உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ) என்பது Public Library of Science ( PLoS) என்பதின் தமிழாக்கம். அறிவியலுக்கான பொது நூலகம் என்னும் நிறுவனம் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இது அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்குமான அறிவியல் ஆய்விதழ்களும், பிற அறிவியல் கருத்தடக்கங்களும் கொண்ட இணையவழியான நூலகம் ஒன்றை யாரும் இலவசமாகப் படித்துப் பயன்படுத்துமாறு திட்டமிட்டு நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் ஆய்விதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை யாரும் பணம் ஏதும் கட்டாமல் இலவசமாகப் படித்துப் பயன்படுத்தவும் படியெடுக்கவும் (copy), தேவைக்கு ஏற்றார்போல மாற்றவும் உரிமைகொண்ட திறந்த கருத்தடக்கம், கட்டற்ற அணுக்கம் கொண்டவைகளாகும். 2006 ஆம் ஆண்டுக் கணக்குப்படி அ.பொ.நூ வெளியிடும் அறிவியல் மருத்துவ இயல் ஆய்விதழ்கள் பின் வருவனவாகும்: அ.பொ.நூ உயிரியல் (PLoS Biology), அ.பொ.நூ மருத்துவம் (PLoS Medicine), அ.பொ.நூ கணிப்பீட்டு உயிரியல் (PLoS Computational Biology), அ.பொ.நூ மரபணுவியல் (PLoS Genetics ), அ.பொ.நூ நோயூட்டிகள் (PLoS Pathogens). 2006 ல் இருந்து தனிச்சிறப்பான அ.பொ.நூ ஒன்று PLoS ONE என்னும் ஒரு ஆய்விதழும் வெளியிடுகின்றது.

வரலாறு

[தொகு]

அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ) 2001 ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர்களை நோக்கி இணையத்தில் வெளிப்படையாக துவங்கி வெளியிடப்பட்ட வேட்பு மணு ஒன்றில் இருந்து உருவானது. இந்த வேட்பு மணுவின் முக்கிய கருத்துக்கள் என்னவென்றால், செப்டம்பர் 2001 இல் இருந்து ஒருவர் வெளியிடும் ஆய்வுக் கட்டுரை முழுவதையும் யாருக்கும், எந்தவிதமான தடைகளும் விதிக்காமல் இலவசமாக உடனேயோ அல்லது சில மாத இடைவெளிக்குப் பின்னரோ வழங்கா விட்டால் ஆய்வுக்கட்டுரையை அத்தகைய ஆய்விதழ்களுக்கு யாரும் அனுப்பாதீர்கள் என்று கேட்கப்பட்டார்கள். இவ் இணைய வேட்பு மணுவை ஸ்டான்ஃவோர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேட்ரிக் பிரௌன் (Patrick Brown) என்னும் உயிர்வேதியல் அறிஞரும், பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தையும், லாரன்ஸ் பெர்க்கிலி நாடளாவிய ஆய்வகத்தையும் சேர்ந்த கணிப்பீட்டு உயிரியல் அறிஞர் மைக்கேல் ஐசன் (Michael Eisen) என்பவரும் சேர்ந்து முன் வைத்தனர். தற்பொழுது உயிரியல்-மருத்துவ நடுவகம் (BioMed Central (BMC) என்று அழைக்கப்படும் குழுவில் அடங்கிய பல அய்விதழ்கள் உடனேயே படிக்கக்கூடிய திறந்த அணுக்கம் கொண்டவையாகும். சில ஆய்விதழ்கள் 6 மாத இடைவெளிக்கோ அல்லது அதைவிட குறுகிய இடைவெளிக்கோ பின்னர் திறந்த அணுக்கம் கொண்டவைகளாக இயங்கி வருகின்றது. Proceedings of the National Academy of Sciences. போன்ற ஆய்விதழும் இப்படிப்பட்ட இடைவெளிக்குப் பின்னர் யாரும் இலவசமாக அணுகி படிக்கவல்லதாகும்.

அறிவியலுக்கான பொது நூலக (அ.பொ.நூ) ஆய்விதழ்களும் அவற்றின் வலைத்தளங்களும் (PLoS journals and their websites)

[தொகு]

(எல்லா ISBN -களும் மற்றும் EISSN -களும், மின் மதிப்புகளுக்காகும் )

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Media from PLOS journals
என்பதில் ஊடகங்கள் உள்ளன.