தடுப்பு மருந்தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இளம்பிள்ளை வாத நோயிலிருந்து பாதுகாப்பதற்காக குழந்தைக்கு வாய்மூலம், குறிப்பிட்ட தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது

தடுப்பு மருந்தேற்றம் எனப்படுவது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை தூண்டி, அதன்மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயை தடுப்பதற்காக உடலினுள் பிறபொருளெதிரியாக்கி ஒன்றை செலுத்தி நிருவகிக்கும் முறையாகும். அதாவது சில தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நோய் வருவதற்கு முன்னராகவே தடுப்பு மருந்து அல்லது பிறபொருளெதிரியாக்கி பதார்த்தத்தை பயன்படுத்தும் சிகிச்சை முறையாகும். பல தொற்றுநோய்களுக்கான சிகிச்சை முறையில் தடுப்பு மருந்தேற்றமானது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இங்கு பயன்படுத்தப்படும் மருந்து, உயிருள்ள, ஆனால் பலவீனமாக்கப்பட்ட சில நுண்ணுயிரியாகவோ, அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது நுண்ணுயிரியில் இருந்து பெறப்படும் நச்சுப்பொருள் பதார்த்தமாகவோ இருக்கும். இந்த தடுப்பு மருந்தேற்றமானது ஊசிமூலமாக உடலினுள் செலுத்தப்படுவதாகவோ அல்லது வாய்மூலம் பெறப்படும் மருந்தாகவோ அமையும்.

பல நோய்க்காரணிகளால் ஏற்படுத்தப்படும் தொற்றுநோய்களின் தாக்கம் இந்த தடுப்பூசி முறையால் கட்டுப்படுத்தப்படும். இன்ஃபுளுவென்சா,[1] கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்[2], சின்னம்மை[3] போன்ற பல தீ நுண்மத்தால் ஏற்படும் தொற்றுநோய்கள் இப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

1796 இல் எட்வார்ட் ஜென்னர் என்பவரால் இந்த 'தடுப்பூசி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் லூயி பாஸ்ச்சர் தனது நுண்ணுயிரியல் ஆய்வுகளில் தொடர்ந்து இந்த பதத்தை பயன்படுத்தி வந்தார். முதன் முதலில் பசுக்களில் தீவீரமில்லாத ஒரு வகை அம்மை நோயை ஏற்படுத்தும் ஒரு தீ நுண்மத்தில் இருந்து பெறப்பட்ட தடுப்பு மருந்து மனிதரில் தீவீர தொற்றும் தன்மையும், இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானதுமான சின்னம்மை நோயைக் கட்டுப்படுத்த பயன்பட்டது. இங்கே உடலினுள் பாதிப்பை விளைவிக்கவல்ல ஒரு பொருள் செலுத்தப்படுவதனால் இந்த மருத்துவ முறை தொடர்பில் பல சர்ச்சைகள், விவாதங்களும் நடைபெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fiore AE, Bridges CB, Cox NJ (2009). "Seasonal influenza vaccines". Curr. Top. Microbiol. Immunol. 333: 43–82. doi:10.1007/978-3-540-92165-3_3. பப்மெட் 19768400. 
  2. Chang Y, Brewer NT, Rinas AC, Schmitt K, Smith JS (July 2009). "Evaluating the impact of human papillomavirus vaccines". Vaccine 27 (32): 4355–62. doi:10.1016/j.vaccine.2009.03.008. பப்மெட் 19515467. 
  3. Liesegang TJ (August 2009). "Varicella zoster virus vaccines: effective, but concerns linger". Can. J. Ophthalmol. 44 (4): 379–84. doi:10.3129/i09-126. பப்மெட் 19606157. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடுப்பு_மருந்தேற்றம்&oldid=2221519" இருந்து மீள்விக்கப்பட்டது