடனான படிமங்களை எடுப்பதற்கு பொறுப்பானவராவார். சிலநேரங்களில் கதிரியலாளர்களும் ஊடுகதிரியல் செயல்முறைகளை மேற்கொள்வதுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Roobottom CA, Mitchell G, Morgan-Hughes G (November 2010). "Radiation-reduction strategies in cardiac computed tomographic angiography". Clin Radiol 65 (11): 859–67. doi:10.1016/j.crad.2010.04.021. பப்மெட் 20933639. 
  2. "Medical Radiation Exposure Of The U.S. Population Greatly Increased Since The Early 1980s".

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவப்_படிமவியல்&oldid=2050596" இருந்து மீள்விக்கப்பட்டது